பாலிவுட்டில் தொடரும் நெப்போடிசம்.. தென்னிந்திய நடிகைகளை டீலில் விட்ட ஃபிலிம்ஃபேர் விருதுகள்?
மும்பை: 69-ஆவது பிலிம் ஃபேர் விருதுகள் நிகழ்ச்சி சமீபத்தில் பாலிவுட்டில் கோலாகலமாக நடைபெற்றது. கடந்த ஆண்டு சில முன்னணி தென்னிந்திய நடிகைகள் பாலிவுட்டுக்கு படையெடுத்து பெரிய படங்களில் ஹீரோயினாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளனர். ஆனால் அவர்கள், விருது விழாவுக்கான பட்டியலில் நாமினேஷனில் கூட இடம் பெறாதது ரசிகர்கள் மத்தியில் விவாதத்தை கிளப்பியுள்ளது.
கடந்த ஆண்டு பாலிவுட் திரை உலகத்தை தூக்கி நிறுத்திய ஷாருக்கானுக்கு ஒரு விருது கூட கொடுக்கப்படவில்லை. ஆனால் ரன்பீர் கபூர் நடித்து டிசம்பர் மாதம் வெளியான அனிமல் திரைப்படத்திற்கு ஆறு விருதுகள் வழங்கப்பட்டன. அதிலிருந்தே இந்த விருதுகள் சரியான முறையில் கொடுக்கப்படவில்லை என ஷாருக்கான் ரசிகர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில் இன்னொரு சர்ச்சையும் கிளம்பியுள்ளது.

பாலிவுட்டுக்கு படையெடுத்த நடிகைகள்: கடந்த சில ஆண்டுகளாகவே ஹிந்தி சினிமாவை நோக்கி தென்னிந்திய நடிகைகள் அதிக அளவில் படையெடுத்து வருகின்றனர். சமந்தா, ராஷ்மிகா மந்தனா, நயன்தாரா உள்ளிட்ட பலர் ஹிந்தி படங்களில் முன்னணி நடிகையாக வலம் வருகின்றனர். அதிலும் கடந்த ஆண்டு நயன்தாரா மற்றும் ராஷ்மிகா மந்தனா அதிக வசூல் ஈட்டிய டாப் ஹீரோக்களின் படங்களில் நடித்திருந்தனர்.
ஷாருக்கான் படத்தில் நயன்தாரா: அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடித்து வெளியான ஜவான் திரைப்படம்தான் கடந்த ஆண்டு அதிக வசூல் ஈட்டிய இந்திய படமாகவே தேர்வு செய்யப்பட்டது. ஆனால், சமீபத்தில் நடைபெற்ற பிலிம் ஃபேர் விருது விழாவில் அந்த படத்தில் ஹீரோயினாக நடித்த நயன்தாராவின் பெயர் சிறந்த ஹீரோயினுக்கான நாமினேஷன் பட்டியலில் கூட இடம் பெறவில்லை என்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அனிமல் ராஷ்மிகா மந்தனா: பிலிம் ஃபேர் விருது விழாவில் 6 விருதுகளை சிறந்த நடிகர் உள்பட ஆறு விருதுகளை அனிமல் திரைப்படம் வென்றது. ஆனால், சிறந்த நடிகைக்கான பரிந்துரைப் பட்டியலில் ராஷ்மிகா மந்தனா பெயரும் இடம்பெறவில்லை. தென்னிந்திய நடிகைகளை டார்கெட் செய்து டீலில் விட்டு விட்டனரா? பாலிவுட்டில் நெப்போடிசம் இன்னமும் குறையாமல் உச்சத்தில் இருக்கிறதே என்கிற கேள்விகள் எழுந்துள்ளன.
ஆலியா பட்டுக்கு விருது: சிறந்த நடிகைக்கான விருது ரன்பீர் கபூர் மனைவி ஆலியா பட்டுக்கு கொடுக்கப்பட்டது. பதான் படத்திற்காக தீபிகா படுகோன், தேங்க்யூ ஃபார் கம்மிங் படத்திற்காக பூமி பெட்னேகர், சத்யம் பிரேம் கி கதா படத்திற்காக கியாரா அத்வானி, மிஸ்டர் சட்டர்ஜி vs நார்வே படத்திற்காக ராணி முகர்ஜி மற்றும் டங்கி படத்திற்காக டாப்ஸி பன்னு உள்ளிட்டோர் நாமினேட் செய்யப்பட்டு இருந்தனர். நயன்தாரா மற்றும் ராஷ்மிகா மந்தனா இருவரும் தென்னிந்திய நடிகைகள் என்பதாலே பரிந்துரை பட்டியலில் கூட அவர்களது பெயர்களை தவிர்த்து விட்டார்களா? என்கிற சர்ச்சை வெடித்துள்ளது. ஆலியா பட்டை விட நயன்தாரா மற்றும் ராஷ்மிகா மந்தனா நடிப்பு சிறப்பாகவே இருந்தது என இந்தி ரசிகர்களே கமெண்ட் போட்டு வருகின்றனர். அதன் காரணமாகவே ராஷ்மிகா மந்தனா பிலிம்ஃபேர் விருது விழாவில் பங்கேற்காமல் புறக்கணித்து விட்டாரா? என்றும் கேள்விகளை ரசிகர்கள் எழுப்பி உள்ளனர்.


Click it and Unblock the Notifications











