நடிகை த்ரிஷாவுக்கு விரைவில் திருமணம்... தொழிலதிபர் வருண் மணியனை மணக்கிறார்?

By Shankar

பிரபல நடிகை திரிஷாவுக்கு விரைவில் திருமணம் நடக்கிறது. தொழில் அதிபர் வருண் மணியனை அவர் மணக்கவிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

மாடல் அழகியாக பிரபலமாகி, பின்னர் 'லேசா லேசா' படத்தில் பிரபல இயக்குநர் ப்ரியதர்ஷனால் சினிமாவில் அறிமுகப்படுத்தப்பட்டவர் த்ரிஷா.

Finally actress Trisha going to marry Varun Maniyan

கில்லி, சாமி, ஆதி, திருப்பாச்சி, ஜீ, கிரீடம், மவுனம் பேசியதே, உனக்கும் எனக்கும், என்றென்றும் புன்னகை உள்பட பல படங்களில் கதாநாயகியாக நடித்துவிட்டார்.

தெலுங்கிலும் முன்னணி கதாநாயகியாக திகழ்கிறார். கன்னடத்திலும் கால்பதித்துள்ளார். தமிழ் மற்றும் தெலுங்கில் 3 படங்களில் நடித்து வருகிறார். அஜீத் நடிக்கும் என்னை அறிந்தால் படமும் அவற்றில் ஒன்று.

பத்தாண்டுகள் தொடர்ந்து படங்களில் நடித்து வரும் இவரை பல நடிகர்களுடன் இணைத்து வதந்தி பரவியது. அடிக்கடி அவரது திருமணம் குறித்த செய்திகள் வருவதும் பின் மறுப்பு வெளியாவதும் வாடிக்கையாக இருந்து வந்தது.

இந்த நிலையில், த்ரிஷாவுக்கு விரைவில் திருமணம் செய்ய அவரது தாயார் திட்டமிட்டுள்ளார். மணமகனையும் முடிவு செய்துவிட்டார்களாம்.

மணமகன் பெயர், வருண் மணியன். சென்னையை சேர்ந்த தொழில் அதிபர். ரேடியன் மீடியா என்ற பெயரில் படங்களும் தயாரித்துள்ளார். வாயை மூடிப் பேசவும், காவியத் தலைவன் போன்றவை இவரது தயாரிப்புதான்.

த்ரிஷாவும் வருண் மணியனும் ஒரு விருந்தில் சந்தித்து பேசியதாகவும், அதைத் தொடர்ந்து இருவருக்கும் திருமணம் செய்யத் திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. திருமணத் தேதி போன்ற விவரங்கள் விரைவில் வெளியாகும் என்று தெரிகிறது.

இதுகுறித்து மேலும் தகவலறிய த்ரிஷா அம்மாவிடம் தொடர்பு கொண்டோம். அவர் தொடர்பு எல்லையில் இல்லை என பதில் வந்தது.

நம்பகமாக தகவல்களின் அடிப்படையில் உறுதி செய்து இந்த செய்தியை வெளியிடுகிறோம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X