பிபாஷா பாசுவை முந்திய தீபிகா படுகோனே
பாலிவுட்டின் முன்னணி நடிகை தீபிகா படுகோனோ, அர்ஜூன் கபூர், நஸ்ருதீன்ஷா, டிம்பிள் கபாடியா ஆகியோர் நடிப்பில் கடந்த வெள்ளியன்று வெளியான ஃபைண்டிங் ஃபேன்னி (Finding Fanny) என்ற திரைப்படம் பாலிவுட் திரையுலகில் முதல்முறையாக, வெளியான முதல் நாளே ரூ.5 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த திரைப்படம் இந்தியா முழுவதும் 900 தியேட்டர்களில் ஆங்கிலம் மற்றும் இந்தி ஆகிய இருமொழிகளிலும் வெளியாகியுள்ளது.
இந்த திரைப்படம் இந்தியாவில் ரூ.5.1 கோடியும், வட அமெரிக்காவில் ரூ.48 லட்சமும், பிரிட்டனில் ரூ.29 லட்சமும், ஆஸ்திரேலியாவில் ரூ.6.5 லட்சமும், நியூசிலாந்தில் ரூ.3.7 லட்சமும் வசூல் செய்துள்ளது.

இதே நாளில் வெளியான பிபாஷா பாசுவின் கிரியேட்சர் திரைப்படம் முதல் நாளில் ரூ.3.4 கோடி மட்டுமே வசூல் செய்துள்ளது. பிபாசா பாசுவின் படத்தின் வசூலை, தீபிகா படுகோனேவின் படம் வசூல் முந்தி விட்டது.
தினேஷ் விஜான் தயாரித்துள்ள ஃபைண்டிங் ஃபேன்னி திரைப்படத்தை ஹோமி அடாஜ்ஜானிய இயக்கியுள்ளார். அனில் மேத்தாவில் ஒளிப்பதிவில் உருவான இந்த திரைப்படத்தை ஸ்ரீகர் பிரசாத் இந்தியிலும்,நிக் மோரெ என்பவர் ஆங்கிலத்திலும் எடிட்டிங் செய்துள்ளார்.
இந்த படத்தின் மொத்த பட்ஜெட்டே ரூ.15 கோடி என்ற நிலையில் முதல் நாளே ரூ.6 கோடி வசூல் பெற்றுவிட்டதால் மிகப்பெரிய வெற்றியாக அமையும் என கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications











