twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    சர்ச்சை கருத்து.. பிக்பாஸ் பிரபலத்தின் மீது பாய்ந்தது வழக்கு.. எல்லாமே அந்த டிவி ஷோவால் தானாம்!

    |

    ஹைதராபாத்: தமிழில் எட்டுத்திக்கும் மதயானை படத்தில் நாயகியாக நடித்துள்ள ஸ்ரீமுகி மீது போலீசார் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்துள்ளது பரபரப்பை கிளப்பி இருக்கிறது.

    பிரபல டிவி தொகுப்பாளினியான ஸ்ரீமுகி, தெலுங்கு பிக்பாஸ் சீசன் 3ல் ரன்னர் அப்பாக வெற்றி பெற்றவர்.

    கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்னதாக இவர், தொகுத்து வழங்கிய டிவி நிகழ்ச்சியில், ஒரு சமூகத்தினர் மீது சர்ச்சை கருத்தை இவர் கூறியதாக தற்போது வழக்கு பதிவு செய்யப்பட்டு இருக்கிறது.

    வில்லாதி வில்லனாக கலக்கிய சூர்யா.. '24' படம் வந்து 4 வருஷமாச்சு.. கொண்டாடும் ரசிகர்கள்!வில்லாதி வில்லனாக கலக்கிய சூர்யா.. '24' படம் வந்து 4 வருஷமாச்சு.. கொண்டாடும் ரசிகர்கள்!

    டோலிவுட்

    டோலிவுட்

    கடந்த 2012ம் ஆண்டு டோலிவுட்டில் வெளியான ஜூலாயி படத்தில் ராஜி எனும் கதாபாத்திரத்தின் மூலம் சினிமா உலகுக்கு அறிமுகமானார் ஸ்ரீமுகி. அந்த படத்தைத் தொடர்ந்து லைஃப் இஸ் பியூட்டிஃபுல், பிரேமா இஷ்க் காதல், சந்திரிகா, ஆந்திரா பொறி, நேனு சைலஜா, ஜென்டில்மேன் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.

    டிவி தொகுப்பாளினி

    டிவி தொகுப்பாளினி

    பிரபல டிவி தொகுப்பாளினியான ஸ்ரீமுகி ஈ டிவியில் ஒளிபரப்பான அதுர்ஸ், மா டிவியில் ஒளிபரப்பான சூப்பர் சிங்கர் 9 சீசன், ஜெமினி டிவியில் கடந்த 2018ம் ஆண்டு ஒளிபரப்பான ஜூலா கட்டாக்கா ஜீ தெலுங்கில் வெளியான காமெடி நைட்ஸ், சூப்பர் மாம் என பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி உள்ளார்.

    தெலுங்கு பிக்பாஸ்

    தெலுங்கு பிக்பாஸ்

    கடந்த ஆண்டு ஸ்டார் மா தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் 3வது சீசனில் கலந்து கொண்ட நடிகை ஸ்ரீமுகிக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் உருவாகினர். வின்னராக இவர் தான் வெற்றி பெறுவார் என பலரும் கருதிய நிலையில், கடைசி வரை பிக்பாஸ் வீட்டில் இருந்து, ரன்னர் அப்பாக வெற்றி பெற்றார் ஸ்ரீமுகி.

    எஃப்.ஐ.ஆர்

    எஃப்.ஐ.ஆர்

    இந்நிலையில், வித்யாநகரை சேர்ந்த வெங்கடராமா ஷர்மா என்பவர், நடிகை ஸ்ரீமுகி மீது, பிராமண சமுதாயத்திற்கு எதிராக பேசியதாக அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளார். கடந்த 2018ம் ஆண்டு ஒளிபரப்பான ஜூலாகட்டாக்கா ஷோவில் தொகுப்பாளினி ஸ்ரீமுகி அந்த சமுதாயத்தினரை இழிவாக பேசியதாக அந்த புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    தெரியலை

    தெரியலை

    இந்த வழக்கை பதிவு செய்துள்ள பஞ்சாரா ஹில்ஸின் ஏ.சி.பி ஸ்ரீனிவாசராவ், வழக்கு குறித்தும், அவர் சொன்ன வீடியோ க்ளிப் குறித்தும் விசாரணை நடைபெற்று வருவதாக தெரிவித்தார். இந்த எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டதை அடுத்து, இதுகுறித்த கேள்விக்கு நடிகை ஸ்ரீமுகி தனக்கு அதுபற்றி ஏதும் நினைவில்லை என்றார்.

    தயார்

    தயார்

    மேலும், 2 ஆண்டுகளுக்கு முன்னதாக ஒளிபரப்பான நிகழ்ச்சிக்கு ஏன் இப்போது வழக்கு பதிவு செய்திருக்கின்றனர் என தெரியவில்லை. அது ஒரு காமெடி நிகழ்ச்சி, அப்படியே தான் யார் மனதையோ, எந்தவொரு சமுதாயத்தையோ தவறுதலாக விமர்சித்து இருப்பது தெரியவந்தால், நிச்சயம் மன்னிப்பு கேட்கவும் தயார் என ஸ்ரீமுகி கூறியுள்ளார்.

    Recommended Video

    4 படங்களின் part-2 | காத்திருந்த Sequel படங்கள் Ready | Thirukumaran
    லாக்டவுன் போரிங்

    லாக்டவுன் போரிங்

    சமீபத்தில், துல்கர் சல்மான், கல்யாணி பிரியதர்ஷினி நடிப்பில் வெளியான வாரணே அவஷ்யமுண்ட் திரைப்படத்தில் பிரபாகரன் என்கிற பெயரை நாய்க்கு வைத்தது சர்ச்சையை உண்டாக்கியது. அதுகுறித்து, பேசிய இயக்குநர் இது ஒரு லாக்டவுன் போரிங் சம்பவம் எனக் கூறினார். இந்நிலையில், கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்னதாக ஒளிபரப்பான நிகழ்ச்சி குறித்து இப்போது விவாதிப்பதும், வழக்கு தொடர்வதும் லாக்டவுன் போரிங் தான் என ஸ்ரீமுகியின் ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

    English summary
    Popular Telugu TV anchor Sreemukhi found herself in a legal tangle as an FIR was registered against her in connection with a two-year-old comedy skit.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X