உச்சகட்ட மகிழ்ச்சியில் ரைசா வில்சன்.. எஃப்ஐஆர் என்னுடைய வாழ்க்கையில் முக்கியமான படம்!
சென்னை: வேலையில்லா பட்டதாரி 2ல் சிறிய கதாபாத்திரத்தில் நடித்து சினிமாவில் அறிமுகமானவர் நடிகை ரைசா வில்சன்
அதைத் தொடர்ந்து பியார் பிரேமா காதல் என்ற படத்தில் நடித்து ரசிகர்களின் மனதில் நெருக்கமான இடம் பிடித்தார்
இப்பொழுது விஷ்ணு விஷால் ஹீரோவாக நடித்து தயாரித்திருக்கும் எஃப்ஐஆர் படத்தில் கதாநாயகியாக நடித்துள்ள ரைசா வில்சன் இது என்னுடைய வாழ்க்கையில் மிக முக்கியமான படம் என கூறியுள்ளார்.

சிறிய கதாபாத்திரத்தில்
தனுஷின் வேலையில்லா பட்டதாரி வெற்றிபெற்ற நிலையில் அதைத்தொடர்ந்து விலையில்லா பட்டதாரி 2 வெளியானது. இந்த படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் கஜோலுக்கு பிஏவாக நடிகை ரைசா வில்சன் நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதைத்தொடர்ந்து பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு ரசிகர்களின் மனதில் இடம் பிடித்த ரைசா வில்சன் தனது க்யூட்டான பேச்சின் மூலம் பிக்பாஸில் தனி போட்டியாளராக தெரிந்தார். இந்த நிலையில் மிக சிறப்பாக விளையாடி இறுதி சுற்று வரை சென்ற வெளியேற்றப்பட்டார்.

முழுக்க ரொமான்டிக் படமாக
பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருக்கும் போதே ரைசா வில்சன் மற்றும் ஹரிஷ் கல்யாண் ஜோடி மிகப் பிரபலமானது இந்த நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியை விட்டு வெளியில் வந்த உடனேயே ஹரிஷ் கல்யாண், ரைசா வில்சன் ஜோடி இணைந்து பியார் பிரேமா காதல் என்ற படத்தில் ஜோடியாக நடித்தனர் முழுக்க முழுக்க ரொமான்டிக் திரைப்படமாக வெளியான பியார் பிரேமா காதல் படத்தை இளம் இயக்குனர் இளன் இயக்கியிருந்தார். யுவன் சங்கர் ராஜா இசையில் இப்படத்தின் பாடல்கள் அனைத்தும் மிகப் பெரிய ஹிட் அடித்தது மேலும் இந்த படத்தை யுவன் சங்கர் ராஜா தயாரித்தும் இருந்தார்.

எஃப்ஐஆர்
பியார் பிரேமா காதல் என்ற மிகப்பெரிய வெற்றியை கொடுத்த பிறகு ரைசாவுக்கு அடுத்தடுத்து படங்களில் ஒப்பந்தம் ஆனாலும் எதுவும் சரியாக கைகொடுக்கவில்லை. இந்த நிலையில் இப்பொழுது இயக்குனர் மனு ஆனந்த் இயக்கத்தில் விஷ்ணு விஷால் ஹீரோவாக நடிக்கும் எஃப்ஐஆர் என்ற படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார்.
Recommended Video

உச்சகட்ட மகிழ்ச்சியில் நடிகை ரைசா வில்சன்
நடிகர் விஷ்ணு விஷால் தேர்ந்தெடுக்கும் நடிக்கும் திரைப்படங்கள் என்றாலே சவாலான படங்களாகத் தான் இருக்கும் ராட்சசன் வெற்றியை தொடர்ந்து விஷ்ணு விஷால் வித்தியாசமான ரோலில் எஃப்ஐஆர் படத்தில் நடித்துள்ளார். மேலும் இந்த படத்தை விஷ்ணு விஷால் தனது சொந்த தயாரிப்பில் தயாரித்தும் உள்ளார். விறுவிறுப்பான திரில்லர் கதை களத்தில் தீவிரவாதத்தை பற்றி கூறும் இப்படத்தில் ரைசா மூன்று கதாநாயகிகளில் ஒருவராக நடித்துள்ளார். வரும் பிப்ரவரி 11ம் தேதி எஃப்ஐஆர் திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில் அதன் ப்ரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று கொண்டுள்ளது. இதனால் உச்சகட்ட மகிழ்ச்சியில் உள்ள நிலையில் ரைசா எஃப்ஐஆர் தன்னுடைய வாழ்க்கையில் மிக முக்கியமான படம் என கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











