ரசிகர்களிடம் பத்திக்கிச்சு.. ஃபயர் பட நடிகையின் மாடர்ன் போட்டோஷுட்!

சென்னை: சீரியல்களில் தழையத் தழைய புடவை கட்டி குடும்ப குத்துவிளக்காக வலம் வந்த நடிகை சாந்தினி தமிழரசன் தற்போது வித்தியாசமான கதைகளை தேர்வு செய்து அடுத்தடுத்த படத்தில் நடித்து வருகிறார். அண்மையில் இவர் நடிப்பில் வெளியான ஃபயர் திரைப்படம் நல்ல வசூலை அள்ளியது. தற்போது சாந்தினி இன்ஸ்டாகிராமில் ரசிகர்களை குஷிப்படுத்த அட்டகாசமான போட்டோவை ஷேர் செய்துள்ளார்.

சென்னையில் பிறந்து வளர்ந்த நடிகை சாந்தினி தமிழரசன், சினிமா மீது இருந்த ஆர்வத்தால், விசுவல் கம்யூனிகேஷனில் பட்டம் பெற்றார். கே பாக்யராஜ் இயக்கிய அவரது மகன் சாந்தனு நடித்த சித்து பிளஸ் 2 திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து சினிமாவில் அறிமுகம் ஆனார். ஆனால், அந்த திரைப்படம் சித்து +2 எதிர்பார்த்த வெற்றியை பெற்றுத்தராததால், சில ஆண்டுகள் படவாய்ப்பு இல்லாமல் இருந்தார். இதையடுத்து, நான் ராஜாவாக போகிறேன் படத்தில் நடித்திருந்தார். அந்த படமும் பெருசாக பேசும்படி இல்லாததால், டோலிவுட்டுக்கு சென்ற சாந்தினிக்கு தெலுங்கு திரையுலகம் வாய்ப்பு கொடுத்ததால், தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் நடித்தார்.

நடிகை சாந்தினி தமிழரசன்: என்னத்தான் தெலுங்கு சினிமாவில் வாய்ப்பு வந்தாலும், தமிழில் பெயர் சொல்லும் அளவிற்கு ஒரு படத்தில் நடித்து விடவேண்டும் என்ற ஆசையில், தமிழில் பட வாய்ப்பை தேடி அலைந்த சாந்தினி, 2018 ஆம் டான்சர் நந்தாவை திருமணம் செய்து கொண்டார். டான்சர் நந்தா தற்போது சீரியலில் நடித்து வருகிறார். திருமணத்திற்கு பிறகு நடிப்பின் மீதான காதல் குறையாததால், விஜய் டிவியில் ஒளிபரப்பான தாழம்பூ சீரியல் மூலம் சின்னத்திரையில் நுழைந்து இல்லத்தரசிகளின் மனதில் இடம் பிடித்தார். மேலும் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான இரட்டை ரோஜா சீரயலில் குடும்ப குத்துவிளக்காக நடித்து வந்தார்.

chandini tamilarasan photos

ஃபயர் நடிகை: சீரியலில் நடித்து வந்த சாந்தினி தமிழரசனுக்கு நீண்ட நாட்களுக்கு பிறகு இயக்குனர் பிரகாஷ் இயக்கிய குடிமகன் படத்தில் நடித்துள்ளார். இதில்,விஜய் சிவன், சாந்தினி தமிழரசன், சுரேஷ் சக்ரவர்த்தி, நமோ நாராயணன், சேது ராமன், கதிரவன் மற்றும் நேர்மையான ராஜ் ஆகியோர் நடித்திருந்தனர். அந்த படத்திற்கு பொம்மை, சைரன், ஆலகாலம், வல்லான், தினசரி, ஃபயர்,பெருசு, ட்ராமா என அடுத்தடுத்த படத்தில் முக்கியமான ரோலில் நடித்துள்ளார். ஜே.எஸ் சதீஷ்குமார் இயக்கத்தில் உருவான ஃபயர் திரைப்படத்தில் துர்கா என்ற முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். பெண்களிடம் ஆசைவார்த்தை கூறி அவர்களை காதல் வலையில் விழ வைத்து, அவர்களுடன் எல்லை மீறி பழகி, அதை வைத்து பணம் கேட்டு மிரட்டும் உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்ட இந்த திரைப்படத்தில், சாந்தினி தமிழரசன் ஒரு அழுத்தமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த படத்தில் இடம் பெற்ற சில படுக்கை அறை காட்சிகள் இணையத்தில் மிகப்பெரிய அளவில் பேசுபொருளானது.

இணையத்தில் ஏராளமான பாலோவர்களை வைத்து இருக்கும் நடிகை சாந்தினி தமிழரசன், தனது ரசிகர்களை மகிழ்விக்க அவ்வப்போது கவர்ச்சி தாண்டவம் ஆடுவதை வழக்கமாக வைத்து இருக்கிறார். தற்போது இவர், ஸ்டைலான பாவாடை மற்றும் ஜாக்கெட்டில் மாடர்ன் லுக்கில் இருக்கும் போட்டோவை வெளியிட்டு ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்துள்ளார். இந்த போட்டோவை பார்த்த ஃபேன்ஸ் லைக்குகளை மலைபோல் குவித்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X