Rachitha Mahalakshmi: ஃபயர் பட சீனை விட பயங்கரமா இருக்கே.. ரச்சித்தா மகாலட்சுமியின் போட்டோஸ்!

சென்னை: நடிகை ரச்சித்தா மகாலட்சுமி நடித்த ஃபயர் படத்திற்கு பிறகு அம்மணியின் ரேன்ஜ் எங்கோ போய்விட்டது என்று தான் சொல்ல வேண்டும். ஃபயர் படத்தில், பெரிய மனசுடன் கவர்ச்சி காட்டி நடித்தது பேசுபொருளானாலும், இவருக்கு என்று தனி ரசிகர் கூட்டமே உருவானது. அந்த ரசிகர்களை குஷிப்படுத்த இணையத்தில் அடுத்தடுத்து போட்டோக்களை ஷேர் செய்து லைக்குகளை அள்ளி வருகிறார் ரச்சித்தா.

சரவணன் மீனாட்சி சீரியலில் பாவாடை தாவணியில், தலை நிறைய மல்லிப்பூவோடு வலம் வந்து, சின்னஞ்சிறு இளசுகளின் மனதில் இடம் பிடித்தவர் தான் நடிகை ரச்சிதா மகாலாட்சுமி. அந்த சீரியல் வெற்றி பெற்றததைத் தொடர்ந்து, நாம் இருவர் நமக்கு இருவர் உள்ளிட்ட பல சீரியல்களில் நடித்தார். சீரியலில் நடித்து நடித்து அலுத்துப்போனதால், சினிமா பக்கம் சென்ற ரச்சித்தாவிற்கு, கன்னட பட படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. பின் கோலிவுட்டுக்கு வந்து உப்புக்கருவாடு படத்தில் நாயகியாக நடித்தார்.

Rachitha Mahalakshmi photos

ரச்சித்தா மகாலட்சுமி: அதன் பின் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ரச்சித்தாவிற்கு முன்பை விட ரசிகர்கள் எண்ணிக்கை அதிகமானது. அதற்கு காரணம், அந்த நிகழ்ச்சியில் சக போட்டியாளர்களிடம் அவர் நடந்து கொண்ட விதமும், அவரின் அமைதியான பேச்சும் தான். இந்த நிகழ்ச்சியில் மற்றொரு போட்டியாளரான ராபர்ட் மாஸ்டர், ரச்சித்தாவின் பின்னால் சுற்றிய போதும், அவரை கண்டுகொள்ளாமல், தன் விளையாட்டிலேயே கவனமாக இருந்தார். அதுமட்டுமில்லாமல், கடுமையான சைக்கிள் டாஸ்கையும் மிகவும் சிறப்பாக செய்து முடித்தார். இருந்த போதும், அவரால், டைட்டிலை பெற முடியவில்லை.

ஃபயர்: ஆனால், பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் கிடைத்த புகழால், கன்னடத்தில் ரங்கநாயகா, தமிழில் எக்ஸ்ட்ரீம், தள்ளிமனசு ஆகிய படங்களில் நடித்திருந்தார். ஆனால், பட வாய்ப்பு இல்லாமல், அதாவது பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு செல்வதற்கு முன்பு ஃபயர் என்ற படத்தில் நடித்திருந்தார். ஜே.எஸ்.சதீஷ் குமார் தயாரித்த படத்தில் மீனாட்சி என்ற ரோலில் நடித்திருந்தார் ரச்சித்தா. காதல் என்ற பெயரில் பெண்களை சிதைத்த காசி என்பவன் பற்றி, தமிழ்நாட்டில் நடந்த உண்மைச் சம்பவத்தை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்ட திரைப்படமாகும். இப்படத்தில், ரச்சித்தா மகாலட்சுமி ஒரு பாடல் காட்சியில் வெறும் ஷர்ட் மட்டுமே அணிந்து கொண்டு, பாடல் முழுக்க ஒரே கசமுசாவாகத்தான் இருந்தது. இந்த பாடல் வெளியானதும், பலரும் ரச்சித்தாவா, இப்படி நடித்து இருக்கிறார் என்ற இணையத்தில் அவரை கழுவி ஊற்றினார்கள்.

இன்ஸ்டா போஸ்ட்: படம் வெளியாவதற்கு முன்பே ஃபயர் பட இயக்குநருடன் ரச்சித்தாவிற்கு பிரச்சனை ஏற்பட்டதால், அந்த படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் கூட அவர் கலந்து கொள்ள வில்லை. ஆனால், ஃபயர் படத்தில் ரச்சித்தா ஓவர் கவர்ச்சி காட்டி நடித்தால், அவருக்கு எந்த பாதிப்பும் இல்லை, மாறாக அவரின் ரசிகர் எண்ணிக்கைத்தான் அதிகரித்தது. தற்போது, ரச்சித்தா மகாலாட்சுமி இன்ஸ்டாகிராமில், மெல்லிய புடவையில் இடையழகை காட்டி போஸ் கொடுத்துள்ளார். அதைப்பார்த்த ரசிகர்கள், ஃபயர் பட சீனை விட பயங்கரமா இருக்கே என கருத்துக்களை பகிர்ந்து கமெண்ட் பாக்ஸ்சை நிரப்பி வருகின்றனர். தற்போது ரச்சித்தா மகாலட்சுமி தெலுங்கில் இரண்டு படத்திலும், தமிழில் ஒருபடத்திலும் நடித்து வருகிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X