முதல் முறையாக ஒரு துளி மேக்கப் கூட இல்லாமல் புகைப்படத்தை வெளியிட்ட இனியா!

சென்னை : நடிகை இனியா மிகச் சிறந்த நடிகையாக தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் பிரபலமாக வலம் வந்து கொண்டுள்ளார்

தேசிய விருதை வென்ற வாகை சூடவா படத்தில் நடித்து தமிழ் ரசிகர்களின் ஃபேவரைட் நடிகையாக மாறினார்

ஹீரோயினியாக மட்டுமல்லாமல் குணசித்திர வேடங்களிலும் நடித்து வரும் இனியா இப்பொழுது முதல்முறையாக துளிகூட மேக்கப் போடாமல் நேச்சுரலாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களிடம் பாராட்டுகளை பெற்று வருகிறார்.

தமிழ் ரசிகர்களின் ஃபேவரைட் நடிகையாக

தமிழ் ரசிகர்களின் ஃபேவரைட் நடிகையாக

இயக்குனர் சற்குணம் இயக்கத்தில் விமல் ஹீரோவாக நடித்த வாகை சூடவா திரைப்படத்தில் நடித்து தமிழ் ரசிகர்களின் ஃபேவரைட் நடிகையாக மாறினார் நடிகை இனியா. வாகை சூடவா தேசிய விருது பெற்றது. அதேபோல இந்த படத்தில் இனியாவின் இயல்பான நடிப்பு அனைவரையும் கவர்ந்தது.

சர்ச்சைக்குரிய கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்தார்

சர்ச்சைக்குரிய கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்தார்

அதன் பிறகு பல படங்களில் நடித்திருந்தாலும் பெரிதாக இவருக்கு பெயரை பெற்றுத் தரவில்லை. எனவே ஒரு மாற்றத்திற்கு கதாநாயகியாக வலம் வந்து கொண்டிருக்கும் போதே சென்னையில் ஒரு நாள், புலிவால், நான் சிகப்பு மனிதன் உள்ளிட்ட படங்களில் சர்ச்சைக்குரிய கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்தார்.

மலையாள படங்களில் கவனம்

மலையாள படங்களில் கவனம்

தமிழ் மற்றும் மலையாளம் என இரு மொழிகளிலும் படங்களில் நடித்து வரும் இனியா சமீபகாலமாக ஹீரோயினியாக மட்டுமல்லாமல் குணச்சித்திர வேடங்களிலும் நடிக்க தயார் என கிடைக்கின்ற வாய்ப்புகளை எல்லாம் மிஸ் செய்யாமல் நடித்து வருகிறார். கடைசியாக பரத்துடன் இணைந்து பொட்டு என்ற திரைப்படத்தில் நடித்தார் அதன் பிறகு தொடர்ந்து மலையாள படங்களில் கவனம் செலுத்தி வருகிறார்.

மீண்டும் பழைய இடத்தை பிடிக்க வேண்டும்

மீண்டும் பழைய இடத்தை பிடிக்க வேண்டும்

இந்த நிலையில் இயக்குனர் எஸ் ஏ சந்திரசேகர் இயக்கத்தில் சமுத்திரக்கனி ஹீரோவாக நடித்துள்ள நான் கடவுள் இல்லை என்ற திரைப்படத்தில் இரண்டு கதாநாயகிகளில் ஒருவராக நடித்துள்ளார். மிகச்சிறந்த நடிகை, எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் அதில் அப்படியே பொருந்துவார் என பல பாராட்டுக்கள் இவருக்கு கிடைத்தாலும் ஆரம்பத்தில் நடித்த சர்ச்சைக்குரிய கதாபாத்திரங்களால் சரியான வாய்ப்புகள் எதுவும் இவருக்கு அமையவில்லை. இருப்பினும் மீண்டும் பழைய இடத்தை பிடிக்க வேண்டும் என போராடி கொண்டுள்ளார்.

Recommended Video

Iniya, Sakshi Agarwal Speech in Naan Kadavul Illai Teaser Launch
முதல் முறையாக துளிகூட மேக்கப் போடாத

முதல் முறையாக துளிகூட மேக்கப் போடாத

இந்த நிலையில் முன்னணி கதாநாயகிகளுக்கு இணையாக இனியாவும் அடிக்கடி கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு இணையதளத்தை கந்தலாகி வருகிறார். இப்போது முதல் முறையாக துளிகூட மேக்கப் போடாத புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து ரசிகர்கள் மத்தியில் பாராட்டுகளை பெற்று வருகிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X