»   »  'நீலாம்பரியாக' மாறும் த்ரிஷா

'நீலாம்பரியாக' மாறும் த்ரிஷா

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: தனுஷின் பெயரிப்படாத படத்தில் நாயகியாக நடிக்கும் த்ரிஷாவுக்கு, இந்தப் படத்தில் படையப்பா நீலாம்பரி போல ஒரு அழுத்தமான கதாபாத்திரம் என்று செய்திகள் வெளியாகி இருக்கின்றன.

தனுஷ் தற்போது பிரபு சாலமனின் படத்தில் நடித்து வருகிறார். இதைத் தொடர்ந்து அவர் துரை.செந்தில்குமாரின் பெயரிடப்படாத புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார்.

இந்தப் படத்தில் தனுஷ் முதன்முறையாக இரட்டை வேடங்களில் நடிக்கவிருக்கிறார்.

துரை.செந்தில்குமார் - தனுஷ்

துரை.செந்தில்குமார் - தனுஷ்

துரை செந்தில்குமார் இயக்குனராக அறிமுகமான எதிர்நீச்சல் மற்றும் காக்கிச்சட்டை ஆகிய படங்களை நடிகர் தனுஷ் தயாரித்து இருந்தார். இந்த 2 படங்களிலுமே சிவகார்த்திகேயன் நாயகனாக நடிக்க இரண்டும் பாக்ஸ் ஆபிசில் வெற்றிக் கனியைப் பறித்தன.

தயாரிப்பாளர் - நாயகன்

தயாரிப்பாளர் - நாயகன்

துரை.செந்தில்குமாரின் புதிய படத்தில் தற்போது தனுஷ் நாயகனாக நடிக்கவிருக்கிறார். இந்தப் படத்தைத் தயாரிக்கும் தனுஷ் முதன்முறையாக இந்தப் படத்தில் 2 வேடங்களில் நடிக்கிறார். இதில் ஒரு தனுஷிற்கு(தம்பி) ஜோடியாக ஷாம்லியும், மற்றொரு தனுஷிற்கு ஜோடியாக (அண்ணன்) த்ரிஷாவும் நடிக்கின்றனர்.

முன்னதாக

முன்னதாக

முன்னதாக தனுஷின் ஆடுகளம் மற்றும் தங்கமகன் போன்ற படங்களில் த்ரிஷாவை நடிக்க வைக்க முயற்சிகள் மேற்கொண்டும் அது சூழ்நிலை காரணமாக கைகூடாமல் போய்விட்டது. இதனால் தற்போது முதன்முறையாக தனுஷ் - த்ரிஷா ஜோடி சேர்ந்திருக்கின்றனர்.

அரசியல் த்ரில்லர்

அரசியல் த்ரில்லர்

அரசியல் கலந்த திரில்லர் கதையாக உருவாகும் இப்படத்தில் ஒரு கனமான கதாபாத்திரத்தில் த்ரிஷா நடிக்கவிருக்கிறாராம். இந்தப் பாத்திரமானது படையப்பா படத்தில் இடம்பெற்ற நீலாம்பரியைப் போன்று இருக்குமாம். முன்னதாக இந்த வேடத்தில் வித்யா பாலனை நடிக்கக் கேட்டு அவர் மறுத்தது குறிப்பிடத்தக்கது.

English summary
Trisha Opposite with Dhanush For the First Time in Durai. Senthil Kumar's Untitled Project. Dhanush Plays Dual Role in this Film, Trisha Opposite for the Elder - Brother Character.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil