ஸ்ருதிஹாசன் பர்த் டே ஸ்பெஷல்.. அவரை பற்றி தெரியாத சுவாரஸ்யமான 5 விஷயங்கள்!

சென்னை: உலக நாயகன் கமல்ஹாசனின் மகளும் பிரபல நடிகையுமான ஸ்ருதிஹாசன் இன்று தனது 34வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார்.

தந்தை கமலை போலவே மகள் ஸ்ருதிஹாசனும் பன்முகத் திறமை கொண்டவர்.

தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி படங்களில் நடித்துள்ள ஸ்ருதிஹாசனுக்கு இந்தியா முழுவதும் ரசிகர்கள் உள்ளனர்.

பிரபலங்கள், ரசிகர்கள் என ஸ்ருதிஹாசனுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்களை பொழிந்து வரும் இந்த நேரத்தில் அவரை பற்றி தெரியாத சுவாரஸ்யமான சில தகவல்களை இங்கே காண்போம்..

போலியான பெயர்போலியான பெயர்

போலியான பெயர்போலியான பெயர்

பூஜா ராமசந்திரன் என்ற போலியான பெயரில் தான் நடிகை ஸ்ருதி ஹாசன் பள்ளியில் படித்துள்ளார். உலகநாயகன் கமல்ஹாசன் மற்றும் நடிகை சரிகாவின் மகள் என்ற அடையாளத்தை சக மாணவர்களிடம் காட்ட விரும்பாத ஸ்ருதிஹாசன் பள்ளியில் படிக்கும் போது இதுபோன்ற போலி பெயரை பயன்படுத்தி படித்துள்ளார்.

சைக்காலஜி

சைக்காலஜி

சென்னையில் உள்ள லேடி ஆண்டாள் பள்ளியில் தனது பள்ளி படிப்பை முடித்த நடிகை ஸ்ருதிஹாசன், மும்பையில் உள்ள செயின்ட் ஆண்ட்ரூ கல்லூரியில் சைக்காலஜி பயின்று பட்டம் பெற்றுள்ளார். பின்னர், சினிமா மற்றும் இசை பக்கம் தனது பார்வையை திருப்பிய ஸ்ருதி கலிபோர்னியாவில் உள்ள இசைக்கல்லூரியில் இசையை முறைப்படி பயின்றுள்ளார்.

’ஷூ’ காதலி

’ஷூ’ காதலி

மாடலிங் மற்றும் ஃபேஷன் துறையில் அதீத நாட்டம் கொண்ட நடிகை ஸ்ருதிஹாசன், பேட்டி ஒன்றில் தனக்கு பிடித்தமான ஒன்றாக ஷூ வாங்குவதை குறிப்பிட்டுள்ளார். தனது வீட்டில் நூற்றுக்கணக்கான புதுவித ஷூ கலெக்‌ஷனையும் வைத்துள்ளார். மார்க்கெட்டில் புது பிராண்ட் ஷூக்கள் வந்தால், அதை முதலில் வாங்கும் நபராக ஸ்ருதி இருப்பாராம்.

ஷாப்பிங் பிரியை

ஷாப்பிங் பிரியை

ஷூக்களை வாங்கி அடுக்கும் போதே ஸ்ருதிஹாசன் எப்படி பட்ட ஷாப்பிங் பிரியை என்பதை புரிந்து கொள்ள முடியும். அதுமட்டுமின்றி, தனது ஓய்வு நேரத்தில் புதுவித உடைகள், ஃபேஷன் ஆடைகள், காஸ்மெடிக்ஸ், பெரிய பிராண்ட்களின் பிரபல பொருட்கள் என பலவற்றை வாங்கும் ஆர்வமும் ஸ்ருதிக்கு அதிகமாகவே உள்ளது.

டைரக்டர்

டைரக்டர்

பாடல், நடிப்பு, நடனம் என மல்டி டேலன்ட் நடிகையான ஸ்ருதிஹாசனுக்கு இயக்குநர் ஆகவேண்டும் என்ற கனவும் இருக்கிறது. அதுவும் மகா நடிகரான தனது தந்தையை வைத்து ஒரு படமாவது இயக்க வேண்டும் என்ற பெரிய கனவும் நடிகை ஸ்ருதி ஹாசனுக்கு இருக்கிறதாம். ஆனால், அதற்கான கால நேரங்கள், திரைக்கதை சரியாக அமையுமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X