»   »  மீண்டும் மிளிரும் ப்ளோரா!

மீண்டும் மிளிரும் ப்ளோரா!

Subscribe to Oneindia Tamil

கேப்டன் விஜயகாந்த்துடன் கஜேந்திரா படத்தில் நடித்து அறிமுகமாகி, அட்ரஸ் இல்லாமல் போன ப்ளோராஇப்போது தெலுங்கில் சில படங்களில் திறமை காட்டி வருகிறார்.

கஜேந்திராவில் நடுங்க வைக்கும் அளவுக்கு கிளாம>ல் தூள் பறத்தியிருந்தார் ப்ளோரா. அப்படியிருந்தும் தமிழ்ப்படங்கள் அதிகம் வரவில்லை இந்த மலையாளத்து சேச்சிக்கு.

இதனால் அப்செட் ஆகியிருந்த ப்ளோராவை மலர வைக்கும் விதமாக வந்த வாய்ப்புதான் ஸாரி, எனக்குகல்யாணமாயிருச்சு. ஸ்ரீமனுக்கு ஜோடியாக நடித்திருந்த இப்படத்தில் ப்ளோரா கிளாமரில் விளையாடியிருந்தார்.அவரை விட தூக்கலாக கவர்ச்சியை கக்கியிருந்தார் சொர்ணமால்யா.

இந்தப் படத்தில் இருவரும் சேர்ந்து கிளாமர் களியாட்டம் ஆடியிருந்தனர். படத்தை தணிக்கைச் சான்றிதழுக்குஅனுப்பியபோது ப்ளோராவை விட சொர்ணமால்யா குண்டக்க மண்டக்க கிளாமர் காட்டியிருந்ததைப் பார்த்துவிதிர்த்துப் போய் விட்டனர்.

இந்தப் படமும் ப்ளோராவுக்கு ஸாரி சொல்லி விட்டது. ஆனால் தெலுங்கில் புதிய தேட்டைக்கு வழி ஏற்படுத்திக்கொடுத்தது. தெலுங்கில் மிக லேட்டாக சமீபத்தில் டப் செய்யப்பட்ட ஸாரி எனக்கு கல்யாணமாயிடுச்சு படம்ப்ளோராவுக்கு ரசிகர் கூட்டத்தை ஏற்படுத்தி விட்டது.

அமர்க்களமா கீது நைனா என்று ஆந்திர தேசத்தினர் ப்ளோராவை ரசிக்க ஆரம்பிக்கவே, அதன் விளைவாக பலபுதிய படங்கள் ப்ளோராவுக்குக் கிடைத்துள்ளன. இப்போது அவர் வசம் 5 படங்கள் உள்ளதாம்.

ஆனால் அத்தனை படங்களிலும் அவருக்கு நடிக்கும் வாய்ப்பை விட காட்டும் வாய்ப்பே அதிகம். இருந்தாலும்கவலைப்படவில்லை ப்ளோரா. சும்மா இருப்பதற்கு இது பரவாயில்லை என்று படு சந்தோஷமாக அந்த கிளாமர்ரோல்களை ஏற்று திறமை காட்டி வருகிறார்.

சொந்த மொழியான மலையாளத்தில் நடிக்க ப்ளோராவுக்கு ரொம்ப ஆசை தான். இங்கு சதையை விட கதைக்குநல்ல மருவாதி கொடுக்கிறார்கள். எனவே மலையாளத்தில் எனக்கு ஒரு படம் வந்தால் கூட அதை சந்தோஷமாகஏற்றுக் கொண்டு, சம்பளத்தைப் பற்றிக் கவலையே படால் நடிப்பேன் என்கிறார் ஏக்கமாக.ஏக்கத்தைத் தீர்த்து வைக்கப் போவது யாரப்பா?

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil