Don't Miss!
- Automobiles
இந்த அளவுக்கு புக்கிங் வரும்னு மாருதியே நெனச்சிருக்காது! 2 புதிய கார்களை வாங்க எல்லாரும் போட்டி போட்றாங்க!
- News
"முன்பதிவு செயலி தேவை" ஆட்டோ ஓட்டுநர்களின் வாழ்வை காப்பாற்ற.. தமிழக அரசை வலியுறுத்தும் சீமான்!
- Sports
உடைந்த கைகளால் பேட்டிங்.. அணிக்காக ஒற்றை கையில் போராடிய ஹனுமா விஹாரி.. எதிரணி வீரர்களே பாராட்டு!
- Lifestyle
பளபளப்பான ஜொலிக்கும் சருமத்தை பெற... நீங்க ஏன் இயற்கை பொருட்களை மட்டும் பயன்படுத்தனும் தெரியுமா?
- Finance
எத்தியோப்பியா, கென்யாவோட ஜிடிபி-க்கு சமமான வீழ்ச்சி.. அதானி குழுமத்திற்கு அடிக்கு மேல் அடி!
- Technology
36 லட்ச WhatsApp பயனர்களுக்கு ஆப்பு.! உப்பு தின்னா தண்ணி குடிக்கனும்., தப்பு செஞ்சா?
- Travel
தாம்பரத்தில் தாஜ்மஹாலா – ஆம்! ஒரு அற்புதமான கண்காட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது – மிஸ் பண்ணிடாதீங்க!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
ஆண்கள் நிஜ ஹீரோவாக ஆக இதை செய்யுங்கள்... உங்களுக்காக ஒரு பாடலும் பாடுவேன். குவியும் பாராட்டுக்கள்!
சென்னை: பாடகியாக இருந்து இப்பொழுது ஹீரோயினியாக தமிழ் சினிமாவில் வெற்றிகரமாக வலம் வந்து கொண்டுள்ளார் நடிகை ஆண்ட்ரியா
வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வரும் ஆண்ட்ரியா இப்போது மிஸ்கின் இயக்கத்தில் பிசாசு -2 ல் லீட் ரோலில் நடித்து வருகிறார்
சமூக வளைதளத்தில் மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளத்தை கொண்டுள்ள ஆண்ட்ரியா இப்பொழுது ஆண்கள் நிஜ ஹீரோவாக ஆக வேண்டும் என்றால் இதை செய்யுங்கள் என ரசிகர்களுக்கு வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார்.
மலேசியா,
குவைத்,
கத்தாரில்…
விஷ்ணு
விஷாலின்
'எஃப்.ஐ.ஆர்'
படத்திற்கு
தடை..
என்ன
காரணம்?

ஹீரோயினாக அறிமுகம்
மிகச் சிறந்த பாடகியாக அனைவரது மனங்களிலும் இடம் பிடித்த நடிகை ஆண்ட்ரியா இப்போது நடிகையாகவும் தமிழ் சினிமாவில் வெற்றிகரமாக வலம் வந்து கொண்டு உள்ளார் இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் வெளியான பச்சைக்கிளி முத்துச்சரம் என்ற படத்தின் மூலம் ஹீரோயினாக தமிழ் சினிமாவில் முதல்முறையாக அறிமுகமான ஆண்ட்ரியா அதில் மிகச் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி தனி கவனத்தைப் பெற்றார். வித்தியாசமான கதாபாத்திரங்கள் மட்டுமல்லாமல் போல்டான ரோல்களில் நடித்து வரும் ஆண்ட்ரியா ஹீரோயினாக நடிக்கும் அதேசமயம் சிறப்பு தோற்றத்திலும் குணச்சித்திர கதாபாத்திரங்களிலும் நடித்து வருகிறார். அந்த வகையில் விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் படத்தில் உடற்பயிற்சி ஆசிரியராக நடித்து கலக்கி இருப்பார்

போல்டான கதாபாத்திரங்களில்
தரமணி மற்றும் வட சென்னை உள்ளிட்ட படங்களில் பலரும் நடிக்க தயங்கும் போல்டான கதாபாத்திரங்களை ஏற்று நடித்து தமிழ் சினிமாவில் தனித்துவமான நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் ஆண்ட்ரியாவுக்கு தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் வாய்ப்புகள் குவிகிறது. அங்கும் சில படங்களில் நடித்து பிரபலமான நடிகையாக உள்ளார்.

பிசாசு 2
பிசாசு படத்தின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து இயக்குனர் மிஸ்கின் அதன் இரண்டாவது பாகத்தை மிக மும்முரமாக இயக்கி வருகிறார். ஹாரர் பின்னணியில் உருவாகி வரும் இந்தப் படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் ஆண்ட்ரியா நடித்து வருகிறார். கதாநாயகிக்கு முக்கியத்துவம் தரும் பிசாசு 2ல் விஜய் சேதுபதி,பூர்ணா, சந்தோஷ் பிரதப் மற்றும் அஜ்மல் கான் என பலர் முக்கிய வேடங்களில் நடித்து வருகின்றனர்.

ஆண்கள் நிஜ ஹீரோவாக ஆக
சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் ஆண்ட்ரியா இப்பொழுது ரசிகர்களுக்கு வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார். நீங்கள் நிஜ ஹீரோவாக இருக்க வேண்டுமென்றால் அனைவரும் ரத்ததானம் செய்யுங்கள். உங்களின் ஒவ்வொரு துளி ரத்தமும் ஒரு உயிரை காப்பாற்றும். 80 சதவீத இளம் பெண்கள் ரத்ததானம் கொடுக்க நினைத்தாலும் உடல் ரீதியாக அவர்களால் சரியான முறையில் ரத்த தானம் கொடுக்க முடியாது. அந்த சிக்கலை நானே பல முறை சந்தித்துள்ளேன். எனவே நிஜ ஹீரோவாக ஆக ஆண்களே இதைச் செய்யுங்கள் நானே உங்களுக்கு பாடல் ஒன்றையும் பாடுவேன். என ரசிகர்களுக்கு ஆண்ட்ரியா வேண்டுகோள் விடுத்துள்ளதற்கு பாராட்டுக்கள் குவிகிறது .