நாங்களும் அள்ளி வழங்குவோம்ல.. இளசுகளுக்கு டஃப் கொடுக்கும் மாஜி கனவுக் கன்னிகள்!

சென்னை : ஒரு காலத்தில் சினிமாக்களில் கவர்ச்சி நடிகைகள் என தனியாக இருப்பார்கள். படத்தின் நாயகிகள் குடும்ப பாங்கினிகளாகவும், அழகு தேவதைகளாகவும் மட்டும் வந்து செல்வார்கள்.

ஹீரோக்களுடனான ரொமான்ஸ் காட்சிகள் மற்றும் ஓரிரு பாடல்களுக்கு மட்டும் கிளாமரும், நெருக்கமும் காட்டி நடித்தார்கள். இப்படி நடித்தும் பல நடிகைகள், உடன் நடித்த ஹீரோக்களுடன் சேர்த்து அதிக அளவில் கிசுகிசுக்கப்பட்டனர்.

மொத்தமாக மாறிய நிலை

மொத்தமாக மாறிய நிலை

90 களில் இந்த நிலைமை மாறிப் போனது. படத்தின் நாயகிகளே தாராள கவர்ச்சி காட்ட துவங்கியதால் கவர்ச்சி நடிகைகள் என தனியாக யாரும் இல்லாமல் போயினர். படங்களில் மட்டுமல்ல, சினிமாவிற்கு வெளியிலும் கவர்ச்சி உடைகளிலேயே நடிகைகள் வலம் வர துவங்கினர்.

போட்டி போடும் நடிகைகள்

போட்டி போடும் நடிகைகள்

தற்போது நடிகைகள் அனைவரும் கவர்ச்சிக்கு மாறியதால் இதில் யார் உச்சபட்ச கவர்ச்சி காட்டுகிறார்கள் என போட்டியே வந்து விட்டது. இதனால் படம் எடுக்கும் டைரக்டர்களும், தயாரிப்பாளர்களும் தங்கள் படத்திற்கு ஹீரோயினை தேர்வு செய்யவே அதிக நாட்களை செலவிடுகின்றனர்.

 சமூக வலைதளங்களில் போட்டி

சமூக வலைதளங்களில் போட்டி

படங்களில் பிஸியாக இருக்கும் முன்னணி நடிகைகள் துவங்கி, ஓரிரு படங்களில் மட்டும் நடித்த நடிகைகள் வரை விதவிதமாக கவர்ச்சி காட்டி எடுத்த ஃபோட்டோக்களை தங்களின் சமூக வலைதள பக்கங்களில் போட்டி போட்டுக் கொண்டு வெளியிட்டு வருகின்றனர்.

பரபரப்பை கிளப்பும் நடிகைகள்

பரபரப்பை கிளப்பும் நடிகைகள்

இன்னும் சில நடிகைகள் பலரின் கவனத்தை ஈர்க்க வேண்டும் என்பதற்காக டாப்லெஸ் போட்டோக்களை கூட வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றனர். காலையில் காபி குடிப்பது துவங்கி, ஜிம்மில் ஒர்க் அவுட் பண்ணுவது, ஷாப்பிங் செல்வது, வெளிநாட்டு- வெளியூர் பயணங்கள் என அனைத்தையும் போட்டோவாக பகிர்ந்து வருகின்றனர்.

டஃப் கொடுக்கும் முன்னாள் நடிகைகள்

டஃப் கொடுக்கும் முன்னாள் நடிகைகள்

இளம் நடிகைகள் தான் போட்டி போட்டு கவர்ச்சி காட்டுகிறார்கள் என்றால் அவருக்கு இணையாக முன்னாள் நடிகைகள் சிலரும் கவர்ச்சி ஃபோட்டோஷூட் நடத்தி அதிர்ச்சி கொடுத்து வருகின்றனர். 80, 90 களில் பாலிவுட்டில் கனவு கன்னிகளாக வலம் வந்த மாதுரி தீட்ஷித், ஷில்பா ஷெட்டி போன்றோர் விதவிதமாக ஃபோட்டோஷூட் நடத்தி, ஃபோட்டோக்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

சர்வ சாதாரணமான பிகினி

சர்வ சாதாரணமான பிகினி

இளம் நடிகைகள் ஒவ்வொருவராக வரிசையாக தங்களின் பிகினி ஃபோட்டோக்களை வெளியிட்டு வருகிறார்கள். இவர்களுக்கு போட்டியாக 2002 ல் நடிக்க வந்த கனிகா, சிரியா ரெட்டி போன்றோரும் பிகினி மற்றும் தொடை தெரியும் கவர்ச்சி ஃபோட்டோக்களை வெளியிட்டு வருகிறார்கள்.

கவர்ச்சியில் போட்டா போட்டி

கவர்ச்சியில் போட்டா போட்டி

நடிகைகள் தங்களுக்குள் நடிப்பில் போட்டி போட்ட காலம் போய், தற்போது துணிச்சலாக கவர்ச்சி காட்டுவதில் யார் சிறந்தவர்கள் என காட்ட சமூக வலைதளங்களில் போட்டி போட்டு வருகின்றனர். இதில் ஒருவருக்க மற்றவர் சளைத்தவர்கள் என காட்டி வருகிறார்கள். சினிமா நடிகைகள் மட்டுமல்ல சின்னத்திரை நடிகைகள் சிலரும் இந்த கவர்ச்சி போட்டியில் குதித்துள்ளது தான் திரையலகை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X