கொலை மிரட்டல் விடுக்கிறார்: நடிகை சங்கீதா மீது முன்னாள் பிரதமரின் பெண் ஆலோசகர் போலீசில் புகார்

By Siva

Former PM's advisor gives complaint against actress Sangeetha
சென்னை: நடிகை சங்கீதா தனக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக முன்னாள் பிரதமரின் ஆலோசகரான உஷா சங்கர நாராயணன் போலீசில் புகார் அளித்துள்ளார்.

சென்னை வளசரவாக்கம் ஆழ்வார் திருநகரியில் உள்ள ஜானகி நகரைச் சேர்ந்தவர் உஷா சங்கர நாராயணன்(60). முன்னாள் பிரதமர் ஒருவரின் ஆலோசகராக இருந்தவர். அவர் நடராஜன் என்பவரின் வீட்டில் வாடகைக்கு வசித்து வருகிறார். திருமணமாகாத அவர் தெருநாய்களை வளர்த்து வருகிறார்.

அவரது வீட்டுக்கு அருகில் தனது மனைவி கலையுடன் வசிக்கும் பாஸ்கரன் என்பவர் உயர் ரக நாய் ஒன்றை வளர்க்கிறார். இந்நிலையில் உஷா வளர்க்கும் நாய்கள் பாஸ்கரன் வீட்டு நாயை பார்த்து குரைத்துள்ளன. இதனால் அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து உஷாவை வீட்டை விட்டு வெளியேற்றுமாறு பாஸ்கரனும், கலையும் நடராஜனை வற்புறுத்தினார்களாம்.

உஷா, பாஸ்கரன் வீடுகளுக்கு அருகில் தான் நடிகை சங்கீதா தனது கணவர் க்ரிஷுடன் வசித்து வருகிறார். அவரும் உஷா வளர்க்கும் நாய்களால் பாதிகக்ப்பட்டுள்ளார் போன்று. இதையடுத்து பாஸ்கரன், கலைக்கு ஆதரவாக சங்கீதா பேசியுள்ளார். பின்னர் உஷா வளசரவாக்கம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். சங்கீதாவும், அவரது கணவரும் தன்னை நடுத்தெருவில் வைத்து தரக்குறைவான வார்த்தைகளால் திட்டி கொலை மிரட்டல் விடுத்ததாகவும், வீட்டை காலி செய்யாவிட்டால் நாய்களை கொன்றுவிடுவோம் என்று மிரட்டியதாகவும் உஷா போலீசாரிடம் தெரிவித்தார்.

இது குறித்து போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை என்று உயர் நீதிமன்றத்தை அணுகினார் உஷா. அதன் பிறகு சங்கீதா, க்ரிஷ், பாஸ்கரன், கலை, நடராஜன், அவரது மனைவி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

இந்த சம்பவம் பற்றி சங்கீதா போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு புகார் கொடுக்க இன்று வருகிறார் என்று கேள்விப்பட்டு அங்கு செய்தியாளர்கள் கூடினர். ஆனால் அவர் வரவில்லை.

இந்நிலையில் சங்கீதா தனது வீட்டில் செய்தியாளர்களிடம் கூறுகையில்,

என் மீது புகார் கொடுத்த உஷாவுக்கு 70 வயது இருக்கும். அவ்வளவு வயதானவருக்கு நான் எப்படி கொலை மிரட்டல் விடுப்பேன். அவர் வளர்க்கும் நாய்களால் எங்கள் தெருவில் உள்ள அனைவரும் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர் வீட்டு நாய்கள் என் வீட்டுக்குள் புகுந்து என் குழந்தையை கடிக்க முயன்றன.

இதையடுத்து கடந்த பிப்ரவரி மாதம் இது குறித்து போலீசில் புகார் கொடுத்தேன். மேலும் சென்னை மாநகராட்சி கமிஷனரிடம் போனில் பேசினேன். இருப்பினும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

இது குறித்து உஷாவிடம் நானும், எங்கள் தெருவில் வசிப்போரும் கேட்டபோது அவர் தான் எங்களை மிரட்டுவது போன்று பேசினார். தனக்கு அரசு மற்றும் போலீஸ் அதிகாரிகள் சிலரை தெரியும் என்று கூறிய அவர் சிலரின் பெயர்களையும் தெரிவித்தார். அதனால் தன்னை யாரும் எதுவும் செய்ய முடியாது என்றார்.

இந்த சம்பவத்திற்கு பிறகு அவர் என் மீதும், பிறர் மீதும் நாய்களை ஏவி விடுகிறார். இந்த பிரச்சனையை பெரிதுபடுத்த நான் விரும்பவில்லை. ஆனால் அவர் என் பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் செயல்பட்டிருக்கிறார். அதனால் தான் போலீஸ் கமிஷனரிடம் புகார் கொடுக்க முடிவு செய்தேன். நான் தயார் செய்துள்ள புகார் மனுவில் பாதிக்கப்பட்ட அனைவரும் கையெழுத்திட்டுள்ளனர் என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X