அனுபமாவின் “ஃபிரீடம் அட் மிட்நைட்“..டைட்டிலே டிஃபரண்டா இருக்கே.. குறும்படம் எப்படி இருக்குமோ!

கொச்சி : அனுபமா பரமேஸ்வரன் ஃபிரீடம் அட் மிட்நைட் என்ற குறும்படத்தில் நடித்து வருகிறார். இவருக்கு திரைப்பிரபலங்கள் பலரும் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.

மலையாளத்தைத் தொடர்ந்து தெலுங்கு, தமிழிலும் இவர் பிரபலமாக உள்ள நிலையில் கன்னடத்திலும் "நடசார்வாபோவ்மா" என்ற திரைப்படத்தின் மூலம் தனது அறிமுகத்தை கொடுத்துள்ளார்.

இதுவரை திரைப் படங்களில் மட்டுமே நடித்து வந்த அனுபமா பரமேஸ்வரன் இப்பொழுது ஃபிரீடம் அட் மிட்நைட் என தலைப்பிடப்பட்டுள்ள குறும்படத்தில் நடித்து வருகிறார்.

ரசிகர்களின் மனதில்

ரசிகர்களின் மனதில்

பிரேமம் திரைப்படத்தின் மூலம் முதன்முறையாக அறிமுகப்படுத்தப்பட்ட நடிகை அனுபமா பரமேஸ்வரன் அதில் பள்ளிப்பருவ காட்சிகளில் வந்து அனைவரின் மனதையும் கொள்ளையடித்ததோடு ரசிகர்களின் மனதிலும் இடம்பிடித்தார்.

இரண்டு வேடங்களில்

இரண்டு வேடங்களில்

பிரேமம் திரைப்படம் மலையாள ரசிகர்களை மட்டுமல்லாமல் தமிழ் ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்த நிலையில் இந்த திரைப்படம் தமிழ் நாட்டிலும் மிகப்பெரிய வெற்றி பெற்றதோடு, அனுபமாவுக்கு இது மிகப்பெரிய அறிமுகமாக இருந்ததைத் தொடர்ந்து தனுஷ் இரண்டு வேடங்களில் கலக்கி இருந்த கொடி திரைப்படத்தின் மூலம் நேரடியாக தமிழில் அறிமுகப்படுத்தப்பட்டார்.

தெலுங்கில் நானி

தெலுங்கில் நானி

பார்க்க மிகவும் லட்சணமாக அனைவரும் விரும்பும் வகையில் இருக்கும் அனுபமா பரமேஸ்வரன் மலையாளம், தமிழ் என இரண்டிலும் தனது அறிமுகத்தை கொடுத்து பிரபலமாக உள்ள நிலையில் தெலுங்கிலும் நானி, சர்வானந்த் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் நடித்து தெலுங்கிலும் கொடியை பறக்க விட்டார்.

தமிழ் ரீமேக்

தமிழ் ரீமேக்

கவர்ச்சி காட்டாமல் இன்று வரை அனைவரும் பார்த்து ரசிக்கக்கூடிய கதாபாத்திரங்களை பார்த்து பார்த்து தேர்ந்தெடுத்து நடித்து வரும் அனுபமா பரமேஸ்வரன் கொடி திரைப்படத்திற்கு பிறகு இப்பொழுது அதர்வாவுடன் இணைந்து "தள்ளிப் போகாதே" என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இது தெலுங்கில் நானி நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட் வெற்றி பெற்ற நின்னுக்கோரி என்ற திரைப்படத்தின் தமிழ் ரீமேக் ஆகும். இப்படத்தை ஆர் கண்ணன் இயக்கி உள்ளார்.

முதல் குறும்படம்

முதல் குறும்படம்

இவ்வாறு வெகு ஆண்டுகளுக்குப் பிறகு தமிழில் நடித்து வரும் அனுபமாவைக் காண ரசிகர்கள் பலரும் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கும் நிலையில் இப்பொழுது குறும்படம் ஒன்றில் நடித்து வருகிறார். "ஃபிரீடம் அட் மிட்நைட்" என பெயரிடப்பட்டுள்ள இந்த குறும்படத்தின் போஸ்டரை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள அனுபமாவுக்கு நடிகை நஸ்ரியா மற்றும் சூரரைப் போற்று புகழ் அபர்ணா பாலமுரளி உள்ளிட்ட நடிகைகள் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X