புற்றுநோய் சிகிச்சையால் மொட்டை அடித்த நடிகை சோனாலி: ரசிகர்கள் அதிர்ச்சி
Recommended Video

நியூயார்க்: அமெரிக்காவில் புற்றுநோய்க்காக சிகிச்சை பெற்று வரும் நடிகை சோனாலி பெந்த்ரேவின் தற்போதைய புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
பாலிவுட் நடிகை சோனாலி பெந்த்ரேவுக்கு புற்றுநோய் அதுவும் முற்றிய நிலையில் இருப்பது அண்மையில் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அவர் அமெரிக்காவில் தங்கி சிகிச்சை பெற்று வருகிறார்.
முதலில் அவர் தனது தலை முடியை நறுக்கிய புகைப்படத்தை ட்விட்டரில் வெளியிட்டார்.

கணவர்
தனது மகன் ரன்வீர் தனக்கு தாயாக மாறி அன்பாக கவனித்துக் கொள்வதாக சோனாலி பெந்த்ரே தெரிவித்தார். கணவர், குடும்பத்தார் கொடுக்கும் தைரியத்தில் சிகிச்சை பெற்று வருவதாக சோனாலி அவ்வப்போது கூறி வருகிறார். இந்நிலையில் அவர் ஃபிரெண்ட்ஷிப் தினத்தை முன்னிட்டு சமூக வலைதளத்தில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

சோனாலி
புற்றுநோய்க்கு சிகிச்சை எடுத்து வரும் சோனாலி மொட்டை அடித்துள்ளார். மொட்டைத் தலையுடன் தனது தோழிகளான நடிகர் ரித்திக் ரோஷனின் முன்னாள் மனைவி சூசன் கான், முன்னாள் நடிகையான காயத்ரி ஓபராய் ஆகியோருடன் சேர்ந்து எடுத்துக் கொண்ட புகைப்படத்தை சமூக வலைதளத்தில் வெளியிட்டு மொட்டை தான் அழகு என்று கூறியுள்ளார் சோனாலி.
உண்மை
நான் தற்போது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளேன். இதை நான் தற்போது சொல்வதால் மக்கள் வித்தியாசமாக நினைக்கலாம் ஆனால் இது தான் உண்மை. எனக்கு பிடித்தவர்களுடன் நேரம் செலவிடுகிறேன். எனக்கு தெம்பாக இருக்கும் என் தோழிகளுக்கு நான் நன்றிக்கடன் பட்டுள்ளேன். என்னுடன் இருப்பதற்காக அவர்களின் வேலையை எல்லாம் விட்டுவிட்டு இங்கு வந்துள்ளார்கள். உண்மையான நட்பு என்றால் என்ன என்பதை காண்பித்ததற்கு நன்றி என்று சோனாலி தெரிவித்துள்ளார்.
பிரார்த்தனை
சோனாலி பெந்த்ரேவின் ட்வீட்டை பார்த்த ரசிகர்கள் அவருக்காக பிரார்த்தனை செய்வதாக தெரிவித்துள்ளனர். மேலும் மொட்டை அடித்தாலும் அழகாக இருப்பதாக தெரிவித்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











