லப்பர் பந்து ஸ்வாசிகாவுக்கு என்ன ஆச்சு?.. ஷம்பாலாவில் கெத்து பொண்டாட்டியின் ஓவர் கவர்ச்சி விருந்து

சென்னை: லப்பர் பந்து படத்தில் கெத்து (தினேஷ்) மனைவியாக நடித்து பிரபலமடைந்தவர் ஸ்வாசிகா. அந்தப் படத்தைத் தொடர்ந்து மாமன் படத்திலும் முக்கியமான ரோலை ஏற்றிருந்தார். அந்த ரோல் அவருக்கு வரவேற்பையும் பெற்றுக்கொடுத்தது, விமர்சனத்தையும் பெற்றுக்கொடுத்தது. சூழல் இப்படி இருக்க தெலுங்கில் அவர் நடித்திருக்கும் ஷம்பாலா திரைப்படம் கடந்த டிசம்பர் மாதம் வெளியாகியிருந்தது.

கேரளாவை சேர்ந்த ஸ்வாசிகா தமிழில் வைகை படத்தில் தனது நடிப்பு பயணத்தை தொடங்கினார். அந்தப் படம் சரியாக போகவில்லை. அதனையடுத்து தனது தாய் மொழியான மலையாளத்துக்கு சென்ற அவர் ஒரு படத்தில் நடித்துவிட்டு; கோரிப்பாளையம் படத்தில் நடித்தார். தொடர்ந்து தமிழில் சில படங்கள் நடித்த அவருக்கு பெரிய ரெஸ்பான்ஸ் எதுவும் கிடைக்கவில்லை. இதன் காரணமாக மீண்டும் மலையாளத்தில் அடியெடுத்து வைத்தார்.

பிஸியான நடிகை: அங்கு அவருக்கு ரெஸ்பான்ஸ் ஏகோபோகமாக கிடைத்தது. காட்டும் மழையும், ஸ்வர்ண கடுவா, கட்டப்பானையிலே கிருத்திக் ரோஷன், நீலி என வரிசையாக நடித்து தள்ளினார். கிளாமர் ரோல்களோ, ஹோம்லி ரோல்களோ எதை கொடுத்தாலும் அசால்ட்டாக செய்து பெயர் வாங்கிக்கொண்டிருந்தார். இப்படிப்பட்ட சூழலில்தான் தமிழரசன் பச்சமுத்துவின் முதல் படமான லப்பர் பந்து பட்த்தில் நடித்தார்.

From Gethu Pondatti to Glam Avatar Swasika Stuns Fans with Telugu Movie Clips
Photo Credit:

கெத்து பொண்டாட்டி: ஸ்வாசிகாவுக்கு இப்போது 35 வயதுதான் ஆகிறது. ஆனால் அப்படத்தில் வளர்ந்த டீன் ஏஜ் மகளுக்கு தாயாக நடித்திருந்தார். அதுவே பெரிய பாராட்டை பெற்றுக்கொடுத்தது. அதுமட்டுமின்றி படம் முழுக்க அவரது நடிப்பு அனைவரையும் அசர வைத்தது. அந்தப் படத்திலிருந்து அவரை தமிழ்நாட்டில் ரசிகர்கள் கெத்து பொண்டாட்டி என்றே அழைக்கிறார்கள். ஒவ்வொரு ஃப்ரேமிலும் அவரும் கெத்தாகவே காட்சியளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

பாராட்டும், விமர்சனமும்: அந்தப் படத்துக்கு பிறகு மாமன் படத்தில் நடித்திருந்தார். இதிலும் 40 வயதுக்கு மேல் உள்ள ரோலையே ஏற்றிருந்தார். இப்படமும் அவருக்கு பாராட்டை பெற்றுக்கொடுத்தாலும்; கிண்டல்களையும் சந்திக்க வைத்தது. சரியான டாக்சிக் கேரக்டராக ஸ்வாசிகா படத்தில் காட்சியளித்தார் என்றே பலரும் சொன்னார்கள். இருந்தாலும் மாமன் படமும் அவருக்கு ப்ளஸ்ஸாகவே அமைந்தது. அடுத்ததாக கருப்பு, போகி ஆகிய படங்களில் நடித்திருக்கிறார்.

ட்ரெண்டாகும் வீடியோக்கள்: இந்நிலையில் தெலுங்கில் அவர் நடித்த ஷம்பாலா திரைப்படம் கடந்த வருடம் டிசம்பர் மாதம் வெளியானது. ரிலீஸாகி சுமாரான வரவேற்பைதான் படம் பெற்றது. ஆனால் இப்போது அந்தப் படத்திலிருந்து சில காட்சிகள் இணையத்தில் ட்ரெண்டாகியுள்ளன. அதாவது கோலிவுட்டில் அடக்க ஒடுக்கமாக நடித்த ஸ்வாசிகா அப்படத்தில் எக்கச்சக்க கிளாமரை காண்பித்திருக்கிறார். பல காட்சிகளில் அவர் கவர்ச்சி விருந்து படைத்திருப்பதை பார்த்த ரசிகர்களோ நம்ம கெத்து பொண்டாட்டியா இவங்க? ஹோம்லி ரோலுக்கு சூப்பர் ரெஸ்பான்ஸ் கிடைத்துக்கொண்டிருக்கும்போது இப்படி தடாலடியா இறங்கிட்டாங்களே எனவும் கமெண்ட்ஸ் செய்துவருகிறார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X