கன்ட்ரோலே பண்ண முடியல.. நயன்தாரா முதல் ஸ்ரீலீலா வரை.. நடிகைகளை அந்த கோலத்தில் காட்டும் GROK
சென்னை: இனிமேல் இன்ஸ்டாகிராமில் நடிகைகள் நிம்மதியாக சேலை கட்டிய போட்டோக்களை கூட வெளியிட முடியாத சூழல் உருவாகி விடும் போல தெரிகிறது. எக்ஸ் தளத்தின் உரிமையாளர் எலான் மஸ்க் உருவாக்கிய GROK AI ஒரே நொடியில் நடிகைகளை ஆபாசமாக சித்தரித்து புகைப்படங்களை வெளியிட்டு வருகிறது.
இந்திய சினிமா நடிகைகளின் புகைப்படங்களை சிலர் சோஷியல் மீடியாவில் ஷேர் செய்தாலும், நடிகைகள் தங்களின் லேட்டஸ்ட் க்யூட் போட்டோக்களை வெளியிட்டாலும், உடனடியாக க்ரோக்கிடம் பிகினி உடைக்கு மாற்று என்று நெட்டிசன்கள் வக்கிரத்தை கக்க ஆரம்பித்து விடுகின்றனர்.

பிகினி உடைகளை தாண்டி தற்போது க்ளியர் டேப் உடையில் காட்டு, டிரான்ஸ்பரன்ட் பிகினியில் காட்டு என ஆபாசத்தின் உச்சத்துக்கே சமூக வலைதளங்களை பயன்படுத்தும் படித்த நெட்டிசன்களே இப்படி காம இச்சைகளுக்காக சோஷியல் மீடியாவை பயன்படுத்த தொடங்கியுள்ள நிலையில், அரசாங்கம் மற்றும் எலான் மஸ்க் இதை தடுக்க எந்தவொரு நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பது தான் மிகப்பெரிய கொடுமை என்கின்றனர்.
நயன்தாரா முதல் நடுத்தர குடும்பத்து பெண்கள் வரை: இந்த க்ரோக் ஏஐ விளையாட்டில் நயன்தாரா, ஸ்ரீ லீலா, மமிதா பைஜு போன்ற முன்னணி நடிகைகள் மட்டுமின்றி கல்லூரி படிக்கும் இளம் பெண்கள், பள்ளி மாணவிகளின் புகைப்படங்கள் என அனைத்தையுமே பிகினி போட்டோக்களாக மாற்றி இளைஞர்கள் க்ரோக்கை துச்சாதனனாக மாற்றி வருகின்றனர். இதை தடுக்க எந்த கண்ணன் எங்கே இருந்து வரப்போகிறார் என்று தான் தெரியவில்லை என பொதுமக்கள் புலம்புகின்றனர்.

நார்மலைஸ் ஆகிடும்: ஆரம்பத்தில் இந்த விஷயம் ஆபாசமாக இருந்தாலும், காலப்போக்கில் இது நார்மலைஸ் ஆகிவிடும். பெண்கள் தங்களின் ஆபாச புகைப்படங்கள் வெளியானால் கூட அதை பற்றி கவலைப்பட மாட்டார்கள். அதுவெறும் ஏஐ எடிட் தான் என்கிற புரிந்துணர்வு வந்துவிடும். இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சோஷியல் மீடியாக்கள் மூலம் நடிகைகள் கவர்ச்சி போட்டோக்களை போட்டு காசு பார்க்க முடியாது என்று ஏஐ ஆதரவாளர்கள் ஒரு பக்கம் சப்பைக் கட்டு கட்டி வருகின்றனர்.
அமைதி காக்கும் அரசாங்கம்: எலான் மஸ்க்கிற்கும் எக்ஸ் நிறுவனத்துக்கும் இதுதொடர்பாக உலகளவில் அழுத்தம் தரப்படவில்லையா? கலாசாரத்தை மதிக்கும் இந்திய அரசாங்கம் இதை கட்டுப்படுத்த என்ன செய்கிறது என்கிற கேள்வியும் எழுந்துள்ளது. கூடிய சீக்கிரமே க்ரோக்கின் இந்த ஏஐ அட்டகாசத்துக்கு ஒரு முடிவு கட்ட வேண்டும் என பல பெண்கள் மற்றும் பிரபலங்கள் குரல் கொடுத்துள்ளனர். ராஷ்மிகாவை டீப் ஃபேக் செய்த போது அமிதாப் பச்சன் குரல் கொடுத்த நிலையில், முன்னணி நடிகர்களும் இதை எதிர்த்து குரல் கொடுத்தால் அழுத்தம் அதிகரிக்கும் என்கின்றனர்.


Click it and Unblock the Notifications











