கடந்த ஒரு மாதத்திற்குள் த்ரிஷா சந்தித்த மூன்று சர்ச்சைகள்.. எவ்வளவு தான் தாங்குவாங்க?

சென்னை: தமிழ் சினிமாவில் மட்டுமல்லாமல் தென்னிந்திய சினிமாவில் இருக்கும் முன்னணி நடிகைகளில் ஒருவர் நடிகை த்ரிஷா. இவர் குறித்த பல சர்ச்சைகள் தொடர்ந்து இணையத்தில் வெளியாகி பகீர்களைக் கிளப்பிக் கொண்டு இருக்கின்றன. இது ஒருபுறம் இருக்க, சிலர் நேரடியாகவே த்ரிஷாவை இழுத்து வீதியில் விட்டுவிடுகிறார்கள். ஒரு கட்டம் வரை பொறுமையாக இருக்கும் த்ரிஷா, ஒரு கட்டத்திற்கு மேல் இறங்கி அடித்தால் தான் அடங்குவாங்க போல என்ற மனநிலையில் ரியாக்ட் செய்துவிடுகிறார். அப்படி அவர் ரியாக்ட் செய்ததுதான் அவரது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் அவர் குறித்த பொய்யான தகவல்களைப் பட்டியலிட்டது.

இப்படி இருக்கையில் கடந்த ஒரு மாதத்திற்குள்ளாக நடிகை த்ரிஷா எதிர்கொண்ட மிகவும் முக்கியமான மூன்று சர்ச்சைகள் மற்றும் பிரச்னைகளைப் பார்க்கலாம். முதலாவதாக பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் நடிகரும் தமிழக வெற்றிக் கழகத்தின் விஜய்யை விமர்சிக்கும் போது, நடிகை த்ரிஷாவையும் தேவையில்லாமல் விமர்சித்தார். இதற்கு நடிகை த்ரிஷா மிகவும் நாகரீகமாக தனது பதிலடியைக் கொடுத்தார்.

From Political Controversies to Viral Rumours 3 Major Challenges Trisha Faced Recently

விஜய் உடன் திருமண சர்ச்சை?: அதேபோல் நடிகர் விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதாவின் விவாகரத்து தகவல் வெளியாகி அடுத்த வாரத்தில், விஜய் உடன் இணைந்து கொண்டு தயாரிப்பாளர் இல்லத் திருமணத்திற்கு ஒன்றாக சென்றார். இவர்கள் இருவரும் ஒன்றாக சென்றதுமே, விஜய்க்கும் த்ரிஷாவுக்கும் திருமணம் என்று எல்லாம் நெட்டிசன்கள் சர்ச்சைகளைப் பறக்கவிட்டனர். இந்நிலையில் பார்த்திபன் தெரிவித்த கருத்து சர்ச்சையாக மாற, அதற்கு த்ரிஷா பதிலடி கொடுக்க, பார்த்திபனுக்கும் த்ரிஷாவுக்கும் வார்த்தைப் போர் ஏற்பட்டது.

From Political Controversies to Viral Rumours 3 Major Challenges Trisha Faced Recently

சினிமாவில் இருந்து விலகலா?: அதேபோல் தற்போது, நடிகை த்ரிஷா சினிமாவில் இருந்து விலக உள்ளதாகவும், விரைவில் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்து கொண்டு முழு நேர அரசியலில் கவனம் செலுத்தப் போகிறார் என்றும் தகவல்கள் பரவியது. இதற்கும் த்ரிஷா தனது ஸ்டைலில் பதிலடி கொடுத்து விட்டார். இதையெல்லாம் பார்க்கும்போது த்ரிஷாவாக இருப்பதே பெரிய சவாலான காரியம் போல என்று கூறும் அளவுக்கு இருக்கிறது. ஆனாலும் த்ரிஷா தன்னை நோக்கி வரும் விமர்சனங்கள், கிசுகிசுக்கள் என எல்லாவற்றையும் கடந்து, திரைத்துறையில் முன்னணி நடிகையாகவே வலம் வந்து கொண்டு இருக்கிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X