த்ரிஷா முதல் சினேகா வரை.. பிரபலங்களுக்கு சேலை கட்டிவிடும் நபர்.. யாரு இந்த திவ்யன் ஜெயரூபன்?

சென்னை: தளபதி விஜய்யின் கோட் படத்தில் வசீகரா படத்துக்குப் பிறகு அவருக்கு ஜோடியாக நடித்து மீண்டும் ரசிகர்களை கவர்ந்த நடிகை சினேகா தனது துணிக்கடை வியாபாரத்தையும் மென்மேலும் பெருக்கி வருகிறார். இந்நிலையில், நேற்று நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றுக்காக சினேகா பட்டு சேலையில் ராஜமாதா போல ரெடியாகி வந்த காட்சிகள் வைரலாகி வருகின்றன.

நடிகை சினேகாவுக்கு பிரபல டிராப்பிஸ்ட் திவ்யன் ஜெயரூபன் தான் டபுள் டிராப் சேலை கட்டி விட்டுள்ளார். அந்த வீடியோவை நடிகை சினேகா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

From Trisha to Sneha prefers Divyan Jayaruben for their Saree Drapping
Photo Credit:

மார்வலஸ் மார்கழி என்கிற ராம்ப்வாக் நிகழ்ச்சிக்காக சினேகாவுக்கு திவ்யன் ஜெயரூபன் சேலை கட்டி விட்டுள்ளார். இவருக்கு மட்டுமின்றி த்ரிஷா, விஜே பிரியாங்க, சமந்தா உள்ளிட்ட பலருக்கும் இவர் ஆடைகளை சரியாக அணிவித்து அழகுப்படுத்தும் வேலையை பார்த்து வருவதை அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோக்களாக வெளியிட்டு வருகிறார்.

சினேகாவுக்கு சேலை கட்டிவிட்ட பிரபலம்: நடிகை சினேகா சினிமா, சின்னத்திரை என பிசியாக உள்ளார். மேலும், நயன்தாரா, சமந்தா போல பிசினஸிலும் அதிக கவனம் செலுத்தி வருகிறார். சினேகாலயா என தனியாக தனது துணிக்கடைகளையும் சில இடங்களில் ஆரம்பித்து நடத்தி வருகிறார். மார்வலஸ் மார்கழி நிகழ்ச்சியில் தனது கணவர் பிரசன்னாவுடன் சினேகா பட்டுப்புடவையில் பங்கேற்றுள்ளார். அந்த நிகழ்ச்சிக்கு ரெடியாக சினேகாவுக்கு அட்டகாசமாக சேலையை கட்டி விட்டுள்ளார் பிரபல டிராப்பிஸ்ட் திவ்யன் ஜெயரூபன். அவரை சினேகா அன்புடன் ஹக் பண்ணி பாராட்டிய காட்சிகளும் ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளன.

த்ரிஷா முதல் சமந்தா வரை: நடிகை சினேகாவுக்கு மட்டுமின்றி டாப் ஹீரோயின்களான த்ரிஷா, சமந்தா உள்ளிட்ட பல சினிமா பிரபலங்களுக்கு பெரிய பெரிய நிகழ்ச்சிகளுக்காக அவர்கள் பங்கேற்கும் போது இவர் தான் சேலை கட்டி விடுகிறார். சமீபத்தில், விஜே பிரியங்கா ஒரு ஷோ ஹோஸ்ட் பண்ண நிலையில், அவருக்கும் இவர் சேலை கட்டிய வீடியோ காட்சிகள் இவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிரப்பட்டுள்ளன. பிரபலங்களின் ஃபேவரைட்டான ஆடை வடிவமைப்பாளரும், ஆடைகளை அணிவிப்பவருமாக உள்ளார் திவ்யன் ஜெயரூபன்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X