»   »  கஜாலாவும், ஆச்சாரமும்!

கஜாலாவும், ஆச்சாரமும்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

ராம் ஓடியதால் புதிதாக சில படங்கள் தமிழில் புக் ஆகியுள்ளதாம். இதனால் கஜாலா கொஞ்சம் குஜாலாகவே இருக்கிறார்.

தமிழில் ஓரிரு சிபிராஜ் உள்ளிட்ட ஹீரோக்களுடன் படங்களில் கஜாலா நடித்திருந்தாலும், தமிழ் ரசிகர்களால்கவனிக்கப்படாமலேயே இருந்தார். இதனால் அப்செட் ஆன கஜாலா தெலுங்குக்குப் போனார். அங்கு இவர் நடித்த படங்கள்தொடர் ஹிட். ஆகவே, அங்கேயே காலம் தள்ள ஆரம்பித்தார்.

ஆனால், த்ரிஷாவின் வருகைக்குப் பின், அங்கு த்ரிஷா கட்டவிழ்த்துவிட்டு வரும் கவர்ச்சி அலையாலும் கஜாலாவுக்குவாய்ப்புகள் குறையத் தொடங்கின. இதனால் வருத்தத்தில் இருந்தார் கஜாலா.

மனரீதியில் சோர்ந்திருந்த இந்தச் சமயத்தில் ஒரு ஹீரோ காதலிப்பதாக சொல்லிவிட்டு கம்பி நீட்டினார். இதனால் தூக்கமாத்திரிகைகளை ஏகத்துக்கும் முழுங்கி தற்கொலைக்கு முயன்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார் கஜாலா.

சில காலம் அமைதியாக இருந்து வந்த கஜாலாவுக்கு ராம் பட வாய்ப்பு தேடி வந்தது. ஆனால், படம் ரொம்ப காலமாக தயாரிப்பில்இருந்ததால், இது வெளியாகுமா என்பதே பலரைப் போலவே கஜாலாவுக்கும் சந்தேகமாகத் தான் இருந்தது.

ஆனால், படம் வெளியாகி சூப்பர் ஹிட் ஆனதோடு ஹீரோ ஜீவாவைப் போல, கஜாலாவும் நன்றாகவே பேசப்படுகிறார்.

இந்த வெற்றிப் படத்தாலும் இதனால் தனக்குக் கிடைக்க ஆரம்பித்துள்ள புதிய வாய்ப்புக்களாலும் உற்சாகமாகிவிட்டார் கஜாலா.

ஆனால், வருகிற வாய்ப்பையெல்லாம் அள்ளிப் போட்டுக் கொள்ளாமல், நல்ல கதையம்சம் கொண்ட படங்களையே செலக்ட்செய்து நடிக்கவிருப்பதாக கூறுகிறார் கஜாலா.

ராம் வெளியானால் எனது கேரக்டரும் நன்றாகப் பேசப்படும் என்பதும் எனக்கு முன்பே தெரியும். இனிமேல் தமிழில் தீவிரகவனம் செலுத்தப் போகிறேன்.

நல்ல கேரக்டர்களாக செலக்ட் செய்து நடிக்கப் போகிறேன். அதற்கு தமிழை விட்டால் வேறு எங்கும் வாய்ப்பில்லை. தெலுங்கில்கவர்ச்சியே பிரதானமாகிவிட்டது. அதற்காக தமிழில் நான் கவர்ச்சி காட்ட மாட்டேன் என்று கூறவில்லை. நடிப்புக்கும்முக்கியத்துவம் கொடுக்கப் போகிறேன்.

உண்மையில், எனது குடும்பம் மிகவும் ஆச்சாரமானது தெரியுமா?. ஒவ்வொன்றையும் பார்த்து பார்த்து செய்வது, செயல்படுவதுஎனது குடும்பத்தின் வழக்கம்.

ஆனால் சினிமாவில் அப்படியெல்லாம் கட்டுப்பெட்டித்தனமாக இருக்க முடியாதே. விட்டுத் தந்து தான் போகவேண்டியிருக்கிறது. இதனால் என்பதால் கவர்ச்சி காட்ட வேண்டியதையும் என்னால் தவிர்க்க முடியவில்லை.

அளவுக்கு உட்பட்டு கிளாமராக நடிக்கலாம். அதில் தவறு ஏதும் இல்லையே என்று படபடவென்று பேசித் தள்ளுகிறார் கஜாலா.

மறுபடியும் மாத்திரை சாப்பிட மாட்டீங்களே!

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil