Anjali: முத்தக்காட்சி..படுக்கையறை காட்சி குறித்து மனம் திறந்த அஞ்சலி!

சென்னை: தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகியாக வலம் வந்தவர் நடிகை அஞ்சலி. இவரின் எதார்த்தமான பேச்சும், அழகும் தமிழ் ரசிகர்களுக்கு பிடித்துப்போனதால் இவருக்கு என்று தனி ரசிகர் கூட்டம் உண்டு. கற்றது தமிழ்,அங்காடித் தெரு, கலகலப்பு, இறைவி போன்ற ஹிட் படங்களில் நடித்த இவர் சில ஆண்டுகளாக தமிழ் படங்களில் தலைகாட்டாமல் இருக்கிறார். தெலுங்கு சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ள இவர் படுக்கை அறை காட்சியில் நடிப்பது குறித்து மனம் திறந்து பேசி உள்ளார்.

இயக்குனர் ராம் இயக்கத்தில் ஜீவா நடிப்பில் வெளியான கற்றது தமிழ் என்ற திரைப்படத்தில் நடித்த அஞ்சலிக்கு அப்படம் நல்ல ஒரு தொடக்கமாகவே இருந்தது. அந்த படத்தைத் தொடர்ந்து ஒரு சில படங்களில் நடித்து வந்த அஞ்சலி, அங்காடி தெரு என்ற திரைப்படத்தில் கனி என்ற ரோலில் எதார்த்தமாக நடித்து பாராட்டை பெற்றார். இந்த படத்தை தொடர்ந்து இவருக்கு பட வாய்ப்புகளும் குவிந்தன.

game changer actress Anjali talks about bedroom scene

அஞ்சலி ஜெய் காதல்: சரவணன் இயக்கத்தில் உருவான எங்கேயும் எப்போதும் படத்தில் ஜெய்யுடன் இணைந்து நடித்த போது இருவரும் காதலிக்கத் தொடங்கினர். அந்த படத்தில் இருவருக்கும் இடையேயான கேமிஸ்ட்ரி பக்காவாக இருந்ததே இவர்களின் காதலை உறுதிச்செய்தது. அதன்பின் இருவரும் ஒரே வீட்டில் வாழ்ந்து வந்ததாகவும், லிவிங் டுகெதர் ரிலேஷன்ஷிப்பில் இருந்ததாகவும் சொல்லப்பட்டது. இருவரும் விரைவில் திருமணம் செய்து கொள்வார்கள் என்று, அனைவரும் நினைத்திருந்த நிலையில், திடீரென இருவரும் பிரிந்துவிட்டனர்.

பிரிந்துவிட்டனர்: ஜெய் அஞ்சலி பிரிவுக்கு காரணம் ஜெய்யின் மதுபழக்கம் தான் என்றும், அது அஞ்சலிக்கு பிடிக்கவில்லை. பல முறை எடுத்து சொல்லியும் ஜெய் அதை காதில் வாங்கிக் கொள்ளாததால், அஞ்சலி டாடா காட்டிவிட்டு ஆந்திரா சென்றுவிட்டார் என்று மூத்த பத்திரிக்கையாளரான பயில்வான் ரங்கநாதன் பேட்டி ஒன்றில் கூறியிருந்தார். அதன் தமிழ் சினிமாவில் தலைகாட்டாத அஞ்சலி, ஜான்சி, பாஃல் போன்ற தொடரில் நடித்தார். மேலும், ஆந்தாலஜி படமான நவரசாவில் விக்னேஷ் சிவன் இயக்கிய லவ் பண்ணா உட்றனும் என்ற குறும்படத்திலும் நடித்திருந்தார். தற்போது இவர் ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும், கேம் சேஞ்சர் படத்தில் நடித்து வருகிறார்.

game changer actress Anjali talks about bedroom scene

படுக்கறையறை காட்சியில் நடிக்கும் போது: இந்நிலையில் தெலுங்கு ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளித்து அள்ள அஞ்சலி, நடிகருடன் ரொமான்ஸ் காட்சிகளில் நடிக்கும் போது மிகவும் சங்கடமாக இருக்கும். உடன் நடிக்கக்கூடிய நடிகர் தன்னை பற்றி என்ன நினைப்பார்? ஏதாவது தவறாக நினைத்து விடுவாரா? என்றெல்லாம் மனம் நினைக்கும். இது நடிகைக்கு மட்டுமில்லை நடிகர்களுக்கு தோன்றும். காதலன் காதலி ரொமான்ஸ் செய்கிறார்கள் என்றால் இருவருக்குள்ளும் இருக்கும் புரிதல், அது வேறு விஷயம்.

game changer actress Anjali talks about bedroom scene

மனநிலை மாறவேண்டும்: அப்படி இருக்கும் பொழுது அவர்களுடன் இப்படியான ரொமான்ஸ் காட்சிகள் முத்த காட்சிகள் நடிக்கும் போது ஒருவித நெருடலாகவே இதுதான் உண்மை. ஆனால், படம் பார்ப்பவர்களோ, ரசிகர்கள் மத்தியில் ரொமான்ஸ் காட்சி என்றாலே நடிகைகள் நடிகர்கள் ஜாலியாக இருப்பார்கள் என்று நினைக்கிறார்கள். முதலில் இந்த நிலைமாறவேண்டும் என்று நடிகை அஞ்சலி அந்த பேட்டியில் மனம் திறந்து பேசி உள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X