எதுவுமே வேண்டாம்னு ஒதுங்கி இருக்கும் கனகா.. உருவ கேலி செய்யும் கங்கை அமரன்.. என்ன சார் இதெல்லாம்?
சென்னை: கரகாட்டக்காரன் திரைப்படத்தில் நடித்து புகழடைந்த கனகா தமிழ் சினிமாவின் டாப் நடிகைகளில் ஒருவராக வலம் வந்தவர். அவரது தாய் தேவிகாவின் மரணம் அவரை நிலைகுலைய செய்ய சினிமாவிலிருந்து ஒட்டுமொத்தமாக ஒதுங்கினார். பல வருடங்கள் தனிமையிலேயே இருந்துவருகிறார். இந்நிலையில் அவரை சினிமாவில் அறிமுகப்படுத்திய கங்கை அமரன் உருவ கேலி செய்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
நடிகை தேவிகாவின் மகளான கனகாவை கங்கை அமரன் தனது கரகாட்டக்காரன் திரைப்படத்தில் ஹீரோயினாக அறிமுகம் செய்தார். ராமராஜன் ஹீரோவாக நடித்திருந்தார். படம் மெகா ப்ளாக் பஸ்டர் ஆனது. கனகாவின் நடிப்பு முதல் படம் போன்றே இல்லை. முதல் படத்தின் வெற்றிக்கு பிறகு வரிசையாக அவருக்கு வாய்ப்புகள் கிடைத்தன. அதனை பயன்படுத்தி தனக்கென தனி மார்க்கெட்டை பிடித்துக்கொண்டார் அவர்.
தாயின் மரணம்: அப்படிப்பட்ட சூழலில்தான் அவரது தாய் தேவிகா மரணமடைந்தார். தாய் மீது அளவு கடந்த பாசம் வைத்திருந்த கனகாவால் அந்த இழப்பை தாங்கிக்கொள்ளவே முடியவில்லை. அதேபோல் அவரை ஒருதலையாக ஒருவர் காதலித்ததாகவும்; அதை சரியாக புரிந்துகொள்ளாமல் அந்த நபருக்கு பிரச்னைகளை கொடுத்ததாகவும் ஒரு தகவல் ஓடியது குறிப்பிடத்தக்கது. இவையெல்லாம் சேர்ந்து கனகாவை தீராத மன உளைச்சலில் தள்ளிவிட்டதாகவும் சிலர் கூறுவதுண்டு.

தனிமையில் கனகா: சினிமாவிலிருந்து ஒதுங்கிய அவர் ஒட்டுமொத்தமாக அனைவரிடமிருந்தும் தன்னை தனிமைப்படுத்திக்கொண்டர். தந்தையுடனும் அவருக்கு பிரச்னை ஏற்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. சூழல் இப்படி இருக்க தனிமையில் இருந்த அவரை சில வருடங்களுக்கு முன்பு நடிகை குட்டி பத்மினி நேரில் சந்தித்தார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் பயங்கர ட்ரெண்டாகின. முக்கியமாக கனகா ஆளே தெரியாமல் உடல் எடை கூடியிருந்ததை பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சி அடையவும் செய்தார்கள்.
பேட்டிக்கு முயற்சிகள்: குட்டி பத்மினிக்கு பிறகு பலர் கனகாவை சந்திக்க முயன்றாலும் அவர்களால் பார்க்க முடியவில்லை. மேலும் கனகாவை பேட்டி எடுப்பதாகவும்; விரைவில் அது தனது யூடியூப் சேனலில் வரும் என்றும் பத்மினி கூறியிருந்தார். எனவே அந்தப் பேட்டிக்கு ரசிகர்கள் ஆவலாக இருந்தார்கள். ஆனால் கனகா பேட்டி கொடுக்கவில்லை. இந்நிலையில் அவரை சினிமாவில் அறிமுகம் செய்த கங்கை அமரன் பேசியிருக்கும் விஷயம் விமர்சனத்தை பெற்றிருக்கிறது.
குண்டு கனகா: அவர் சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். அப்போது அவரிடம் கரகாட்டக்காரன் 2 படம் பற்றி கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், "இரண்டாம் பாகம் எடுத்தாலே இதைவிட முதல் பாகம் நன்றாக இருக்கும் என்று சொல்லிவிடுவார்கள். அந்தப் படத்தில் வேறு நடிகர்களையும் நடிக்க வைக்க முடியாது. கவுண்டமணிக்கு உடல்நிலை சரியில்லை. செந்தில் படங்கள் பண்ணுவதில்லை. ராமராஜன் உருவம் மாறி போயிட்டாரு. கனகா குண்டாகிவிட்டாங்க. இப்போது அவர்களை வைத்து எப்படி இரண்டாவது பாகத்தை எடுக்க முடியும்" என்றார்.


Click it and Unblock the Notifications











