ஏன் கல்யாணம் பண்ணேனு யோசிச்சேன்.. கருடன் பட நடிகை ஓபன் டாக்!
சென்னை: நெடுஞ்சாலை, ஜீரோ, தீரா காதல், அதே கண்கள் போன்ற பல படங்களில் நடித்து பிரபலமான நடிகை ஷிவதா நாயர், திருமணத்திற்கு ஒரு வாரத்திற்கு முன்பே திருமணத்தை நிறுத்திவிடலாம் என்று நினைத்தேன்,ஆனால் நடந்துவிட்டது என்று தனது திருமண வாழ்க்கை குறித்து மனம் திறந்து பேசி உள்ளார்.
இயக்குனர் கிருஷ்ணன் இயக்கத்தில் 2004 ஆம் ஆண்டு ஆரி அர்ஜுன் நடிப்பில் வெளியான நெடுஞ்சாலை படத்தின் மூலம் தமிழ் சினிமாவின் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை ஷிவதா நாயர். கேரளாவை பூர்வீகமாக கொண்ட இவர் மலையாளத்தில் ஒரு சில திரைப்படங்களில் நடித்து வருகிறார். தமிழில் இவர் நடித்த முதல் படம் அவருக்கு தமிழ் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றன. நெடுஞ்சாலை படத்தில் கிடைத்த வெற்றியை தொடர்ந்து நடிகை ஷிவதா, ஜீரோ, அதே கண்கள், நித்தம் ஒரு வானம், வல்லவனுக்கு வல்லவன், தீரக் காதல் போன்ற படங்களில் நடித்து பிரபலமானார்.

திரைப்படங்களில் பிஸியாக நடித்துக்கொண்டிருந்த இவர் திடீரென திருமணம் செய்து கொண்டார். அவருக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தும் கூட இளமை மாறாது அதே பொலிவுடன் ஹீரோயினாக தமிழ் மற்றும் மலையாள மொழி படங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார்.
இந்நிலையில், சூரி நடிப்பில் சக்கைப்போடு போட்டு வரும் கருடன் படத்தில் நடித்துள்ளார். அந்த படம் குறித்து பேசிய அவர், கருடன் படத்தை தியேட்டரில் மக்களோடு மக்களாகத்தான் பார்த்தேன். எல்லாரும் கையை தட்டி ரசித்து பார்த்தார்கள், அதைபார்க்கும் போது எனக்கு சந்தோஷமா இருந்தது. இந்த படத்தில் சசிக்குமாருக்கு ஜோடியாக நடித்து இருக்கிறேன், படப்பிடிப்பின் போது தினமும், எதாவது சாப்பிடுவதற்கு வந்துவிடும், படத்தில் எப்படி நட்புனா சசிக்குமாரை சொல்லுவார்களோ அதைப்போல நிஜத்தில் சசிக்குமார் நட்புக்கு மரியாதை கொடுப்பார் என்றார்.
தனது திருமண வாழ்க்கை குறித்து பேசிய அவர், நாங்கள் இருவரும் காதலித்து தான் திருமணம் செய்து கொண்டோம். அவர் என்னுடன் கல்லூரியில் படித்தார். அப்போதிலிருந்து காதலித்துக் கொண்டிருக்கிறோம். நாங்கள் இருவரும் காதலிக்கிறோம் என்றாலும் கூட அடிக்கடி சேர்ந்து கொண்டு வெளியில் போது இல்ல, மணிக்கணக்கில் போனில் பேசியது இல்லை. இருவரும் காதலிக்கிறோம். அவர் அவருடைய வேலையை பார்த்துக் கொண்டிருப்பார், நான் என்னுடைய வேலையை பார்த்துக் கொண்டிருப்பேன்.
இப்படியேதான் எங்கள் காதல் நாட்கள் சென்றது. திருமணத்திற்கு ஒரு வாரத்திற்கு முன்பு கூட கல்யாணம் வேணுமானு கேட்டேன். அவர் அப்படியே ஷாக்காகி விட்டார். ஒரு கட்டத்தில் திருமணம் செய்து கொண்டோம் திருமணத்திற்கு பிறகும் அவர் எப்படி திருமணத்திற்கு முன்பு இருந்தாரோ அதேபோலத்தான் இப்போதும் என்னுடன் அன்பாக இருக்கிறார். என்னுடைய சினிமா வாழ்க்கைக்கு துணை நிற்கிறார் என்று பேட்டியில் கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











