பச்சைப்புடவை உத்துப்பாக்குது.. கழுத்துல என்னம்மா சீட்டுக் கட்டா?.. கட்டா குஸ்தி 2 மீனு டீச்சர்!

சென்னை: செல்லா அய்யாவு இயக்கத்தில் விஷ்ணு விஷால், ஐஸ்வர்யா லட்சுமி, மோகஷா நடிப்பில் வெளியான கட்டா குஸ்தி 2 திரைப்படம் 46.2 கோடி வசூலை கடந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. நடிகர் விஷ்ணு விஷாலுக்கு பல வருடங்கள் கழித்து ஒரு வெற்றிப் படமாக கட்டா குஸ்தி 2 அமைந்துள்ளது.

இந்தளவுக்கு இந்த படம் வெற்றி பெற ஐஸ்வர்யா லட்சுமியின் நடிப்பு ஒரு பக்கம் என்றாலும், நடிகை மோக்‌ஷா போட்ட "அப்படிப்போடு" கிளாமர் ஆட்டம் தான் மெயின் ரீசன் என ரசிகர்கள் மோக்‌ஷாவை கொண்டாடி வருகின்றனர்.

Gatta Kusthi 2 Meenu Teacher Fame Actress Moksha latest Saree Stills
Photo Credit:

இதுதான் தக்க சமயம் என நினைத்த மீனு டீச்சர் வரிசையாக இன்ஸ்டாகிராமில் கவர்ச்சி போட்டோக்களையும் சேலையில் செம சூப்பராக இருக்கும் போட்டோக்களையும் வெளியிட்டு இன்ஸ்டாகிராம் ஃபாலோயர்களை அதிகரித்து வருகிறார்.

யாரு இந்த மோக்‌ஷா?: மேற்கு வங்கத்தில் உள்ள பாரக்பூரில் பிறந்தவர் தான் நடிகை மோக்‌ஷா. வங்காள மொழியில் 2019ம் ஆண்டு வெளியான ஃபில்ட காபி லிக்வர் சா படத்தில் துணை நடிகையாக நடித்து அறிமுகமானார். அதன் பின்னர் சுவிட்சர்லாந்து படத்திலும் நடித்தார். 2020ல் வெளியான கர்மா எனும் பெங்காலி படத்தில் தான் ஹீரோயினாக ஆனார். 2022ல் தெலுங்கில் வெளியான லக்கி லக்‌ஷ்மன் படத்தின் மூலம் தென்னிந்திய பக்கம் வந்த இவர், டோலிவுட்டில் பல படங்களில் நடித்து வந்தார். கடைசியாக தமிழில் தற்போது கட்டா குஸ்தி 2வில் செகண்ட் ஹீரோயினாகவே நடித்துள்ளார்.

Gatta Kusthi 2 Meenu Teacher Fame Actress Moksha latest Saree Stills
Photo Credit:

மீனு டீச்சர்: விஷ்ணு விஷால் மற்றும் ஐஸ்வர்யா லட்சுமி இருவரும் இணைந்து நடித்த கட்டா குஸ்தி படம் ஹிட் அடித்த நிலையில், பார்ட் 2வில் இன்னொரு ஹீரோயின் இருந்தால் நல்லா இருக்குமே என மீனு டீச்சர் கதாபாத்திரத்தில் மோக்‌ஷாவை செல்லா அய்யாவு நடிக்க வைத்துள்ளார். விஜய் நடித்த கில்லி படத்தில் இடம்பெற்ற அப்படிப்போடு பாடலுக்கு படத்தில் 2 முறை டான்ஸ் ஆடி ரசிகர்களை ஒட்டுமொத்தமாக கவர்ந்து விட்டார் மீனு டீச்சர். படத்தில் இவரது கூந்தல் நீளம் என காட்சி இருப்பதை பார்த்து நிஜமாகவே அவர் முடி நீளம் என நினைத்த ரசிகர், சக்சஸ் மீட்டில் மீனு டீச்சரை ஷார்ட் ஹேரில் பார்த்து ஷாக்காகி விஷ்ணு விஷாலிடமே கேட்டது சுவாரஸ்யத்தை கூட்டியது.

கழுத்தில் என்னம்மா டிசைன்: இளம் பச்சைப் புடவைய அணிந்துக் கொண்டு கழுத்தில் சீட்டுக் கட்டுப் போன்ற டிசைனில் ஒரு துணியை கட்டிக் கொண்டு மோக்‌ஷா வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் போட்டோக்களை பார்த்து ரசிகர்கள் லைக்குகளை குவித்து வருகின்றனர். கட்டா குஸ்தி 2 வெற்றியைத் தொடர்ந்து கோலிவுட்டில் இவருக்கு மேலும், சில படங்கள் குவியும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X