இரண்டே 2 கேள்வி கேட்ட ஆர்.ஜே.: எப்.எம். பேட்டியின் பாதியிலேயே கிளம்பிய நடிகை கவுதமி

By Siva

சென்னை: பிரபல பண்பலை வானொலி பேட்டியில் கேட்கப்பட்ட கேள்வியால் கோபம் அடைந்த நடிகை கவுதமி பேட்டியை பாதியிலேயே முடித்துக் கொண்டு கிளம்பினார்.

நடிகை கவுதமி பிரபல பண்பலை வானொலி நிலையத்திற்கு சென்றார். அவரிடம் பேட்டி எடுத்தவர் நீங்கள் ஏன் உலக நாயகன் கமல் ஹாஸனை பிரிந்தீர்கள்? என்று கேட்டார்.

இந்த கேள்வியால் லைட்டா கோபம் அடைந்தார் கவுதமி. இந்நிலையில் பேட்டி எடுத்த ஆர்ஜே தனது அடுத்த கேள்வியை கேட்டதும் கவுதம் கோபத்தில் கொந்தளித்து பேட்டியை பாதியிலேயே முடித்துக் கொண்டு கிளம்பிவிட்டார்.

விளம்பரமா?

விளம்பரமா?

அந்த ஆர்.ஜே. கேட்ட கேள்வி இது தான், முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் குறித்து நீங்கள் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியது விளம்பரம் தேடத் தானே?

ஜெயலலிதா

ஜெயலலிதா

ஜெயலலிதாவின் மரணம் குறித்து பலருக்கும் பல சந்தேகங்கள் இருக்கும்போது அது குறித்து விளக்கம் கேட்டு மோடிக்கு கடிதம் எழுதியவர் கவுதமி. ஆனால் அவர் கடிதத்திற்கு பதில் இன்னும் கிடைத்தது போன்று தெரியவில்லை.

கமல்

கமல்

கமல் ஹாஸனை திருமணம் செய்யாமலேயே அவருடன் 13 ஆண்டுகளாக லிவ் இன் முறைப்படி வாழ்ந்தவர் கவுதமி. கமலை பிரிவதாக அவர் தான் முதலில் அறிவித்தார்.

காரணம்

காரணம்

கமலை பிரிவதாக அறிவித்தாலும் அவர் அதற்கான காரணத்தை கூறவில்லை. தனது மகள் சுப்புலட்சுமிக்கு நல்ல தாயாக இருக்க விரும்புவதாக மட்டும் கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X