இது உமன் பவர் அல்ல டேலண்ட் பவர்.. சமந்தாவின் ‘எங்கள் தங்கம்’ பட விழாவில் கெளதமி ஓபன் டாக்!

சென்னை: நந்தினி ரெட்டி இயக்கத்தில் சமந்தா தயாரித்து நடித்துள்ள எங்கள் தங்கம் திரைப்படம் ஜூன் 19ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. தெலுங்கில் மா இன்டி பங்காரம் எனும் பெயரில் வெளியாகவுள்ள இந்த படத்துக்கு தமிழில் அழகான எம்ஜிஆர் பட தலைப்பு கிடைத்துள்ளது.

சென்னை சத்யம் தியேட்டரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சமந்தா, கெளதமி உள்ளிட்ட பிரபலங்கள் கலந்துக் கொண்டு படத்தை பற்றி பேசினர். பாபநாசம் படத்துக்குப் பிறகு தமிழ் படங்களை தவிர்த்து விட்டு தெலுங்கு மொழியில் பல படங்களில் நடித்து வருகிறார் கெளதமி.

Gautami speaks Samantha s Engal Thangam is not a Women Power it s Talent Power

சினிமா, அரசியல் என கடுமையாக உழைத்து வரும் கெளதமி கடைசியாக சமன்ந்தாவின் சாகுந்தலம் படத்தில் நடித்திருந்தார். அதன் பிறகு மீண்டும் சமந்தா நடிப்பில் உருவாகியுள்ள எங்கள் தங்கம் படத்தில் நடித்துள்ள அவர் நேற்று சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், சமந்தா குறித்தும் படம் பற்றியும் பேசியது ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.

எங்கள் தங்கம் படம் பற்றி கெளதமி:

"ஒரு திரைப்படத்தின் மூலம் உங்களைச் சந்திப்பது எப்போதுமே மகிழ்ச்சியான விஷயம். அதிலும் 'எங்கள் தங்கம்' போன்ற ஒரு சிறப்பான படத்திற்காக இந்த மேடையில் நிற்பது எனக்கு மிகவும் சந்தோஷமாக இருக்கிறது.

இந்தப் படத்தில் நடித்த அனுபவம் மிகவும் இனிமையானது. படப்பிடிப்பு எப்போது தொடங்கி எப்போது முடிந்தது என்பதே தெரியவில்லை. படம் முடிந்துவிட்டதா, இன்னும் சில நாட்கள் படப்பிடிப்பு தொடர்ந்திருக்கலாமே என்று நினைக்க வைத்த அளவுக்கு மகிழ்ச்சியாக இந்தப் பயணம் இருந்தது.

சமீப காலமாக நான் அதிகமான படங்களை ஏற்றுக் கொள்ளவில்லை. ஆனால் இந்தப் படத்தை ஒப்புக்கொண்டதற்கு முக்கியக் காரணம் இதன் பின்னால் இருந்த மனிதர்கள் தான். தயாரிப்பாளரும் இயக்குநரும் ஒரு படத்தின் மிக முக்கியமான தூண்கள். இந்தப் படத்தில் அந்த இரண்டு பொறுப்புகளையும் ஏற்றிருக்கும் சமந்தா மற்றும் நந்தினி ரெட்டி மீது எனக்கு மிகுந்த அன்பும் மரியாதையும் உள்ளது.

இருவரும் மிகவும் தன்னம்பிக்கை மிக்கவர்கள், வலிமையானவர்கள், அதே நேரத்தில் கண்ணியமானவர்கள். அவர்களுடைய பணித்திறன் மற்றும் அர்ப்பணிப்பை நான் எப்போதும் மதித்து வந்திருக்கிறேன். அவர்களுடன் இணைந்து பணியாற்றியது எனக்கு ஒரு பெருமையாக இருக்கிறது.

உமன் பவர் இல்லை டேலண்ட் பவர்:

பலர் இதை 'உமன் பவர்' என்று கூறலாம். ஆனால் எனது பார்வையில் இது 'டேலண்ட் பவர்'. இந்தப் படத்தின் வெற்றிக்கு காரணம் பாலினம் அல்ல, இதில் பணியாற்றிய அனைவரின் திறமையும் உழைப்பும் தான். சிறந்த கதை, அருமையான இயக்கம், தரமான தயாரிப்பு, அற்புதமான நடிப்பு மற்றும் இசை என ஒவ்வொரு அம்சமும் மிகச் சிறப்பாக அமைந்துள்ளது.

சமந்தாவுக்கும், நந்தினி ரெட்டிக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகள். அவர்கள் நினைக்கும் உயரங்களை அடைந்து, அதையும் தாண்டி இன்னும் பெரிய வெற்றிகளை பெற வேண்டும். அவர்களுடைய பயணம் பலருக்கும் உத்வேகமாக அமைய வேண்டும். இந்தப் படம் பிடிக்கும் என்று நான் நம்புகிறேன் என்று சொல்ல மாட்டேன். 'எங்கள் தங்கம்' கண்டிப்பாக அனைவருக்கும் பிடிக்கும். இது ஒரு அழகான, மனதை தொடும் திரைப்படம்" என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X