Manjima mohan: திருமணத்திற்கு பின் மொத்தமாக மாறிய மஞ்சிமா மோகன்.. நீச்சல் குளத்தில் அப்படி ஒரு போஸ்!

சென்னை: அழகான க்யூட் நடிகையான மஞ்சிமா மோகன் நீச்சல் குளத்தில் இருக்கும் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

மலையாள நடிகையான மஞ்சிமா மோகன், கௌதம் மேனன் இயக்கத்தில் உருவான அச்சம் என்பது மடமையடா படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடித்தார்.

Gautham Karthik wife Manjima mohan shared pics on instagram

முதல் படத்திலேயே தனது அழகாலும், நடிப்பாலும் தமிழ் மக்களின் நெஞ்சங்களில் இடம்பிடித்த இவருக்கு கோலிவுட்டில் அடுத்தடுத்து பட வாய்ப்புகளும் குவிந்து வந்தன.

இணைந்து நடித்த போது காதல்: நடிகை மஞ்சிமா விஷ்ணு விஷால் நடித்த எஃப்.ஐ.ஆர் படத்தில் கடைசியாக நடித்திருந்தார். இவர் பழம் பெரும் நடிகர் நவரச நாயகன் கார்த்திக்கின் மகன் கௌதம் கார்த்தியுடன் தேவராட்டம் படத்தில் இணைந்து நடித்த போது இருவரும் காதலிக்க தொடங்கினர். இவர்கள் இருவரின் காதல் விவகாரம் வெளியில் தெரிந்த போதும், இருவரும் வாய்திறக்காமல் இருந்தனர்.

Gautham Karthik wife Manjima mohan shared pics on instagram

காதல் திருமணம்: இதையடுத்து, இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒன்றாக எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பகிர்ந்து தங்களது காதலை அனைவருக்கும் தெரியப்படுத்திய இந்த ஜோடி, கடந்த ஆண்டு நவம்பர் 28ஆம் தேதி இருவீட்டாரின் சம்மதத்துடன் மிகவும் எளிமையாக திருமணம் செய்து கொண்டனர்.

நீச்சல் குளத்தில் செம போஸ்: திருமணத்தின் போது கொழுக்கு மொழுக்குனு இருந்த நடிகை மஞ்சுமா மோகன், திருமணத்திற்கு பின் கடுமையாக உடற்பயிற்சி செய்து, உடல் எடையை குறைத்து செம க்யூட்டாக மாறி உள்ளார். தற்போது அவர் நீச்சல் குளத்தில் விதவிதமாக இருக்கும் போட்டோவை பகிர்ந்துள்ளார். அந்த போட்டோ வைரலாகி வரும் நிலையில், ரசிகர்கள் பலர், உங்களின் அழகே அந்த பப்ளி பேஸ்தான் என கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.

Gautham Karthik wife Manjima mohan shared pics on instagram

கௌதம் கார்த்திக்: மஞ்சிமா மோகனின் கணவர் கௌதம் கார்த்திக் சிம்புவுடன் இணைந்து பத்து தல படத்தில் நடித்தார். இந்த படத்தின் கௌதம் கார்த்தியின் நடிப்பு பாராட்டை பெற்றது. இதையடுத்து, ஆகஸ்ட் 16 1947 திரைப்படத்தில் இந்த படத்திற்கும் கலவையான விமர்சனம் கிடைத்தது. இந்த படத்தைத் தொடர்ந்து தற்போது குற்றவாளி என்ற படத்தில் நடித்து வருகிறார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X