'துருவ நட்சத்திரம்': சூர்யா ஜோடி அமலாபால் அல்ல, சமந்தா!
கவுதம் மேனன் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் துருவநட்சத்திரம் படத்தில் சமந்தாவை புக் செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கவுதம் மேனனின் ஆஸ்தான நாயகி சமந்தா. விண்ணைத்தாண்டி வருவாயா, நீதானே என் பொன் வசந்தம், உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.
எனவே அடுத்த படமான துருவநட்சத்திரம் படத்திலும் சமந்தாவையே நடிக்க வைத்துவிடலாமா என்று யோசிக்கத் தொடங்கிவிட்டாராம் கவுதம் மேனன்.

கதாநாயகி குழப்பம் ஏன்
ஒரு படத்தில் கதாநாயகனை புக் செய்த உடனே இவர்தான் நாயகி என்று முடிவு செய்துவிட்டுதான் படபூஜையே போடுவார்கள். ஆனால் துருவநட்சத்திரம் படத்தில் ஆரம்பம் தொட்டே கதாநாயகி யார் என்பதில் குழப்பம் நீடிக்கிறது.

திரிஷாவா?
துருவநட்சத்திரம் படத்தில் சூர்யா உடன் திரிஷா தான் நடிப்பதாக இருந்தது. ஆனால் சூர்யா வேண்டாம் என்று கூறியதால் அது டிராப் ஆனாது.

அமலாபால் ஓகே வா?
சூர்யா ஜோடியாக அமலாபால்தான் நடிக்கப் போகிறார் என்று தகவல் பரவியது. ஏனெனில் பள்ளி மாணவி கதாபாத்திரம் என்பதால் அமலாபால் நடிக்க ஓகே சொன்னாராம் சூர்யா.

துளசி நாயர்
மாணவி கதாபாத்திரத்துக்கு பத்தாம் வகுப்பு மட்டுமே படித்துள்ள துளசி நாயர் நடிக்க உள்ளதாகவும் ஒரு தகவல் வெளியானது. ஆனால் அதுவும் டிராப் ஆகிப் போனது.

கடைசியில் சமந்தா
ஆஸ்தான நாயகி சமந்தாவை புக் செய்து விடலாம் என்று கடைசியில் யோசிக்கத் தொடங்கிவிட்டாராம் கவுதம் மேனன். படத்திற்கு பேர் வைப்பதில்தான் குழப்பம் வரும். இங்கே கதாநாயகி யார் என்பதிலேயே இத்தனை குழப்பம் இருக்கே?.


Click it and Unblock the Notifications











