ஹீரோயின்
காயத்ரி ஜெயராம் ரொம்பவே கெட்டுப் போய் விட்டாராம்.
கையில் ஓரிரண்டு படங்கள் இருக்கும் தைரியத்தில் எப்போது பார்த்தாலும் மப்பாகவே காணப்படுகிறாராம்.
இதனால் அவரைத் தேடி வரத் தொடங்கியிருந்த பல பட வாய்ப்புகள் நழுவ ஆரம்பித்துள்ளன.
அடிக்கடி அவரை சென்னை லீ மெரிடியின் ஹோட்டலில் பார்க்கலாமாம்!
ஜோதிகாவுக்கு சுத்தமாக பட வாய்ப்புகள் இல்லையாம். கையில் ஒரே ஒரு படத்தை மட்டும் வைத்துக் கொண்டுகாலத்தை ஓட்டிக் கொண்டிருக்கிறாராம்!
விஜய் நிடிக்கும் அடுத்த படத்தின் பெயர் "கீதை". ஓ.கே. விஜய்!எது நடக்கிறதோ அது நன்றாகவே நடக்கும்!!
"துள்ளுவதோ இளமை" புகழ் ஷெரீன் கராத்தே கற்றவராம். பெங்களூரில் பல இடங்களில், பல நேரங்களில்அதைத் தற்காப்புக்காக பயன்படுத்தியுள்ளாராம். பார்த்துப்பா!
சமீபகாலத்தில் தமிழில் அறிமுகமான புதுமுக நடிகைகளில் கிசுகிசுக்களில் சிக்கியவர்களில் நம்பர் ஒன் இடத்தில்இருப்பவர் திரிஷா என்கிறார்கள். அவரைப் பற்றி "அப்படிபட்ட" வதந்திகள் ஏராளமாக உலவிக் கொண்டுள்ளதாம்!
மீனா சீக்கிரமே புது வீட்டுக்குக் குடி போகிறார். புது வீடு கட்டி முடிக்கப்பட்டு தயாராக உள்ளதாம்!


Click it and Unblock the Notifications











