என் விவாகரத்துக்குப் பிறகு.. எங்க அப்பாவுக்கு என்னோட பெயர் கூட மறந்துடுச்சு.. காயத்ரி ரகுராம் உருக்கம்!

சென்னை: தனது தந்தை ரகுராம் மாஸ்டர் குறித்து காயத்ரி ரகுராம் உருக்கமாக பேசியிருப்பது ரசிகர்களின் கவனத்தை வெகுவாக கவர்ந்துள்ளது.

ஏகப்பட்ட படங்களுக்கு நடன இயக்குநராக இருந்தவர் தான் ரகுராம் மாஸ்டர். அவர் மட்டுமின்றி அவரது தாத்தாவான கே. சுப்பிரமணியம் என்பவர் சினிமாவின் தந்தை என அழைக்கப்பட்டவர் என்றும் இயக்குநராகவும் தயாரிப்பாளராகவும் இருந்துள்ளார் என தனது குடும்பமே சினிமா குடும்பம் தான் என காயத்ரி ரகுராம் பேசியுள்ளார்.

Gayathri Raghuram talks about her divorce and father last words
Photo Credit:

2002ம் ஆண்டு தமிழில் பிரபுதேவா, பிரபு நடிப்பில் வெளியான சார்லி சாப்ளின் படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் தான் காயத்ரி ரகுராம். பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்ட காயத்ரி ரகுராம் அதிமுக கட்சியிலும் செம ஆக்டிவாக இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.

நடிகை, நடன இயக்குநர், இயக்குநர், தயாரிப்பாளர்: காயத்ரி ரகுராம் நடிகையாக சினிமாவில் அறிமுகமானாலும், அவர் நடன இயக்குநராகவும் இயக்குநராகவும் தயாரிப்பாளராகவும் பன்முகத் தன்மையுடன் தமிழ் சினிமாவில் கலக்கியுள்ளார். அரசியலிலும் அவர் அதிக ஆர்வம் செலுத்தியுள்ளார். ரகுராம் மாஸ்டர் மற்றும் கிரிஜா ரகுராமின் மகளாக பிறந்தவர் தான் காயத்ரி ரகுராம். அம்மா, அப்பா இருவருமே டான்ஸ் மாஸ்டர்கள் என்பதால் மூத்த அக்காவான சுஜாவும் டான்சராக மாறினார். இவரும் நடன இயக்குநராகவும் நடிகையாகவும் பல படங்களில் பணியாற்றியுள்ளார்.

ஏகப்பட்ட படங்கள்: 2001ம் ஆண்டு தெலுங்கில் வெளியான ரெப்பலேலோ ராதா படத்தில் தான் இவர் ஹீரோயினாக அறிமுகமானார். அதன் பின்னர் தமிழில் சார்லி சாப்ளின், ஸ்டைல், பரசுரான், விசில், விகடன், வானம், காதலில் சொதப்புவது எப்படி, வை ராஜா வை, இது என்ன மாயம், தார தப்பட்டை, அருவம், யாதுமாகி நின்றாய் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். 2020ம் ஆண்டு வெளியான யாதுமாகி நின்றாய் படத்தை தயாரித்து இயக்கியுள்ளார்.

அப்பா காலை பிடித்து தொங்குவேன்: அப்பா தான் எனக்கு எல்லாமே. அவர் தப்பே செய்யாத ரொம்ப நல்ல அப்பா, இண்டஸ்ட்ரியில் அனைவருக்கும் அவரை பிடிக்கும். எங்க அப்பாவோட தாத்தாவே சினிமா துறையில் பெரிய ஆளாக இருந்த கே. சுப்ரமணியம் தான். அதன் பின்னர் அப்பா, எம்ஜிஆர், சிவாஜி, ஜெமினி என பலருக்கும் டான்ஸ் மாஸ்டராக பணியாற்றியுள்ளார். சிறு வயதில் அப்பா காலை பிடித்துக் கொண்டு தொங்கிக் கொண்டே வருவேன், அவர் எப்போது சினிமா ஷூட்டிங் முடிந்து வீட்டுக்கு வந்தாலும், ஆனால், இப்போ அப்படி யார் காலை பிடித்து தொங்கிக் கொண்டு வர முடியும்.

என் பெயரை கூட மறந்துட்டாரு: வை ராஜா வை படத்துக்காக ஜப்பானில் ஷூட்டிங்கில் இருக்கிறேன். அப்போதான் அப்பா இறந்துவிட்டார் என்கிற மெசேஜ் வந்தது. உடனே அங்கிருந்து வந்து அவரை கட்டி அணைத்துக் கொண்டு என்னை விட்டு போயிடாதீங்க என கதறி அழுதேன் என பேசும் போதே எமோஷனலாகி விட்டார். அதற்கு முன்னதாக உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் போது, என் பெயரை கூட மறந்துவிட்டார். ஆனால், ரெண்டாவதை கூப்பிடு என சொல்லி என்னை அழைத்து நான் இன்னும் எத்தனை நாள் பயணிப்பேன் என தெரியல, யார் மனதையாவது புண்படுத்தியிருந்தால் மன்னிச்சிடுங்க என்றார்.

விவாகரத்துக்கு பிறகு: எப்போதும் என் அப்பா என் கூடவே இருக்க வேண்டும் என்பதற்காக எனக்கு விவகாரத்து ஆன பிறகு என் அப்பா பெயரை கெசட்டில் சேர்த்து விட்டேன். எப்போதுமே காயத்ரி ரகுராம் தான் நான், நானிருக்கும் வரை அவரும் என்னோடு இருப்பார் என்று கண்கள் கலங்கியபடியே பிஹைண்ட்வுட்ஸ் யூடியூப் சேனலில் வெளியான அன்புள்ள அப்பா ஷோவில் தனது அப்பா குறித்து காயத்ரி ரகுராம் பேசியுள்ளார். 2006ம் ஆண்டு தீபக் சந்திரசேகர் என்பவரை திருமணம் செய்துக் கொண்ட காயத்ரி ரகுராம் 2010ம் ஆண்டு விவாகாரத்து பெற்று பிரிந்தார். ரகுராம் மாஸ்டர் 2013ம் ஆண்டு நவம்பர் 30ம் தேதி தனது 64 வயதில் காலமானார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X