நடிச்சது எல்லாம் நல்ல கேரக்டர் தான்.. ஆனால், படவாய்ப்பு இல்ல.. கிளாமர் ரூட்டுக்கு மாறிய நடிகை!
சென்னை: விஜய் சேதுபதியுடன் இணைந்து அதிக திரைப்படங்களில் நடித்த நடிகை என்ற பெருமைக்குரியவர் காயத்ரி சங்கர். இவரது அமைதியான முகம் அமைப்பு மற்றும் நேர்த்தியான நடிப்பால் ரசிகர்களை ஏங்க வைத்த நடிகை காயத்திரி கவர்ச்சி ரூட்டுக்கு மாறி விதவிதமான போட்டோக்களை இணையத்தில் அப்லோடு செய்து ரசிகர்களை திக்குமுக்காட வைத்துள்ளார்.
விஜய்சேதுபதி, காயத்ரி சங்கர் நடிப்பில் உருவான நடுவுல கொஞ்சம் பக்கத்தை காணோம் படத்தில் வரும் "ப்பா" என்ற வசனத்தை இன்றளவும் மறக்க முடியாது’’ அந்த வசனத்தால் பிரபலமான காயத்திரி சங்கர் 2012ம் ஆண்டு வெளியான 18 வயது திரைப்படத்தின் மூலம் திரைத்துறையில் அறிமுகமானார். இவர் சினிமாவில் நுழைந்து ஏறக்குறைய 12 ஆண்டுகளுக்கு மேலாகிய இப்போதும் அதே அழகுடன் இருக்கிறார்.

அடுத்தடுத்த படங்களில் : விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடுவுல கொஞ்சம் பக்கத்தை காணும் ,ரம்மி, ஒரு நல்ல நாள் பார்த்து, புரியாத புதிர், சூப்பர் டீலக்ஸ், சீதக்காதி, மாமனிதன் உள்ளிட்ட படங்களில் நடித்ததால், இருவர் குறித்தும் கிசுகிசுவில் சிக்கினாலும், விஜய்சேதுபதியுடன் இணைந்து நடிப்பதையே விரும்புவதாக காயத்ரி பல பேட்டிகளில் கூறியுள்ளார்.

விக்ரம் படத்தில் : அண்மையில் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்த விக்ரம் படத்தில், மலையாள நடிகர் பகத் பாசிலின் மனைவியாக நடித்திருந்தார். ஒரு சில காட்சிகளில் மட்டுமே நடித்திருந்தாலும் காயத்ரி சங்கரின் கதாபாத்திரம் அனைவரும் பாராட்டும் வகையில் மனதில் நின்றது. விக்ரம் படத்தைத் தொடர்ந்து தமிழ், மலையாளப்படங்களில் நடித்து வருகிறார்.

கவர்ச்சி ரூட்: குடும்ப பாங்கான கதாபாத்திரங்களிலும், அழுத்தமான கதையை தேர்வு செய்து நடித்து வந்த காயத்ரி ஷங்கருக்கு அண்மைக்காலமாக எதிர்பார்த்த படங்கள் எதுவும் அமையவில்லை. இதனால், கவர்ச்சி ரூட்டுக்கு மாறிய காயத்திரி, பாலிவுட் நடிகையைப் போல டூ பீஸ் உடையில் போஸ் கொடுத்த போட்டோ படுவைரலாகி சர்ச்சைக்குள்ளானது. தற்போதும் அதே போல கவர்ச்சி உடையில் இருக்கும் போட்டோவை காயத்ரி தனது இன்ஸ்டாகிராமில் ஷேர் செய்துள்ளார். காயத்ரி சங்கரின் புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் என்ன காயத்ரி சங்கர், இதெல்லாம் என்று வருத்தத்துடன் தங்கள் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.



Click it and Unblock the Notifications











