»   »  காயத்ரி ரகுராமுக்கு டும் டும்...

காயத்ரி ரகுராமுக்கு டும் டும்...

Subscribe to Oneindia Tamil

பிரபல நடன இயக்குனர்களான ரகுராம் மற்றும் கிரிஜா தம்பதியினரின் மகளான நடிகை காயத்ரி ரகுராமுக்குதிருமணம் நிச்சயமாகியுள்ளது.

தமிழ்த் திரையுலகின் பிரபல நடன இயக்குனராக விளங்குபவர் ரகுராம். அவரது மனைவி கிரிஜாவும் டான்ஸ்மாஸ்டர்தான். கிரிஜாவின் சகோதரிகளான கலா, பிருந்தா ஆகியோரும் டான்ஸ் மாஸ்டர்கள்தான்.

காயத்ரி ரகுராம் சார்லி சாப்ளின் படம் மூலம் நடிகையாக அறிமுகமானார். அதன் பின்னர் விசில், பரசுராம்,ஸ்டைல் ஆகிய படங்களில் நடித்தார். ஆனால், அவர் தேறவில்லை. இதையடுத்து மலையாளம், கன்னடத்திலும்நுழைந்து தனது அதிர்ஷ்டத்தை சோதித்தார்.

ஆனாலும் அவருக்கு சினிமா கைகொடுக்கவில்லை. இதையடுத்து திரைப்படங்களுக்கு முழுக்குப் போட்டு விட்டுஅமெரிக்காவுக்குப் போய் விட்டார்.

அங்கு விஷூவல் கம்யூனிகேஷன் படித்த காயத்ரி ரகுராக்கு தற்போது திருமணம் நிச்சயமாகியுள்ளது.மணமகனின் பெயர் தீபக். சாப்ட்வேர் என்ஜீனியரான தீபக், அமெரிக்காவில் வசிக்கிறார்.

இவர்களது திருமண நிச்சயதார்த்தம் அமெரிக்காவில் சமீபத்தில் நடந்தது. திருமணம் பிப்ரவரி மாதம்நடைபெறுகிறதாம்.

கடந்த சட்டமன்றத் தேர்தலின்போது ரகுராம் தனது மனைவியோடு அதிமுகவில் இணைந்து பிரச்சாரம் செய்ததுநினைவுகூறத்தக்கது.

Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil