ஹீரோயின்
தெலுங்கில் காயத்ரி ரகுராமின் அலை அடித்துக் கொண்டிருக்கிறது. எல்லாமே சிங்கிள் டான்ஸ் தான்.
தமிழில் ஹீரோயினாக வந்த காய்தரிக்கு அடுத்தடுத்து சான்ஸ்கள் இல்லை. இதனால் தெலுங்கில் அவ்வப்போதுஓடிப் போய் ஒரு பாட்டுக்கு டான்ஸ் ஆட ஆரம்பித்தார். அவரது கவர்ச்சிக்கும் ஆட்டத்துக்கும் தெலுங்கு ரசிகர்கள்இடையே நல்ல வரவேற்பு கிடைக்க ஆரம்பித்துவிட்டது.
இதனால் ஒரு பாட்டுக்கு டான்ஸ் ஆடச் சொல்லி ஏராளமான தெலுங்குத் தயாரிப்பாளர்கள் காயத்ரியை மொய்க்கஆரம்பித்துள்ளார். இதனால் சென்னையில் இருப்பதைவிட அதிக நேரம் ஹைதராபாத்தில் தான் இருக்கிறாராம்காயத்ரி.
என்ன தான் ஒரு பாட்டுக்கு டான்ஸ் ஆடி காசு பார்த்தாலும் ஹீரோயின் கனவு அவரை விடவில்லையாம்.
தெலுங்கிலும் தமிழிலும் ஹீரோயின் சான்சுக்காக அலையாய் அலைந்து கொண்டிருக்கிறார். சம்பளத்தில் எவ்வளவுவேண்டுமானாலும் விட்டுத் தரத் தயார் என்று அறிவித்துள்ளார். ஆனாலும் இவரை ஹீரோயினாகப் போடதயாரிப்பாளர்களும் இளம் நடிகர்களும் தயாராக இல்லை.
அம்மா, அப்பா இருவருமே பிரபலமான நடன மாஸ்டர்கள், சினிமா நெளிவு சுளிவுகளைத் தெரிந்தவர்கள்என்பதால் பிற ஹீரோயின்களிடம் வாலாட்டுவதைப் போல காயத்ரியிடம் தங்களது யுக்திகளைக் காட்ட முடியாதுஎன்பதால் இவரை ஹீரோயினாகப் போட இளம் நடிகர்கள் விரும்பவில்லை என்கிறார்கள் கோடம்பாக்கம்குருவிகள்.


Click it and Unblock the Notifications











