twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    மலையாளக் கரையில் காயத்ரி ஜெயராம்! கூவம் நதிக் கரையில் (கோலிவுட்டில்) அறிமுகமாகி ஒரு ரவுண்டு அடித்து, அப்படியே காணாமல் போய் திடீரென மீண்டும்தலை காட்டியுள்ள காயத்ரி ஜெயராம், இப்போது மலையாளக் கரையில் தெறம காட்டப் புகுந்துள்ளார். பெங்களூர் நெட்டத் தக்காளியான காயத்ரி ஜெயராம், அவரது ஒசரத்தாலேயே கெட்டுப் போனார். அவருக்கு ஏத்தாப்லஜோடியைத் தேடுவதற்குள் தயாரிப்பாளர்களுக்குப் போதும் போதும் என்றாகி விட்டது. இதனாலலேயே தமிழில் அதிக படங்களில் நடிக்க முடியாமல் போய் விட்டது காயத்ரியால். சரி, போனால் போகிறதென்றுதெலுங்குப் பக்கம் போனார், கன்னடத்திலும் தலை காட்டிப் பார்த்தார். ஒன்னும் தேறவில்லை. இடையில் பிரபு தேவாவுடன் ரகசியக் காதல் என்று செய்தி கசிந்தது. திடீரென ஆளைக் காணவில்லை. விசாரித்துப் பார்த்தால்,ஸ்கூபா டைவிங் பயிற்சியாளராக மாறி சிங்கப்பூரில் செட்டிலாகியிருந்தார் காயத்ரி. சரி, அம்மணி அவ்வளவு தான், இனி எங்கே நடிக்க வரப் போகிறார் என்று பார்த்தால் திடீரென சென்னையில் தோன்றி மீண்டும்நடிக்கப் போகிறேன் என்று குண்டை தூக்கிப் போட்டார். அவர் குண்டைப் போட்டும் கூட தயாரிப்பாளர்கள் யாரும் அவரைசட்டை செய்யவில்லை. வெறுத்துப் போன காயத்ரி, ஆபத்துக்கு கை கொடுக்கும் மலையாளப் பக்கம் கவனத்தைத் திருப்பினார். அவரதுமுயற்சிகளுக்கு கை மேல் பலன் கிடைத்தது. ஜெயராம் ஜோடியாக சல்பேரு ராமன் குட்டி என்ற படத்தில் வாய்பு கிடைத்தது. அங்கேயும் அவரை துரதிர்ஷ்டம் விடவில்லை. பணப் பிரச்சினையால் அந்தப் படம் பாதியில் நின்று, பின்னர் மீண்டும் உருவாகிவெளியானது. அய்யோ பாவம், படம் பணால் ஆனதால் காயத்ரிக்கு இருந்த கொஞ்சம் நம்பிக்கையும் போய் விட்டது. சரி, வாய்ப்பு வந்தால் வரட்டும், இல்லாவிட்டால் இருக்கவே இருக்கிறது ஸ்கூபா டைவிங் என்ற முடிவுக்கு வந்தபோது,காயத்ரியை தேடி ஒரு மீண்டும் ஒரு மலையாளப் பட வாய்ப்பு வந்துள்ளது.அதில் இவருக்கு நாயகன் யார் தெரியுமா? ஜெமினியில் அறிமுகமான மிமிக்ரி வில்லன் கலாபவன் மணி. மலையாளத்தில்கலாபவன் மணியை எந்த கேட்டகரியில் சேர்ப்பது என்று யாருக்குமே தெரியவில்லை.இதற்கு காரணம், திடீரென கதாநாயகனாக நடிப்பார். அந்தப் படம் நன்றாகவே ஓடும். அதற்கு அடுத்தத படத்தில் வில்லனாகவருவார். அதற்கு அடுத்த படத்தில் காமெடியனாக வருவார்.இவர் முதன் முதலாக கதாநாயகனாக நடித்த படம் வாசந்தியும் லட்சுமியும் பின்னே ஞானும் (இந்தப் படம் தான் தமிழில்காசியானது). இந்தப் படம் மலையாளத்தில் சூப்பர் ஹிட்டாக ஓடியது. இதற்குப் பிறகு கெளசல்யாவுக்கு ஜோடியாக ஒருபடத்தில் நடித்தார்.அந்தப் படம் அவ்வளவாக ஓடவில்லை. இதனால் அடுத்த படங்களில் வில்லன், காமெடி என பழைய இடத்திற்கே வந்தார்.இந்த நிலையில் தான் சமீபத்தில் மீண்டும் கலாபவன் ஹீரோவாக நடித்த பென் ஜாண்சன் என்ற படம் கேரளாவில் பரபரப்பாகஓடிக்கொண்டிருக்கிறது.இதையடுத்து இவர் அடுத்ததாக ஹீரோவாக நடிக்கும் படத்தின் பெயர் லோகநாதன் ஐ.ஏ.எஸ். இந்தப் படத்தில் தான் காயத்ரி,கலாபவனுடன் ஜோடி சேர்ந்துள்ளார். ரொம்ப ரொம்ப சாதாரண குடும்பத்தைச் சேர்ந்த கலாபவன், கஷ்டப்பட்டுப் படித்துஐ.ஏ.எஸ். தேர்வில் வெற்றி பெற்று அதிகாரி ஆகிறார். ஆனால் அவரது குடும்பப் பின்னணி, ஜாதி உள்ளிட்டவற்றை பார்த்து உயர் அதிகாரிகளும், சக அதிகாரிகளும் கலாபவனைரொம்பவே இன்சல்ட் செய்து நடத்துகிறார்கள். அதிலிருந்து அவர் எப்படி மீண்டு வருகிறார் என்பது தான் இந்தப் படத்தின்கதையாம். ஓணம் பண்டிகைக்கு ரிலீஸாகப் போகும் இந்தப் படத்தில் காயத்ரி தனது திறமை அனைத்தையும் வெளிப்படுத்தி நன்றாகவேநடித்துள்ளாராம். இப்படம் நன்றாக ஓடி பெயர் வாங்கித் தந்தால் மலையாளத்தில் ஒரு ரவுண்டு வரலாம் என்ற அசாத்திய நம்பிக்கையில்ஓணத்தை எதிர்பார்த்து திறந்த வாய் மூடாமல் காத்துக்கொண்டிருக்கிறாராம் காயத்ரி.

    By Staff
    |

    கூவம் நதிக் கரையில் (கோலிவுட்டில்) அறிமுகமாகி ஒரு ரவுண்டு அடித்து, அப்படியே காணாமல் போய் திடீரென மீண்டும்தலை காட்டியுள்ள காயத்ரி ஜெயராம், இப்போது மலையாளக் கரையில் தெறம காட்டப் புகுந்துள்ளார்.

    பெங்களூர் நெட்டத் தக்காளியான காயத்ரி ஜெயராம், அவரது ஒசரத்தாலேயே கெட்டுப் போனார். அவருக்கு ஏத்தாப்லஜோடியைத் தேடுவதற்குள் தயாரிப்பாளர்களுக்குப் போதும் போதும் என்றாகி விட்டது.

    இதனாலலேயே தமிழில் அதிக படங்களில் நடிக்க முடியாமல் போய் விட்டது காயத்ரியால். சரி, போனால் போகிறதென்றுதெலுங்குப் பக்கம் போனார், கன்னடத்திலும் தலை காட்டிப் பார்த்தார். ஒன்னும் தேறவில்லை.


    இடையில் பிரபு தேவாவுடன் ரகசியக் காதல் என்று செய்தி கசிந்தது. திடீரென ஆளைக் காணவில்லை. விசாரித்துப் பார்த்தால்,ஸ்கூபா டைவிங் பயிற்சியாளராக மாறி சிங்கப்பூரில் செட்டிலாகியிருந்தார் காயத்ரி.

    சரி, அம்மணி அவ்வளவு தான், இனி எங்கே நடிக்க வரப் போகிறார் என்று பார்த்தால் திடீரென சென்னையில் தோன்றி மீண்டும்நடிக்கப் போகிறேன் என்று குண்டை தூக்கிப் போட்டார். அவர் குண்டைப் போட்டும் கூட தயாரிப்பாளர்கள் யாரும் அவரைசட்டை செய்யவில்லை.

    வெறுத்துப் போன காயத்ரி, ஆபத்துக்கு கை கொடுக்கும் மலையாளப் பக்கம் கவனத்தைத் திருப்பினார். அவரதுமுயற்சிகளுக்கு கை மேல் பலன் கிடைத்தது. ஜெயராம் ஜோடியாக சல்பேரு ராமன் குட்டி என்ற படத்தில் வாய்பு கிடைத்தது.

    அங்கேயும் அவரை துரதிர்ஷ்டம் விடவில்லை. பணப் பிரச்சினையால் அந்தப் படம் பாதியில் நின்று, பின்னர் மீண்டும் உருவாகிவெளியானது. அய்யோ பாவம், படம் பணால் ஆனதால் காயத்ரிக்கு இருந்த கொஞ்சம் நம்பிக்கையும் போய் விட்டது.

    சரி, வாய்ப்பு வந்தால் வரட்டும், இல்லாவிட்டால் இருக்கவே இருக்கிறது ஸ்கூபா டைவிங் என்ற முடிவுக்கு வந்தபோது,காயத்ரியை தேடி ஒரு மீண்டும் ஒரு மலையாளப் பட வாய்ப்பு வந்துள்ளது.

    அதில் இவருக்கு நாயகன் யார் தெரியுமா? ஜெமினியில் அறிமுகமான மிமிக்ரி வில்லன் கலாபவன் மணி. மலையாளத்தில்கலாபவன் மணியை எந்த கேட்டகரியில் சேர்ப்பது என்று யாருக்குமே தெரியவில்லை.

    இதற்கு காரணம், திடீரென கதாநாயகனாக நடிப்பார். அந்தப் படம் நன்றாகவே ஓடும். அதற்கு அடுத்தத படத்தில் வில்லனாகவருவார். அதற்கு அடுத்த படத்தில் காமெடியனாக வருவார்.

    இவர் முதன் முதலாக கதாநாயகனாக நடித்த படம் வாசந்தியும் லட்சுமியும் பின்னே ஞானும் (இந்தப் படம் தான் தமிழில்காசியானது). இந்தப் படம் மலையாளத்தில் சூப்பர் ஹிட்டாக ஓடியது. இதற்குப் பிறகு கெளசல்யாவுக்கு ஜோடியாக ஒருபடத்தில் நடித்தார்.


    அந்தப் படம் அவ்வளவாக ஓடவில்லை. இதனால் அடுத்த படங்களில் வில்லன், காமெடி என பழைய இடத்திற்கே வந்தார்.இந்த நிலையில் தான் சமீபத்தில் மீண்டும் கலாபவன் ஹீரோவாக நடித்த பென் ஜாண்சன் என்ற படம் கேரளாவில் பரபரப்பாகஓடிக்கொண்டிருக்கிறது.

    இதையடுத்து இவர் அடுத்ததாக ஹீரோவாக நடிக்கும் படத்தின் பெயர் லோகநாதன் ஐ.ஏ.எஸ். இந்தப் படத்தில் தான் காயத்ரி,கலாபவனுடன் ஜோடி சேர்ந்துள்ளார். ரொம்ப ரொம்ப சாதாரண குடும்பத்தைச் சேர்ந்த கலாபவன், கஷ்டப்பட்டுப் படித்துஐ.ஏ.எஸ். தேர்வில் வெற்றி பெற்று அதிகாரி ஆகிறார்.

    ஆனால் அவரது குடும்பப் பின்னணி, ஜாதி உள்ளிட்டவற்றை பார்த்து உயர் அதிகாரிகளும், சக அதிகாரிகளும் கலாபவனைரொம்பவே இன்சல்ட் செய்து நடத்துகிறார்கள். அதிலிருந்து அவர் எப்படி மீண்டு வருகிறார் என்பது தான் இந்தப் படத்தின்கதையாம்.

    ஓணம் பண்டிகைக்கு ரிலீஸாகப் போகும் இந்தப் படத்தில் காயத்ரி தனது திறமை அனைத்தையும் வெளிப்படுத்தி நன்றாகவேநடித்துள்ளாராம்.

    இப்படம் நன்றாக ஓடி பெயர் வாங்கித் தந்தால் மலையாளத்தில் ஒரு ரவுண்டு வரலாம் என்ற அசாத்திய நம்பிக்கையில்ஓணத்தை எதிர்பார்த்து திறந்த வாய் மூடாமல் காத்துக்கொண்டிருக்கிறாராம் காயத்ரி.

      உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
      Enable
      x
      Notification Settings X
      Time Settings
      Done
      Clear Notification X
      Do you want to clear all the notifications from your inbox?
      Settings X
      X