ஹீரோயின்
கமல்ஹாசன் தயாரிப்பில் உருவாகி வரும் நள தமயந்தி படத்தில் மட்டிக்கு (அதாங்க, நம்ம மாதவன்) ஜோடியாக வருகிறாரே, ஒருகேரளத்துக் குட்டி, அவர் யார் என்று தெரியுமோ?
இது கூடத் தெரியாதா, கீது மோகன்தாஸ் என்று கரெக்டாக சொல்லி விட்டதாக நீங்கள் நினைத்தால், உங்களுக்கு ஒரு கொட்டு.அந்த கீது யார் என்பதுதான் கேள்வி.
ரொம்ப காலத்துக்கு முன்னாடி, என் பொம்முக்குட்டி அம்மாவுக்கு என்று ஒரு படம் வந்ததே ஞாபகம் இருக்கிறதா?.
மலையாள இயக்குனர் பாசில் டைரக்ட் செய்த அந்தப் படத்தில் சத்யராஜ், சுஹாசினியின் மகளாக நடித்த குட்டிதான், இப்போது வளர்ந்துபெரிதாகி, கீதுவாக மாறியிருக்கிறார்.
சின்ன வயதில் இருந்த கீது நடித்து வருகிறார். ஆனாலும் கிளாமர் காட்டி நடிக்க தயங்க மாட்டாராம்.
ஆனாலும் கதைக்கு தான்ரொம்ப முக்கியத்துவம் தரப் போகிறாராம்.
தமிழில் மீரா ஜாஸ்மினின் மார்க்கெட்டைப் பிடிப்பதுதான் லட்சியமாம்.
இருவருக்கும் கேரளாவில் ஆரம்பித்த சண்டை இது.தமிழகத்திலும் பரவி இருக்கிறது.


Click it and Unblock the Notifications











