“4 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அதே மேஜிக்”.. ஜெனிலியா பற்றி குட்நியூஸ் சொன்ன கணவர் ரித்தேஷ்!
நடிகை ஜெனிலியா தனது கணவருடன் மீண்டும் படத்தில் நடித்துள்ளார்.
Recommended Video

சென்னை: நான்கு வருடங்கள் கழித்து நடிகை ஜெனிலியா தனது கணவருடன் மீண்டும் படத்தில் நடித்துள்ளார்.
சச்சின், சந்தோஷ் சுப்பிரமணியம், வேலாயுதம் என ஒரு சில படங்களில் நடித்தாலும், ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் நடிகை ஜெனிலியா. பாய்ஸ் படம் மூலம் அறிமகமான அவர், நடிகர் ரித்தேஷை தேஷ்முக்கை திருமணம் செய்துகொண்டு, இல்லற வாழ்வில் செட்டிலானார்.
இதனால் அவர் நடிப்பதில் இருந்து விலகி இருந்தார்.

வீடியோ:
இந்நிலையில் நடிகர் ரித்தேஷ் தனது டிவிட்டர் பக்கத்தில் ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டார். அதில் அவர் நடிக்கும் மராத்தி படம் மாவுலி பாடல் காட்சி இடம்பெற்றுள்ளது. அதில் நடிகை ஜெனிலியா ஹோலி பண்டிகை கொண்டாட்டத்தில் ரித்தேஷூடன் ஆடிப்பாடி மகிழ்கிறார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் டிரெண்டிங்காகியுள்ளது.

மீண்டும் அதே மேஜிக்:
இது தொடர்பாக நடிகர் ரித்தேஷ் தனது டிவிட்டர் பதிவில், " எனது மனைவி ஜெனிலியாவுடன் நான்கு ஆண்டுகள் கழித்து நடிக்கிறேன். முதல் படத்தில் எப்படி நடித்தாரோ இதிலும் அப்படியே இருக்கிறார். அதே மேஜிக் மீண்டும் நடந்தது", என குறிப்பிட்டுள்ளார்.
வாழ்த்து:
இந்த வீடியோவை சுமார் 8 லட்சம் இதுவரை பார்த்துள்ளனர். வாவ், சூப்பர் என வீடியோ குறித்தும், ரித்தேஷ், ஜெனிலியா ஜோடி குறித்தும் அவர்களது ரசிகர்கள் பாராட்டியும், வாழ்த்து தெரிவித்தும் பதிவு வெளியிட்டு வருகின்றனர்.

வெற்றிப்பட ஜோடி:
ரித்தேஷூம், ஜெனிலியாவும், மஸ்தி, துஜே மேரி கசம், தேரே நாள் லவ் ஹோ கயா, லாய் பாரி உள்ளிட்ட வெற்றி படங்களில் இணைந்து நடித்தனர். இருவரும் திருமணம் செய்துகொண்ட பின்னர், அவ்வப்போது தங்களுடைய காதல் படங்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications