பட வாய்ப்பு குறைந்து போன ஜெனிலியா… புதிய வாய்ப்புகளை தேடுகிறார்
மும்பை: யாராச்சும் படம் தாங்களேன் என்று வாய் விட்டுக் கெஞ்சாத குறையாக வாய்ப்பு தேடி வருகிறாராம் ஜெனிலியா.
திருமணமாகிப் போய்விட்ட ஜெனிலியாவுக்கு பட வாய்ப்புகள் குறைந்து போய் விட்டன. முதலில் அதை அவர் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. ஆனால் தற்போது பெருமளவில் வாய்ப்புகள் நின்று போனதால் பயந்து போய் விட்டாராம்.
இதனால் புதிய பட வாய்ப்புகளைத் தேடி அவரே நேரடியாக களத்தில் குதித்துள்ளாராம். ஆனால் படங்கள்தான் வருவதாகத் தெரியவில்லை.

ரிதேஷ் தேஷ்முக்குடன் திருமணம்
மகாராஷ்டிர மாநில அரசியல்வாதியின் மகன் ரிதேஷ் தேஷ்முக்கைக் காதலித்துத் திருமணம் செய்து கொண்டவர் ஜெனிலியா. அதன்பின்னர் தமிழ் உள்ளிட்ட படங்களில் அவரைக் காண முடியவில்லை.

தெலுங்கிலும் வறட்சி
தெலுங்கிலாவது சில படங்களில் நடித்து வந்தார். தற்போது அங்கும் வாய்ப்புகள் நின்று விட்டனவாம். திருமணமானதே அதற்கு முக்கியக் காரணம்.

காக்டெய்ல் பார்ட்டி
இதையடுத்து தனது தெலுங்குத் திரையுலக நண்பர்களுக்காக சமீபத்தில் காக்டெய்ல் பார்ட்டி எல்லாம் வைத்துப் பார்த்தாராம் ஜெனிலியா. ஆனாலும் பட வாய்ப்புகள் குறித்து பார்ட்டிக்கு வந்த யாரும் உத்தரவாதம் தரவில்லையாம்.

யாருக்கும் விருப்பமில்லையாம்
ஜெனிலியாவுக்குத் திருமணமாகி விட்டதால் அவரை தங்களது படங்களில் நடிக்க வைக்க தெலுங்கு நடிகர்கள் யாரும் விரும்பவில்லை என்று கூறப்படுகிறது.

மனம் தளராமல் தொடர் முயற்சி
இருந்தாலும் மனம் தளராமல் தொடர்ந்து முயற்சிகளை தொடர்ந்து வருகிறாராம் ஜெனிலியா. எப்படியாவது வாய்ப்பு கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன் இருக்கிறாராம்.


Click it and Unblock the Notifications











