நடிக்கும் ஆசை வந்துடுச்சி... மீண்டும் மேக்கப்ப போடும் ஜெனிலியா!
திருமணத்துக்குப் பிறகு மீண்டும் நடிக்கும் ஆசை வந்துவிட்டதால் அடுத்த ரவுண்டுக்கு மேக்கப் போடத் தயாராகிறார் ஜெனிலியா.
ஒரு புதிய படத்தில் இரண்டாவது கதாநாயகியாக நடிக்கிறார்.
2003-ஆம் ஆண்டில் ஷங்கர் இயக்கத்தில் வெளியான பாய்ஸ் திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானவர் ஜெனிலியா.
தொடர்ந்து தமிழில் 'சச்சின்', சந்தோஷ் சுப்பிரமணியம்', 'உத்தமபுத்திரன்' உள்ளிட்ட படங்களில் நடித்தார். தெலுங்கிலும் நிறைய படங்களில் நடித்தார்.

திருமணம்
கடந்த 2012-ஆம் ஆண்டு அவருடைய காதலரான இந்தி நடிகர் ரிதேஷ் தேஷ்முக்கை மணந்து நடிப்புக்கு முழுக்குப் போட்டார் ஜெனிலியா. தமிழில் விஜய்யுடன் அவர் நடித்த 'வேலாயுதம்'தான் இவர் நடிப்பில் வெளிவந்த கடைசிப் படம்.

ஜெய் ஹோவில்...
இந்நிலையில் ஜெனிலியா சல்மான் கானின் ஜெய் ஹோவில் ஒரு சிறு வேடத்தில் நடித்தார். இதற்கு அவரது காதல் கணவர் ரித்தேஷும் சந்தோஷத்துடன் சம்மதித்துவிட்டார்.

2வது நாயகி
தொடர்ந்து, சல்மான்கானின் தம்பியும் தயாரிப்பாளருமான அர்பாஸ் கான் தயாரிக்கும் டாலி கி டோலி என்ற படத்தில் ஜெனிலியா 2வது நாயகியாக நடிக்கிறார். இந்தப் படத்தில் நாயகியாக சோனம் கபூர் நடிக்கிறார். இருப்பினும், ஜெனிலியா வந்த வாய்ப்பை தவறவிட மனமில்லாமல் ஒப்புக் கொண்டாராம்.

தமிழுக்கு வரட்டுமா...
தற்போது ஜெனிலியாவுக்கு நடிக்கும் ஆசை வந்துவிட்டதால், தொடர்ந்து நடிக்கப் போவதாகவும், தமிழுக்கு வர விரும்புவதாகவும் தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











