தொடை அழகு தெரிய குட்டி டிரஸ்ஸில் குதூகலமாய் போஸ் கொடுத்த ஜெனிலியா!
மும்பை : நடிகை ஜெனிலியா தமிழில் சில திரைப் படங்களில் மட்டுமே நடித்திருந்தாலும் இன்றளவும் ரசிகர்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்திருக்கும் கதாபாத்திரங்களை கொடுத்துள்ளார்.
அவ்வகையில் சந்தோஷ் சுப்ரமணியம் மற்றும் சச்சின் ஆகிய திரைப்படங்கள் இவருக்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை ஏற்படுத்திக் கொடுத்தது.
இப்பொழுது இந்தியில் படங்களில் நடித்தும் தயாரித்து வரும் ஜெனிலியா தொடைஅழகு தெரிய குட்டி டிரஸ்ஸில் குதூகலமாக போஸ் கொடுத்துள்ள லேட்டஸ்ட் க்யூட் போட்டோஸ் லைக்குகளை அள்ளுகிறது.

இன்றளவும் ரசிகர்களால்
எப்போதும் புன்னகையுடன் இருக்கும் நடிகை ஜெனிலியாவை பிடிக்காதவர்கள் யாரும் இருக்க முடியாது. இன்றளவும் ரசிகர்களால் விரும்பப்படும் மிகச் சிறந்த நடிகைகளில் ஒருவராக ஜெனிலியா உள்ளார். இயக்குனர் ஷங்கரின் இயக்கத்தில் வெளியான பாய்ஸ் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கால் தடத்தைப் பதித்த இவர் தொடர்ந்து நடித்த அனைத்து திரைப்படங்களும் ரசிகர்களின் ஃபேவரைட் ஆக உள்ளது.

ஹாசினி
குறிப்பாக இவர் நடித்த சந்தோஷ் சுப்ரமணியம் மற்றும் சச்சின் ஆகிய படங்களில் இவரின் ஹாசினி மற்றும் ஷாலினி கதாபாத்திரம் இன்றளவும் மிகப் பிரபலமாக பேசப்படுகிறது. திருமணத்திற்குப் பிறகு படங்களில் நடிப்பதை குறைத்துக் கொண்ட ஜெனிலியா இப்பொழுது மீண்டும் தனது இரண்டாவது இன்னிங்சை தொடங்கி படங்களில் ஒப்பந்தமாகி வருகிறார்.
Recommended Video

சிறப்புத் தோற்றத்தில்
இதற்கிடையில் தயாரிப்பாளராகவும் களமிறங்கி கணவர் ரித்தேஷ் தேஷ்முக்கின் மௌலி என்ற மராத்தி படத்தை தயாரித்து தயாரிப்பாளராகவும் மாறியுள்ளார். ஹிந்தியில் முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் சிறப்புத் தோற்றத்தில் அடிக்கடி தோன்றி வருவதை வழக்கமாக கொண்டுள்ளார்.

பளபளக்கும் தொடை அழகு
வலிமை பட தயாரிப்பாளர் போனி கபூர் தயாரிப்பில் இந்தியில் உருவாகி வரும் "இட்ஸ் மை லைஃப்" என்ற படத்தில் இப்பொழுது கதாநாயகியாக நடித்து வருகிறார். மீண்டும் சினிமாவில் வலம் வரவேண்டும் என அடிக்கடி போட்டோ ஷூட்களை நடத்தி வரும் இவர் இப்பொழுது குட்டி டிரஸ்ஸில் பளபளப்பான தொடை அழகு தெரிய குதுகலமாய் போஸ் கொடுத்துள்ள க்யூட் புகைப்படங்கள் ரசிகர்களுக்கு புத்துணர்ச்சியை கூட்டியுள்ளது.


Click it and Unblock the Notifications











