குழந்தை பெத்தாச்சு... மீண்டும் நடிக்க ரெடி!- ஜெனிலியா

By Shankar

திருமணத்துக்கு பிறகு மனைவியாக, கர்ப்பிணியாக, தாயாக வாழ்ந்து நிறைய அனுபவங்கள் பெற்று விட்டேன். இப்போது மீண்டும் சினிமாவில் நடிக்கும் மன நிலைக்கு வந்துள்ளேன், என்று கூறியுள்ளார் நடிகை ஜெனிலியா.

நடிகர் ரிதேஷ் தேஷ்முக்கை காதலித்து மணந்த ஜெனிலியா, இப்போது குழந்தைக்கு தாயாகியுள்ளார். மீண்டும் நடிக்கவும் தயாராகி வருகிறார்.

தாய்மை

தாய்மை

இதுகுறித்து அவர் கூறுகையில், "ஒரு குழந்தைக்கு அம்மா ஆன பிறகு எனக்குள் நிறைய மாற்றம். குழந்தையை பெற்றெடுத்து வளர்ப்பது எவ்வளவு கஷ்டமானது என்று இப்போதுதான் புரிந்தது.

அம்மா

அம்மா

இதன் மூலம் என் தாய் மேல் எனக்கு நிறைய மரியாதை ஏற்பட்டது. என்னை பெற்று எவ்வளவு கஷ்டப்பட்டு வளர்த்து இருப்பார் என் அம்மா என்று புரிந்து கொண்டேன்.

கஷ்டம் - சந்தோஷம்

கஷ்டம் - சந்தோஷம்

குழந்தைகளை பெற்று வளர்ப்பதில் கஷ்டமும் இருக்கிறது. சந்தோஷமும் இருக்கிறது. குழந்தை பெற்ற பெண்கள் மீதெல்லாம் எனக்கு மரியாதை ஏற்படுகிறது.

மகப்பேறு விடுமுறை

மகப்பேறு விடுமுறை

நிறைய பெண்கள் குழந்தைகளைக் கவனிப்பதோடு வேலைக்கும் செல்கிறார்கள். அவர்கள் நிலைமைகளை பார்க்கும் போது பரிதாபம் ஏற்படுகிறது. அப்பாக்கள் வேலைக்கு போய் விடுவதால் மனைவி, குழந்தைகள் மேல் பற்று இல்லாமல் போய் விடுகிறது. எனவே பெண்களுக்கு மகப்பேறு விடுமுறை அளிப்பது போல ஆண்களுக்கும் மனைவி, குழந்தைகளோடு செலவிட விசேஷ விடுமுறைகள் அளிக்க வேண்டும்.

மீண்டும் சினிமாவில்

மீண்டும் சினிமாவில்

திருமணத்துக்கு பிறகு மனைவியாக, கர்ப்பிணியாக, தாயாக வாழ்ந்து நிறைய அனுபவங்கள் பெற்று விட்டேன். இப்போது மீண்டும் சினிமாவில் நடிக்கும் மன நிலைக்கு வந்துள்ளேன். விரைவில் படத்தில் நடிப்பேன்," என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X