கவர்ச்சி காட்டியும் நோ யூஸ்.. படவாய்ப்பு கிடைக்கல… புலம்பும் நடிகைகள்!

சென்னை : சினிமாவை பொருத்தவரை இந்த நவீனகாலத்தில் நடிகைகளுக்கு வாய்ப்புகள் அதிகளவில் கிடைக்க க்ளாமர் தான் பிரதானமாக பயன்படுத்தப்படுகிறது.

அப்படி திறமையான நடிகைகள் பலர் தற்போது படவாய்ப்பு இல்லாமல் கவர்ச்சி காட்ட ஆரம்பித்துள்ளனர். ஆனாலும், சிலர் நடிகைகளுக்கு க்ளாமர் காட்டியும் ஒர்க்கவுட் ஆகாமல் சினிமாவை விட்டு சென்றுவிடும் அளவிற்கு ஆளே காணாம் போய்விடுவார்கள்.

அந்தவரிசையில் முதல் ஆளாக இருக்கிறார் த்ரிஷா அடுத்தடுத்து பல வெற்றிப்படங்களில் நடித்தும் தற்போது இவருக்குப படங்கள் ஏதும் இல்லை. அப்படி பட வாய்ப்பு இல்லாத நடிகைகளை விவரத்தை பார்க்கலாமா?

த்ரிஷா

த்ரிஷா

தமிழ்,கன்னடம் , தெலுங்கு மொழிகளில் பிஸியாக நடித்து வந்த த்ரிஷாவுக்கு பெரிதாக எந்த படங்களும் இல்லை. மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி உள்ள பொன்னியில் செல்வம் படமும், அறிமுக இயக்குநர் அருண் வசீகரன் படமான தி ரோட் திரைப்படங்களை மட்டுமே கைவசம் வைத்துள்ளார். விதவிதமான போட்டோஷூட் எடுத்தும், கவர்ச்சி காட்டியும் பயன் இல்லை என புலம்பி வருகிறார்.

தமன்னா

தமன்னா

தமிழ், தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவர் தமன்னா சமீபத்தில் கேன்ஸ் திரைப்பட விழாவில் கலந்துகொண்டுள்ளார். கவர்ச்சியில் விதவிதமான போட்டோக்களை தனது சோஷியல் மீடியாவில் தொடர்ந்து பகிர்ந்து வருகிறார். தமன்னாவுக்கு தற்போது 3 தெலுங்கு படங்களிலும் 3 இந்தி படங்ளையும் கைவசம் வைத்துள்ளார். அவற்றில் ஒன்று அஜித் நடித்த 'வேதாளம்' படத்தின் தெலுங்கு ரீமேக்கான 'போலோ சங்கர்'படமாகும். பட வாய்ப்பு இல்லாததால் வயதான நடிகருக்கு ஜோடியாகி உள்ளார்.

ஹன்சிகா

ஹன்சிகா

சின்ன குஷ்பு என்று அனைவராலும் அன்புடன் அழைக்கப்பட்ட ஹன்சிகா. பட வாய்ப்பு குறைந்தால் என்ன செய்வது என்று தெரியாமல் தனது உடலை குறைத்து எலும்பும் தோலுமாக மாறினார். ஆனால், அப்போதும் பட வாய்ப்பு வராததால் எப்போதும் ஹாட் பிகினியல் போட்டோஷுட் நடித்தி வருகிறார். ஆனாலும் படவாய்ப்பு வந்தமாதிரி தெரியவில்லை

அமலா பால்

அமலா பால்

விஜய், விக்ரம், தனுஷ் என்று தமிழில் பல முன்னணி நடிகர்களுடன் நடித்த அமலா பால். தற்போது தமிழில் மட்டுமில்லாமல் தெலுங்கு மற்றும் மலையாள படங்களிலும் படு பிசியாக நடித்து வந்திருந்தார். "ஆடை" திரைபடத்திற்கு பிறகு இவருக்கு பட வாய்ப்புகள் இல்லாதால் பெரும் குழப்பத்தில் உள்ளார். தற்போது இவரின் கை வசம் அதோ அந்த பறவை போல படம் மட்டுமே உள்ளது.

வரலட்சுமி சரத்குமார்

வரலட்சுமி சரத்குமார்

நடிகை வரலட்சுமி சரத்குமார் தற்போது தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையாக வளர்ந்துள்ளார். தனது கதாபாத்திரங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதாபாத்திரங்களில் மட்டுமே தேர்ந்தெடுத்து நடித்து வரும் இவருக்கு தமிழில் படவாய்ப்பு இல்லாதால், டோலிவுட்டுக்கு சென்றுவிட்டார். தற்போது ஹனுமான் என்ற சூப்பர் ஹீரோ படத்தில் வரலட்சுமி நடித்து வருகிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X