கேரவனில் பேரம் பேசினாங்க.. பிரேம்ஜி அறைக்கு ஒடினேன்.. அந்த பழக்கத்திற்கு அடிமையானேன் .. சோனா பேட்டி!

சென்னை: கவர்ச்சி நடிகையாக சோனா, குசேலன், குரு என் ஆளு, அழகர் மலை, ஒன்பதுல குரு என பல படங்களில் நடித்துள்ளார். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னட என ஏராளமான படங்களில் நடித்துள்ள சோனா, யூடியூப் சேனலுக்கு அளித்துள்ள பேட்டியில், தம்மடிக்கும் பழக்கத்தில் இருந்து மீண்டு விட்டதாகவும், இப்போது அந்த பக்கமே போவதில்லை என கூறியுள்ளார்.

நடிகை சோனா தனது பயோபிக்கை ஸ்மோக் என்ற பெயரில் வெப் தொடராக இயக்கியிருக்கிறார். எட்டு எபிசோடுகளாக உருவாகி இருக்கும் இந்த தொடரில், சோனாவின் ஐந்து வயது முதல் தற்போது வரை அவர் வாழ்க்கையில் சந்தித்த பல சங்கடமான விஷயங்களை இந்த வெப் தொடரில் பதிவித்து இருக்கிறார். படம் குறித்து பல விஷயத்தை நடிகை சோனா கூறியுள்ளார்.

Sona Smoke interview

நடிகை சோனா: அதில், நான் பிரேம்ஜியை வைத்து 2010 பாக்யராஜ் என்ற படத்தை எடுத்துக் கொண்டிருந்தேன். அப்போது படப்பிடிப்பு முடிந்தவுடன் கேரவனில் ஒரு ரூமில் பிரேம்ஜியும், வெளியில் இருக்கும் இருக்கையில் நான் உட்கார்ந்து கணக்குபார்த்துக் கொண்டு இருந்தேன். அப்போது, திடீரென ஒரு சிலுமிஷ சவுண்டு கேட்டது. உடனே நான், பிரேம்ஜி மீது சந்தேகப்பட்டு, அவரின் அறைக்கு ஓடி கதவை வேகமாக தட்டினேன். அப்போது பிரேம்ஜி வெளியில் வந்து, உள்ளே யாரும் இல்லை. எனக்கும் அந்த சத்தம் கேட்டது என்றார். அப்போதும் பேச்சு சத்தம் கேட்டதும், நானும் பிரேம்ஜியும் கர்ட்டனை திறந்து பார்த்தபோது. மேனேஜர் ஒரு துணை நடிகையிடம் பேரம் பேசிக்கொண்டு இருக்கிறார். அதாவது, உனக்கு கம்மியான சம்பளம் தான், நான் பேசி தான், இந்த படத்தில் உனக்கு டபுள் சம்பளம் கொடுத்திருக்கிறேன். அது எல்லாம் அட்ஜஸ்ட்மென்ட் செய்வதற்குத்தான் தான் என்று சொன்னார்.

Sona Smoke interview

ஓங்கி அடித்தேன்: இதைக் கேட்டவுடன் எனக்கு பயங்கரமாக ஆத்திரம் வந்து, யார் வீட்டு காசுல யார் கூத்தடிப்பது என்று ஓங்கி ஒரு அரை விட்டேன். அதன் பின் பெப்சியிலிருந்து பிரச்சனை எல்லாம் வந்தது அது வேறு கதை. அப்போது பிரேம்ஜி தம்மடித்துக் கொண்டு இருந்தார். அப்போது அவர் கையில் இருந்து தம்மை வாங்கி நான் அடித்தேன். அதன் பிறகு,டென்ஷனானால் தம்மடிப்பதே பழக்கமாகி கடைசியில், அதற்கு அடிக்ட்டாகி விட்டேன். தினமும் எவ்வளவு தம் அடிக்கிறேன் என்று தெரியாத அளவிற்கு சென்றுவிட்டது. ஒரு கட்டத்திற்கு மேல் இது நல்லது இல்லை என்று எனக்கே தோன்றியதால், அதில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக முயற்சி செய்து, தம்மடிக்கும் பழக்கத்தில் இருந்து இப்போது முழுமையாக வெளியே வந்து விட்டேன்.

முன்பெல்லாம் புகை பிடிப்பது, மது அருந்துவது எல்லாம் தவறாக பார்த்தார்கள். சிலர் மன உளைச்சல் காரணமாகவோ, பிரச்சனைகள் காரணமாகவோ இந்த பழக்கத்திற்கு அடிமையாவார்கள். ஆனால், எப்போது டாஸ்மாக்கில் கூட பெண்கள் இருப்பதை பார்க்க முடிகிறது, இன்னும் சிலர் பேஷனுக்காக, ஸ்டைலுக்காக தம் அடிக்கிறார்கள். ஒரு முறை அந்த பழக்கத்திற்கு அடிமையாகி விட்டால், பின் அதில் இருந்து மீண்டே வரமுடியாது, தயவு செய்து புகைப்பிடிக்காதீர்கள் என்று சோனா அந்த பேட்டியில் பேசி இருக்கிறார்.

More from Filmibeat

Read more about: sona interview சோனா
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X