கவர்ச்சி எனக்கு ப்ளஸ்தான்... - இனியா
கவர்ச்சியாக நடிக்க ஆரம்பித்திருப்பது எனக்கு மைனஸ் அல்ல.. ப்ளஸ்தான் என்கிறார் நடிகை இனியா.
பாடகசாலை என்றொரு படம் வந்தது பலருக்கும் நினைவிருக்காது. அந்தப் படம்தான் இனியாவின் முதல் படம்.
ஆனால் அடுத்து வந்த வாகை சூட வாதான் இவரை அனைவருக்கும் சிறந்த நடிகையாக அனைவருக்கும் அடையாளம் காட்டியது.

தொடர்ந்து மவுனகுரு, அம்மாவின் கைப்பேசி போன்ற படங்களில் நடித்தவர், திடீரென ஒரு பேய்ப் படத்தில் பழைய நடிகர் ராம்கிக்கு ஜோடியானார். அத்துடன் வாய்ப்புகளை இழந்தார்.
ஆனால் இப்போது மீண்டும் வாய்ப்புகளைப் பெற்று வருகிறார். அதற்காக அவர் செய்த தியாகம் ஆடைக் குறைப்பு. குடும்பப் பாங்கினியாக நடித்து வந்தவர், இப்போது கும்மென்று போஸ் கொடுக்க ஆரம்பித்துள்ளார்.
இந்த கவர்ச்சிப் புரட்சி குறித்து அவர் கூறுகையில், "நடிகை என்ற சொல்லுக்குள் அத்தனையும் அடங்கிவிடுகிறது. கவர்ச்சி நடிகை என்று தனியாக ஒரு பிரிவில்லை.
உண்மையில் நான் கொஞ்சம் க்ளாமராக நடிக்க ஆரம்பித்த பிறகு தமிழ், தெலுங்கு, மலையாள படங்களில் வாய்ப்புகள் குவிகின்றன. கவர்ச்சி, காதல், ஆக்ஷன் எல்லாம் கலந்ததுதான் சினிமா.
தமிழில் மூன்று படங்களில் நடிக்க என்னிடம் பேசிக் கொண்டிருக்கிறார்கள். கவர்ச்சி கலந்த வேடங்கள்தான் அத்தனையும்," என்றார்.
தாராளமா கவர்ச்சி காட்டி ரசிகர்களை கிறங்கடிங்க...!


Click it and Unblock the Notifications











