சினிமாவுக்கு கிளாமர் அவசியம்தான்… சொல்கிறார் ஓவியா
சினிமாவில் இருந்து கிளாமரை பிரிக்க முடியாது... நடிகைகள் கிளாமராக நடித்தால்தான் சினிமாவில் நிலைக்க முடியும் என்று களவாணி படத்தில் அறிமுகமான ஓவியா கூறியுள்ளார்.
இன்றைய தமிழ் திரைப்படங்களில் கதாநாயகிகள் பெரும்பாலும் கவர்ச்சிக்காக மட்டுமே பயன்படுத்தப்படுகின்றனர் என்ற புகார் உள்ளது. நடிப்பை விட கவர்ச்சியான உடை, இரண்டு பாடல்களில் நடனமாடுவது, ஒரு குத்துப்பாட்டு என கதாநாயகிகள் வந்து போகின்றனர்.
இது உண்மைதான் சினிமாவில் கவர்ச்சியை தவிர்க்க முடியாது என்பதுபோல பேட்டி கொடுத்துள்ளார் நடிகை ஓவியா.

போட்டி அதிகமாயிருச்சே
இன்றைக்கு சினிமாவில் போட்டி அதிகரித்துவிட்டது. ஒவ்வொரு வாரமும் புதுமுக ஹீரோயின்கள் அறிமுகமாகிக் கொண்டிருக்கின்றனர். இந்த போட்டிக்கு ஈடுகொடுத்து நான் நிற்பது அதிர்ஷ்டம்தான். இது இப்படியே தொடரும் என்று நம்புகிறேன் என்கிறார் ஓவியா.

சினிமாவை தெரிந்து கொண்டேன்
ஆரம்ப காலத்தில் சினிமாவில் அறிமுகமானபோது நடிகைகளுக்கான ‘பேஷன்' என்ன என்பது எனக்கு தெரியாது. நடிகையானபின் அதுபற்றி தெரிந்து கொண்டேன்.

சவாலான கதாபாத்திரங்கள்
சற்குணம் இயக்கத்தில் ‘களவாணி' படத்தில் நடித்தபோது அந்த படம் ஓடும் என்று என்னால் கணிக்க முடியவில்லை. தியேட்டரில் ரசிகர்களுடன் அமர்ந்து பார்த்தபோதுதான் எப்படி ரசிக்கிறார்கள் என்பதை தெரிந்துகொண்டேன்.

காமெடிக்கு முக்கியத்துவம்
எனது படங்களில் காமெடியில் நான் சிறப்பாக நடிப்பதாக சொல்கிறார்கள். உண்மையில் அப்படி நடிப்பது கடினம். அதுபோல் சவாலான வேடங்களிலும் நடிக்க ஆசை.

கிளாமர் கண்டிப்பா தேவை
ஒரு நடிகையாக கிளாமர் என்பது தவிர்க்க முடியாததாகி விடுகிறது. சினிமாவில் அதுவும் ஒரு அங்கம். பல நடிகைகள் கிளாமர் வேடங்களில் நடிக்கிறார்கள் அவர்களில் ஒருத்தியாக நானும் இருக்கிறேன் என்றார் ஓவியா.
அப்போ தமிழ் சினிமாவில் ஓவியாவிற்கு ஒரு இடம் நிச்சயம் உண்டு.


Click it and Unblock the Notifications











