18 வயதில் 64வயது அமிதாப்புக்கு ஜோடியாக நடித்து பரபரப்பு கிளப்பிய ஜியா கான்!

By Shankar

மும்பை: மும்பையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட பிரபல பாலிவுட் நடிகை ஜியா கான் மிகக் குறுகிய காலத்திலேயே முன்னணி நடிகையாகிவிட்டார்.

இத்தனைக்கும் அவர் ஏகப்பட்ட படங்களில் நடிக்கவில்லை. மூன்றே படங்கள்தான். சில தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் மேடை நிகழ்ச்சிகளிலும் தோன்றியுள்ளார்.

ஒல்லிக்குச்சி உடம்புக்காரியாகத் தோன்றிய இந்த மகா செக்ஸியான நடிகைக்கு ஏனோ தொடர்ந்து வாய்ப்புகள் வரவில்லை.

நட்சத்திர தம்பதிகளின் மகள்

நட்சத்திர தம்பதிகளின் மகள்

ஜியா கான் பிறந்தது அமெரிக்காவின் நியூயார்க் நகரில். இவரது அப்பா அலி ரிஸ்வி கான், அமெரிக்காவில் செட்டிலான இந்தி நடிகர். அம்மா ரபியா அமீனும் இந்திப் பட நடிகைதான்.

16 வயதில்..

16 வயதில்..

அமெரிக்காவில் படித்துக் கொண்டிருந்த ஜியா கானுக்கு 16வயதான போதே இந்திப் பட வாய்ப்பு வந்தது. முகேஷ் பட்டின் தும்சா நஹி தேகா படத்தில் நாயகி வேடம். முதலில் நடிக்க ஒப்புக் கொண்டு மும்பை வந்த ஜியா கான், அந்த வேடம் தன் வயதுக்கு மீறியது எனக் கூறி பின் வாங்கினார்.

நிஷப்த்

நிஷப்த்

2007-ம் ஆண்டு தனது 18 வயதில் வயதிலேயே நடிக்க வந்து பிரபலமானவர் ஜியா கான். முதல்படத்திலேயே உச்சகட்ட கவர்ச்சியாகத் தோன்றி பரபரப்பு கிளப்பியவர்.

ராம் கோபால் வர்மாவின் நிஷப்த் படத்தில் அவர் ஹீரோயினாக அறிமுகமானார். அவருக்கு ஜோடி அமிதாப் பச்சன். இந்தப் படத்துக்காக சிறந்த அறிமுக நடிகைக்கான பிலிம்பேர் விருது பெற்றார்.

கஜினி

கஜினி

பின்னர் ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் அமீர் கான் நடித்த கஜினி இந்திப் படத்தில் இரு நாயகிகளில் ஒருவராக நடித்தார் (தமிழில் நயன்தாரா செய்த வேடம்). இந்தப் படத்திலும் அவருக்கு நல்ல பெயர் கிடைத்தது. நிறைய வாய்ப்புகள் வந்தன. ஆனால் ஜியா கான் ஏனோ அவற்றை ஒப்புக் கொள்ளவில்லை.

ஹவுஸ்ஃபுல்

ஹவுஸ்ஃபுல்

ஜியா கான் நடித்த கடைசி படம் அக்ஷய் குமாரின் ஹவுஸ்ஃபுல். 2010-ல் இந்தப் படம் வெளிவந்தது. அதன் பிறகு தனிப்பட்ட காரணங்களால் எந்தப் படத்தையும் அவர் ஒப்புக் கொள்ளாமல் இருந்தார்.

நஃபீஸா கான்

நஃபீஸா கான்

சமீபத்தில்தான் தன் பெயரை நஃபீஸா கான் என்று மாற்றிக் கொண்டார் ஜியா கான். தன் தாயாருடன் மும்பையில் அபார்ட்மென்டில் தங்கியிருந்தார்.

மீண்டும் நடிக்க பேச்சு

மீண்டும் நடிக்க பேச்சு

மீண்டும் சினிமாவில் முழு வீச்சில் நடிக்கும் திட்டத்துடன் தயாரிப்பாளர்கள் சிலரை சந்தித்துப் பேசி வந்தாராம் ஜியா கான். ஆனால் அவரது திடீர் மரணம் பாலிவுட்டை அதிரவைத்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X