GOAT ஜோடி.. நம்ம மகேஷ் பாபுவோட குண்டூர் காரமா?.. மயக்குறாரே மீனாக்ஷி சவுத்ரி!
ஹைதராபாத்: வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்து வரும் The Greatest of All Time படத்தில் இளம் விஜய்க்கு மீனாக்ஷி சவுத்ரி ஜோடியாக நடித்து வருகிறார் என்றும் வயதான விஜய்க்கு சினேகா ஜோடி என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்நிலையில், மகேஷ் பாபுவுடன் ஜோடி போட்டு குண்டூர் காரம் படத்தில் நடித்துள்ள மீனாக்ஷி சவுத்ரியின் செம மாஸான போஸ் தற்போது வெளியாகி இணையத்தில் தீயாக பரவி வருகிறது.
தளபதி 68 படத்திற்கு தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் என புத்தாண்டை முன்னிட்டு டைட்டில் அறிவிக்கப்பட்டு ஃபர்ஸ்ட் லுக் மற்றும் செகண்ட் லுக் போஸ்டர்கள் வெளியாகி விஜய் ரசிகர்களை குஷியில் ஆழ்த்தியது. ஜோதிகா, பிரியங்கா மோகன் தான் இந்த படத்தில் விஜய்க்கு ஜோடி என முதலில் தகவல்கள் வெளியான நிலையில், படத்தின் பூஜையின் போது சினேகா, லைலா மற்றும் டோலிவுட் நடிகை மீனாக்ஷி சவுத்ரி உள்ளிட்ட நடிகைகள் இணைந்துள்ள அறிவிப்பு அதிகாரப்பூர்வமாக வெளியானது.

GOAT ஜோடி: தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை மீனாக்ஷி சவுத்ரி நடித்து வருகிறார். பல் மருத்துவ படிப்பை படித்து வந்த இவர் 2018ம் ஆண்டு ஃபெமினா மிஸ் இந்தியா பட்டம் பெற்றார். இச்சட்டா வாஹனமுலு நில்லுபருடா படத்தின் மூலம் 2021ல் தான் தெலுங்கில் ஹீரோயினாக அறிமுகமானார். 2022ல் கில்லாடி மற்றும் ஹிட் தி செகண்ட் கேஸ் உள்ளிட்ட படங்களில் நடித்த மீனாக்ஷி தமிழில் விஜய் ஆண்டனியின் கொலை படத்தில் நடித்து அறிமுகமானார்.
குண்டூர் காரம் ஹீரோயின்: ஆர்.ஜே. பாலாஜியின் சிங்கப்பூர் சலூன் படத்திலும் இவர் நடித்து வருகிறார். மகேஷ் பாபுவின் குண்டூர் காரம் படத்தில் பூஜா ஹெக்டே நீக்கப்பட்ட நிலையில், அவருக்கு பதில் மீனாக்ஷி சவுத்ரி தான் சேர்ந்து நடித்து வருகிறார். மீனாக்ஷி சவுத்ரி மற்றும் ஸ்ரீலீலா என இரு நடிகைகள் குண்டூர் காரம் படத்தில் நடித்து வருகின்றனர்.

மகேஷ் பாபுவுடன் மாஸ் போஸ்: தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படத்தில் இருந்து இதுவரை மீனாக்ஷி சவுத்ரியின் லுக் எதுவும் ரிலீஸ் ஆகவில்லை. இந்நிலையில், குண்டூர் காரம் படத்தில் மகேஷ் பாபுவுடன் இணைந்து அவர் கொடுத்துள்ள மாஸ் போஸ் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி இணையத்தில் தீயாக பரவி வருகிறது. சமீபத்தில் ஸ்ரீலீலாவுடன் மகேஷ் பாபு ஆட்டம் போட்ட ஒரு லிரிக் வீடியோ வெளியான நிலையில், அடுத்த ஆட்டம் இவருடன் தான் என ரசிகர்கள் பதிவிட்டு வருகின்றனர்.
பொங்கல் ரிலீஸ்: இந்த பொங்கலுக்கு தமிழில் கேப்டன் மில்லர், அயலான், மெரி கிறிஸ்துமஸ் மற்றும் மிஷன் உள்ளிட்ட படங்கள் வெளியாகின்றன. அதே நேரம் தெலுங்கில் மகர சங்கராந்தி பண்டிகையை முன்னிட்டு மகேஷ் பாபுவின் குண்டூர் காரம் படம் வெளியாகிறது. அந்த படத்தில் ராஜி எனும் கதாபாத்திரத்தில் மீனாக்ஷி சவுத்ரி நடித்துள்ளார். மேலும், ஹனுமன் படமும் போட்டியாக ரிலீஸ் ஆகிறது குறிப்பிடத்தக்கது. மீனாக்ஷி சவுத்ரியை பார்க்கவே தளபதி விஜய் ரசிகர்கள் குண்டூர் காரம் படத்தை பார்ப்பார்கள் என தெரிகிறது.


Click it and Unblock the Notifications











