Sneha: 42 வயசுனு சொன்னா யாரும் நம்ப மாட்டாங்க… நடிகை சினேகாவின் கலக்கல் போட்டோஸ்!
சென்னை: புன்னகை அரசி சினேகா தமிழ்,தெலுங்கு, மலையாளம் என பல மொழிப்படங்களில் நடித்துள்ளார். பல முன்னணி நடிகர்களுடன் நடித்து டாப் நடிகை என்று பெயர் எடுத்த நடிகை சினேகா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அட்டகாசமாக இருக்கும் போட்டோவை ஷேர் செய்துள்ளார். அந்த போட்டோவை பார்த்த நெட்டிசன்ஸ் லைக்குகளை குவித்து வருகின்றனர்.

விளக்கி வைத்த குத்து விளக்குப்போல பளிச்சென்று இருக்கும் நடிகை சினேகா தனது அழகான சிரிப்பால் தமிழக ரசிகர்களை வளைத்துப்போட்டார். சினேகாவுக்கு மார்டன் உடையைவிட புடவையும், தாவணியும் அம்சமாக பொருந்தி இருந்ததால், பல படங்களில் புடவை, தாவணி அணிந்தே ரசிகர்களை வசியம் செய்தார். இவர் நடித்த வசீகரா, ஆட்டோகிராப், புதுப்பேட்டை, நான் அவன் இல்லை, பள்ளிக்கூடம் போன்ற படங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் இவருக்கு என்று தனி இடத்தை பெற்றார். புதுப்பேட்டை படத்தில் விலை மாதுவாக நடித்த போது, அதில் எந்த ஆபாசமும் காட்டாமல் தனது கதாபாத்திரத்தை சிறப்பாக செய்து பெயர் எடுத்தார்.

காதல் திருமணம்: தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னட படங்களில் நடித்து வந்த சினேகா, அச்சமுண்டு அச்சமுண்டு திரைப்படத்தில் பிரசன்னாவுடன் இணைந்து நடித்த போது இருவருக்கும் நட்பு ஏற்பட்டு பின்னாளில் அது காதலாக மாறியது. இதையடுத்து 2011ம் ஆண்டு இருவரும் பெற்றோரின் சம்மதத்துடன் திருமணம் செய்துக் கொண்டனர். தற்போது இவர்களுக்கு ஒரு மகனும், மகளும் இருக்கிறார்கள். தற்போது சின்னத்திரை நிகழ்ச்சியில் நடுவராக வலம் வருகிறார்.

23 ஆண்டுக்கு பிறகு விஜயுடன்: நடிகை சினேகா 23 ஆண்டுகளுக்கு பிறகு இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்து வரும் GOAT படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் விஜய் இரண்டு விதமான கதாபாத்திரத்தில் நடித்து வரும் நிலையில், அதில் ஒரு விஜய்க்கு ஜோடியாக நடிகை சினேகா நடித்துள்ளார். ஏற்கனவே இருவரும் ஜோடியாக வசீகரா படத்தில் நடித்திருப்பார்கள். இந்த படம் அப்போதே நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தில், லைலா, மீனாட்சி சவுத்ரி, மைக் மோகன், பிரசாந்த், பிரபுதேவா, பிரேம்ஜி உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.

யாரும் நம்ப மாட்டாங்க: இணையத்தில் படுஆக்டிவாக இருக்கும் நடிகை சினேகா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆரஞ்சு நிற புடவையில் இருக்கும் போட்டோவை ஷேர் செய்துள்ளார். அந்த புடவைக்கு மேட்சாக ஜாக்கெட் மற்றும் கம்மல், வளையல் அணிந்து கொண்டு சும்மா சிக்குனு இருக்கிறார். அந்த போட்டோவை பார்த்த நெட்டிசன்ஸ் உங்களுக்கு 42 வயசுனு சொன்னா யாருமே நம்ப மாட்டாங்க என்று கருத்துக்களை பகிர்ந்து கமெண்ட் பாக்சை நிரப்பி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











