GOAT படத்தில் விஜய்க்கு மகளாக நடித்தது யாரு தெரியுமா?.. இப்படி மீம் போட்டு மொக்கை பண்றாங்களேப்பா!
சென்னை: வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்துள்ள கோட் படத்தில் கிளைமேக்ஸ் காட்சியில் தல அஜித் குமாரை பிடிக்கும் என சொல்லி மங்காத்தா பிஜிஎம் போட தரமான சம்பவத்தை செய்யும் அபியுக்தாவை தற்போது சோஷியல் மீடியாவில் நெட்டிசன்கள் வறுத்தெடுத்து வருகின்றனர்.
யார் இந்த அபியுக்தா? விஜய்யின் ரீல் மகளாக கோட் படத்தில் நடிக்க எப்படி இவருக்கு வாய்ப்பு கிடைத்தது என்றெல்லாம் ரசிகர்கள் அலசி ஆராய்ச்சி செய்து வருகின்றனர். அபியுக்தாவின் இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் திடீரென தளபதி ரசிகர்கள் ஃபாலோயர்களாக இணைந்து வருவதையும் காண முடிகிறது.

கோட் படத்தின் கிளைமேக்ஸில் தல அஜித் குமாரை தான் தனக்கு பிடிக்கும் என அபியுக்தா சொன்னாலும், உண்மையாகவே அவருக்கு எந்த நடிகரை பிடிக்கும் என்பது குறித்தும் சமீபத்திய பேட்டியில் கூறியிருக்கிறார்.
யாரு இந்த அபியுக்தா?: பிரபல ஒளிப்பதிவாளர் மணிகண்டனின் மகள் தான் இந்த அபியுக்தா. 16 வயதாகும் இவர் மாடலிங்கில் ஆர்வம் செலுத்தி வருகிறார். பரத நாட்டியத்திலும் தேர்ச்சி பெற்ற இவர் சினிமாவில் நடிக்க முயற்சி செய்து வந்த நிலையில், வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவான கோட் படத்தில் விஜய்க்கு மகளாகவே நடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது.

தல? தளபதி?: தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படத்தின் கிளைமேக்ஸில் ஜீவன் தனது தங்கையை கொல்ல முனைவார். காந்தி விஜய் தனது மகளிடம் உனக்கு ரொம்ப பிடிச்ச நடிகர் யாரு எனக் கேட்க, தல என சொல்லிவிட்டு ஜீவனை தனது தலையிலேயே அடித்து விட்டு நகர, காந்தி விஜய் மகனை சுட்டுக் கொன்று விடுவது போல படமாக்கப்பட்டு இருக்கும். இந்நிலையில், சமீபத்தில் அளித்த பேட்டியில் அபியுக்தாவிடம் நிஜமாகவே உங்களுக்கு அஜித் குமாரை பிடிக்குமா? அல்லது விஜய்யை பிடிக்குமா? என்கிற கேள்வி எழுப்பப்பட்ட நிலையில், தளபதி தான் என டக்குன்னு சொல்லி விட்டார். அந்த பேட்டிக்குப் பிறகு அபியுக்தாவை அஜித் ரசிகர்கள் ட்ரோல் செய்ய ஆரம்பித்து விட்டனர்.

ஃபிரெண்டு செத்துட்டா உனக்கு மேட்ச் கேட்குதா?: வெட்கமா இல்லை.. ஃபிரெண்டு செத்துருக்கா, ஐபிஎல் மேட்ச் பார்க்க போயிருக்க என ரசிகர்கள் மீம் போட்டு அபியுக்தாவை ட்ரோல் செய்து வருகின்றனர். மீனாட்சி சவுத்ரி உயிரிழந்த அடுத்த நாளே அபியுக்தா மேட்ச் பார்க்க செல்லவில்லை என்றும் சில நாட்கள் ஆகிவிட்டன என அபியின் ஃபேன்ஸ் சப்போர்ட் செய்து வருகின்றனர்.
கிளாமர் டால்: அபியுக்தாவின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஏகப்பட்ட கவர்ச்சி புகைப்படங்கள் அணிவகுத்து காணப்படுகின்றன. ஜாக்கெட் அணியாமல் சேலையை அணிந்துக் கொண்டு போஸ் கொடுப்பது, குட்டி டிரெஸ்ஸில் ஓவர் கிளாமரில் அனலை கிளப்புவது என அட்டகாசம் செய்து ஏகப்பட்ட இளைஞர்களை கவர்ந்து வருகிறார் அபியுக்தா.

வாய்ப்புகள் குவியும்: தளபதி விஜய்யின் கோட் படத்தில் அவருக்கு ரீல் மகளாக அபியுக்தா செம க்யூட்டாக நடித்த நிலையில், அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவியும் என எதிர்பார்க்கப்படுகிறது. சீக்கிரமே ஹீரோயினாகவும் நடிக்க முயற்சித்து வருகிறார் அபியுக்தா என்றும் கூறுகின்றனர். அனிகா சுரேந்திரன், எஸ்தர் அனில் வரிசையில் தமிழ் சினிமாவில் இவரும் கலக்குவாரா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.


Click it and Unblock the Notifications











