என்ன அகந்தை, என்ன திமிர்: சந்தோஷமாக ட்வீட்டிய ஓவியாவை திட்டும் நெட்டிசன்ஸ்
Recommended Video
சென்னை:ஓவியா சந்தோஷமாக இருக்கும் நேரத்தில் நெட்டிசன்கள் அவரை விமர்சிக்கிறார்கள்.
பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் கண்டமேனிக்கு பிரபலமானவர் என்றால் அது நடிகை ஓவியா தான். அவர் அளவுக்கு வேறு யாருக்கும் பிக் பாஸ் நிகழ்ச்சி ஒர்க்அவுட் ஆகவில்லை என்றே கூற வேண்டும்.

பிக் பாஸ் போட்டியாளருக்கு ட்விட்டரில் ஆர்மி துவங்குவது எல்லாம் ஓவியாவிடம் இருந்து தான் துவங்கியது. பிக் பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசனில் கலந்து கொண்ட ஓவியாவுக்காக ட்விட்டரில் துவங்கப்பட்ட ஆர்மி இன்னும் ஆக்டிவாக உள்ளது. பிக் பாஸ் வீட்டில் இருந்தபோது அவர் பேசியது இன்று வரை பிரபலம். நீங்க ஷட்அப் பண்ணுங்க என்று ஓவியா கூறியதை இந்த சீசனில் கூட பயன்படுத்தி உள்ளனர்.
இந்நிலையில் ட்விட்டரில் ஓவியாவை பின்தொடர்வோரின் எண்ணிக்கை 5 லட்சத்தை தொட்டுள்ளது. இந்த சாதனை சாத்தியமாக பிக் பாஸ் நிகழ்ச்சி பெரிய அளவில் உதவியது என்றால் அதில் தவறு இல்லை. தன்னை 5 லட்சம் பேர் பின்தொடர்வதை பார்த்த ஓவியா மகிழ்ச்சியுடன் ட்வீட் செய்தார்.
அந்த ட்வீட்டை பார்க்க அவரின் ட்விட்டர் கணக்கிற்கு சென்றவர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. காரணம், கடவுள் சிறந்தவர் ஏனென்றால் நான் தான் கடவுள் என்று தன் பெயருக்கு கீழ் வாசகம் எழுதி வைத்துள்ளார் ஓவியா.
பிக் பாஸ் வீட்டில் இருந்தபோது அவர் தனக்கு தோன்றியதை செய்ததை பார்த்த சிலர் அவர் திமிராக நடப்பதாக கூறினார்கள். இந்நிலையில் அவர் ட்விட்டரில் எழுதி வைத்துள்ள வாசகத்தை பார்த்து இது எல்லாம் திருந்தாத ஜென்மம், தேவையில்லாமல் தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடுகிறார்கள். கடவுள் மூஞ்சியை பாரு என்று திட்டுகிறார்கள்.
ஓவியா ரசிகர்களோ, உங்களுக்கு என்னாச்சு, ஏன் இப்படி எல்லாம் எழுதியுள்ளீர்கள் என்று கேட்டுள்ளனர். சில ரசிகர்களோ, வழக்கம் போன்று நீங்க ரொம்ப அழகு, உங்க சிரிப்பு சூப்பர், ஒரு ஹாய் சொல்லுங்க, லைவ் சாட்டுக்கு வாங்க, உங்களுடன் சேர்ந்து செல்ஃபி எடுக்க வேண்டும், என்னை திருமணம் செய்து கொள்கிறீர்களா என்று கேட்டுள்ளனர்.


Click it and Unblock the Notifications











